தன் மகன்களின் ஆசையை நிறைவேற்றும் பாண்டியன், மீனா சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 19/9/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மாப்பிள்ளை வீட்டில் அரசிக்கு திருமணத்தில் விருப்பமில்லாத விஷயத்தை சொன்னார். சதீஷ் அம்மா எவ்வளவு எடுத்துச் சொன்னார்கள் சதீஸ் அம்மா எவ்வளவோ எடுத்து சொல்லியும் பாண்டியன் ஒத்துக்கொள்ளவில்லை. சதீஷும் அவருடைய அம்மாவும் அங்கிருந்து கிளம்பினார்கள். பின் அரசி தன்னுடைய அப்பாவிடம் நன்றி சொல்லி சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் அரசி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாத விஷயத்தைப் பற்றி சுகன்யா, குமார் வீட்டில் சொன்னவுடன் குமார் மனதுக்குள் சந்தோஷப்பட்டார்.

நேற்று எபிசோட்டில் பாண்டியன் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து சொத்தை விற்கும் விஷயத்தைப் பற்றி பேசினார். செந்தில்- கதிர் இருவருமே பணம் வேண்டாம் என்றார்கள். பாண்டியன், இருவரையும் திட்டிவிட்டு செந்தில் லோனுக்கு, கதிர் டிராவல்ஸ் ஆரம்பிப்பதற்கு பணத்தை தருவதாக சொல்லிவிட்டு கிளம்பினார். இது எல்லாம் கேட்ட தங்கமயில் பயங்கரமாக கோவப்பட்டார். பின் ரூமில் தங்கமயில் சொத்தில் பங்கு தராததை பற்றி சரவணனிடம் கேட்டு சண்டை வாங்கினார். தன் மாமனார் செய்யும் வேலை பிடிக்கவில்லை என்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதனால் கோபப்பட்ட சரவணன், நீயும் உன் குடும்பமும் செய்த வேலை எல்லாம் நான் வீட்டில் சொல்லட்டுமா? இன்னைக்கு பஞ்சாயத்து வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்வதால் தங்கமயில் எதுவும் சொல்லாமல் அமைதியானார். அடுத்த நாள் காலையில் பாண்டியன் வீட்டிற்கு மீனா அப்பா- அம்மா வந்தார்கள். அப்போது பாண்டியன், மீனா செந்திலுக்காக பணம் கொடுத்து உதவி செய்ததை பற்றி ரொம்ப பெருமையாக பேசினார். உடனே மீனாவின் அப்பா, நக்கலாக பாண்டியனை குடும்பத்தை பேசினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், லோன் போட்டு தந்த பத்து லட்சம் ரூபாய் செக்கை மீனாவிடம் கொடுக்கிறார். இதை பார்த்து மீனாவின் அப்பா, அம்மா எதுவும் சொல்லவில்லை. செந்தில் அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் கதிரை அழைத்து டிராவல்ஸ் ஆரம்பிக்க பாண்டியன் பணம் கொடுக்கிறார். இதை எல்லாம் பார்த்து தங்கமயிலுக்கு கடுப்பாகிறது. அதற்குப்பின் ராஜி- கதிர் இருவருமே டிராவல்ஸ் ஆரம்பிக்க இடத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சரவணன், தனக்கு தெரிந்த இடத்தை காண்பிக்கிறார். அதைப் பார்த்த உடனே ராஜி-கதிர் இருவருக்குமே பிடித்து போனது.

சீரியல் ட்ராக்:

பின் டிராவல்ஸ் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்கிறார்கள். பின் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கதிர் ஸ்வீட் கொடுத்து டிராவல்ஸ் ஆரம்பிக்கும் விஷயத்தைப் பற்றி சொல்கிறார். அதை கேட்டு கோமதி- பாண்டியன் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் செந்தில், என்னுடைய அப்பா பணத்தை திருப்பி கொடுத்ததற்கு செலிப்ரேட் பண்ணலாம் என்று சொல்கிறார். உடனே மீனா, பணத்தை கொடுக்கும் போது மாமா அதற்கு பதில் நிலத்தை வாங்கணும் என்று சொன்னாரே, அது நினைவில் இருக்கிறதா. சொந்தமாக நிலம் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று சொல்கிறார். அதற்கு பின் அரசியை மீண்டும் கல்லூரிக்கு கொண்டு சென்று விடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full