அரசி காதலிக்கும் விஷயம் அறிந்து அதிர்ச்சியான மொத்த குடும்பம், பாண்டியனுக்கு ஏற்பட்ட விபரீதம்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 17/3/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் அரசி, ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது என்று வீட்டில் சொல்லி வெளியே கிளம்ப பார்த்தார். உடனே கோமதி, உனக்கு எப்போதுமே சனிக்கிழமை காலேஜ் இருக்காதே, இப்ப எங்க போகிறாய்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். அப்போது பாண்டியன், நம்ம பொண்ணு பொய் சொல்ல போறாளா? என்று அரசிக்கு சப்போர்ட் செய்தார். அதற்குப்பின் அரசி கிளம்பிய உடன் சுகன்யாவும் வீட்டிற்கு செல்வதாக சொல்லி இருவருமே தியேட்டருக்கு சென்றார்கள். அங்கு குமாரை பார்த்தவுடன் அரசி பயமாக இருக்கிறது என்று புலம்பி இருந்தார்.

உடனே சுகன்யா, உங்கள் இருவருக்கும் மத்தியில் நான் எதற்கு என்று கிளம்பி விட்டார். குமார்-அரசி இருவரும் தியேட்டருக்குள் சென்றார்கள். பின் பழனியின் அண்ணன் வீட்டிற்கு சென்ற சுகன்யா, இவரை கல்யாணம் செய்து கொண்டு நான் ரொம்பவே கஷ்டப்படுகிறேன். கையில் காசு கூட இல்லை என்று ரொம்ப ஏளனமாக பழனியை பேசி இருந்தார். உடனே ராஜியின் அம்மா, சேர வேண்டிய நேரத்தில் எல்லோருக்கும் சொத்து பிரித்து கொடுப்பார்கள். நீ அதை பற்றி எல்லாம் யோசிக்காதே என்று கோவமாக பேசி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

கடைக்கு வந்த பாண்டியனின் அக்கா கணவர், என் மகனுக்கு அரசியை கல்யாணம் செய்து வைப்பது விஷயமாக பேச வந்திருக்கிறேன். உங்களுக்கு சம்மதமா? என்று கேட்டார். உடனே பாண்டியன், எனக்கு கல்யாணத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அரசி படிக்க ஆசைப்படுகிறாள். அவள் நிறைய படிக்கணும். அவள் படித்து பெரிய வேலைக்கு போகணும் என்பது தான் என்னோட கனவோடு பேசி இருந்தார். இன்னொரு பக்கம் அரசி, குமாருடன் படம் பார்த்துவிட்டு தியேட்டரில் வெளியே நின்று போட்டு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சரவணன், அரசி- குமார் சேர்ந்திருப்பதை பார்த்து கோபத்தில் பொங்கி எழுந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:

பின் சரவணன், குமாரின் சட்டையை பிடித்து சண்டை போட்டார். அரசி, என்ன சொல்வது என்று புரியாமல் கதறி அழுதார். குமார், நானும் அரசியும் காதலிக்கிறோம் என்றவுடன் கோபம் தாங்க முடியாமல் சரவணன் குமாரை அடித்தார். தியேட்டர் முன்பு கலவரமே வெடிக்கிறது. அதற்கு பின் சரவணன், அரசியை அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது வரும் வழியில் செந்திலுக்கு போன் செய்து அப்பாவை உடனடியாக வீட்டிற்கு அழைத்து வா என்று சரவணன் சொன்னார். பின் ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சரவணன், என்ன வேலை செய்திருக்கிறாய்? இதுதான் நீ படிக்க போகும் லட்சணமா? என்று ஆவேசப்பட்டு கத்தி இருந்தார்

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன் எல்லோருக்கும் போன் செய்து வீட்டிற்கு வர வைக்கிறார். பின் வீட்டில் எல்லோருமே என்ன பிரச்சனை? எதற்காக வரவைத்தான்? என்று புரியாமல் குழம்பி போயிருக்கிறார்கள். அப்போது சரவணன், அரசியை அழைத்து வந்தவுடன் எல்லோருமே, என்ன ஆனது? என்ன பிரச்சனை? என்று கேட்கிறார்கள். உடனே சரவணன், அரசி ஒருவரை காதலிக்கிறார். தியேட்டரில் அவர் காதலருடன் கைகோர்த்து சிரித்து பேசி வருகிறான் என்றவுடன் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

கோபத்தில் கோமதி, சரவணன் அடிக்கிறார். சரவணன், நான் சொல்வது தான் உண்மை. அவள் காதலிப்பது வேறு யாரும் இல்லை குமரவேல் என்று சொன்னவுடன் எல்லோக்கும் மீண்டும் பேரதிர்ச்சி ஆக இருக்கிறது. பாண்டியனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. செந்தில், கதிர், பழனி எல்லோருமே அரசியை பயங்கரமாக திட்டுகிறார்கள். பின் அரசி, பாண்டியனிடம் மன்னிப்பு கேட்கிறார். என்ன சொல்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் பாண்டியன் மயங்கி விழுகிறார். மொத்த குடும்பமே பதறி போகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full