அரசியை பற்றி அடுக்கடுக்காக வெளிப்படும் உண்மைகள், அதிர்ச்சியில் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் செந்தில், அரசி கல்யாண வரை நீங்கள் செய்தது எல்லாமே தவறுதான். நீங்கள் என்னைக்குமே எங்களுக்கு நல்ல அப்பாவாக இருந்ததில்லை. உங்களுடைய விருப்பம் தான் நடக்கணும் என்று நினைக்கிறீர்கள் என தன் மனதில் இருந்த ஆதங்கம் மொத்தத்தையும் கொட்டி விட்டார். இதனால் மனமுடைந்த பாண்டியன் எதுவுமே பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார். கோமதி கோபத்தில் செந்திலையும் வீட்டில் உள்ள எல்லோரையும் திட்டிக் கொண்டிருந்தார். தங்கமயில், சரவணன் எல்லோருமே சமாதானம் செய்தும் கோமதி கேட்கவில்லை. மீனா, கோமதியை சமாதானம் செய்யப் பார்த்தார்.
அப்போது கோபத்தில் கோமதி, மீனாவை திட்டி கீழே தள்ளி விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு பாண்டியன் சரக்கு அடித்து விட்டு வந்தார். போதையில் நிலை தெரியாமல் பாண்டியன் தடுமாறி நடந்தார். பின் பாண்டியன் வீட்டில் எல்லோரையும் நிற்க சொல்லி தன் சின்ன வயதில் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொல்லி கலங்கி இருந்தார். இதையெல்லாம் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே அழுதார்கள். செந்திலும் தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்க போனார். உடனே கதிர், தடுத்து நிறுத்தி விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் குமார் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக பழகிருப்பதை கதிர், மீனா, அரசியின் அக்கா மூவருமே பார்த்து விட்டார்கள். இதனால் கோபப்பட்ட கதிர் வீட்டிற்கு வந்த குமாரிடம் சண்டை வாங்கினார். குமார் தெனாவட்டாக பதில் சொன்னார். இதனால் குமார், கதிரிடையே சண்டை அதிகமானது. இதனால் இரு வீட்டில் உள்ள இரு வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விட்டார்கள். அப்போது குமார், நான் யார் கூட வேண்டுமானாலும் சுத்துவேன். அதைக் கேட்க நீங்கள் யார்? என்று சொன்னார். இதனால் கோபப்பட்டு கதிர் மீண்டும் குமாரை அடிக்க, தன் மகன் செய்தது தவறு என்று கூட பார்க்காமல் சக்திவேல் பாண்டியனையும் பாண்டியன் குடும்பத்தையும் தான் தவறாக பேசி இருந்தார். பின் கதிர் கல் எடுத்து குமாரும் மீது போடப் போனார்.
நேற்று எபிசோட்:
உடனே அரசி தடுத்து நிறுத்தி அவனுக்காக நீங்கள் ஏன் ஜெயிலுக்கு போகணும். அவன் யாரோ என்று சொன்னார். இதைக் கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆனது. அதற்கு பின் அரசி, எனக்கும் அவனுக்கும் கல்யாணமே ஆகவில்லை. தன்னுடைய குடும்பத்தை அசிங்கப்படுத்த இவன் கல்யாணத்துக்கு முன்னால் எனக்கு கடத்தி சென்று விட்டான். இவனால் என்னுடைய குடும்பம் அசிங்கப்படக்கூடாது என்று தான் நான் என்னுடைய கழுத்தில் தாலி கட்டிக் கொண்டேன். மற்றபடி எனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆகவில்லை என்று சொல்வதைக் கேட்டு ரெண்டு குடும்பமே ஷாக் ஆகி நிற்கிறது. உடனே அப்பத்தா, அரசியை வீட்டிற்குள் அழைத்து சென்று விட்டார். என்ன சொல்வதென்று புரியாமல் பாண்டியன் குடும்பம் அப்படியே வெளியில் நின்றார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அப்பத்தா, உண்மையாலுமே உங்கள் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லையா? என்று கேட்கிறார். அதற்கு அரசி, நான் சொன்னது தான் உண்மை. என் குடும்பத்தை அசிங்கப்படுத்த நினைத்து தான் என்னை கல்யாணத்திற்கு முன் கடத்தி சென்று அடுத்த நாள் கொண்டு வந்து விட்டார். எனக்கு திருமணம் நடக்கவில்லை என்றாலும் கவலை இல்லை. ஆனால், என்னுடைய அப்பா- அம்மா அசிங்கப்படக்கூடாது என்று தான் நானும் என் வாழ்க்கையும் அழித்துக் கொண்டு இவனும் நிம்மதி இல்லாமல் இருக்கத்தான் எனக்கு நானே தாலி கட்டிக் கொண்டு வந்தேன் என்று சொல்கிறார். பின் குமார், அரசி சொல்வது உண்மை என்கிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே கோபப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் வீட்டில் உள்ள எல்லாருமே கோபப்படுகிறார்கள். அதற்கு பின் அப்பத்தா இருவரையும் திருமணம் செய்து வைக்கலாம் என்று சொல்கிறார். இதை கேட்ட சுகன்யா, வீட்டில் வந்து எல்லோரிடமும் சொல்கிறார். கதிர், இனிமேல் என்னுடைய தங்கை அங்கு இருக்கக்கூடாது என்று ஆவேசப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். அப்போது அரசி செய்த வேலையைப் பற்றி கோமதி சொல்கிறார். உடனே மீனா, அதெல்லாம் அரசி சொன்னது தான் உண்மை. இந்த விஷயம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும். அரசியிடம் நாங்கள் கேட்டு தெரிந்து கொண்டோம் என்று உடன் மொத்த பேருமே சாக் ஆகிறார்கள். உடனே கோமதி, குமார் ஏற்கனவே பிரச்சினை செய்யும் போதே நான் சுதாரித்து இருக்கணும் என்று சொல்கிறார். பின் கதிர்- செந்தில் இருவருமே குமார், அரசியை கடத்தி செல்ல வந்த விஷயத்தை சொல்கிறார். இதை எல்லாம் கேட்டு பாண்டியனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.