தன் மகனுக்காக பாண்டியன் செய்த வேலை, சந்தோஷத்தில் கதிர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 26/7/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சரவணன், அரசியை அழைத்துக் கொண்டு மளிகை கடைக்கு போனார். அங்கு அரசியை உட்கார வைத்து கொஞ்சம் கலகலப்பாக பேசினார். அதற்குப்பின் சரவணன், அரசி இருவரும் செந்தில் வேலை செய்யும் இடத்திற்கு போனார்கள். அங்கு செந்தில் வேலை செய்வதை பார்த்து அரசி ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதற்குப்பின்அந்த இடத்திற்க்கு கதிர் வந்தார் உடனே நான்கு பேருமே சேர்ந்து வெளியே ஜாலியாக ஊர் சுற்றினார்கள். பின் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இதனால் அரசி மனமும் கொஞ்சம் மாறுகிறது.

அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், கோமதி இடம் கதிர் புதிதாக பிசினஸ் செய்வதை பற்றி பேசி இருந்தார். அதற்கு ராஜி, டிராவல்ஸ் தொடங்கப் போனார். பணத்திற்காக லோன் போட்டு இருக்கிறோம். ஆனால், அவர்கள் கேரண்டி கேட்கிறார்கள் என்று நடந்ததை எல்லாவற்றையும் சொன்னார். உடனே கதிர், எதுவாக இருந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன். யாரும் எதுவும் செய்ய வேண்டாம் என்று திமிராகப் பேசி இருந்தார். பாண்டியன், கதிரை திட்டிவிட்டு நாளைக்கு பேங்குக்கு நான் வருகிறேன் என்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் அரசியுடன் சேர்ந்து வெளியில் சென்றதைப் பற்றி சரவணன், கதிர், செந்தில் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் தங்கமயில் தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து வீட்டில் நடக்கும் விஷயங்களை எல்லாம் சொன்னார். குறிப்பாக, கதிருக்கு பாண்டியன் லோன் வாங்கி தரும் விஷயத்தை சொன்னார். இதனால் கோபப்பட்ட தங்கமயில் அம்மா, எப்படியாவது உன் கணவனை கைக்குள் போடு. உன்னுடைய புருஷனுக்குமே நல்ல வேலை வாங்கி கொடு என்று தேவையில்லாத ஐடியா எல்லாம் கொடுத்தார். அதற்குப்பின் சரவணனிடம் தங்கமயில், கதிர் லோன் விஷயத்தைப் பற்றி சொன்னார்.

நேற்று எபிசோட்:

இதனால் கோபப்பட்ட சரவணன், இதில் உனக்கு என்ன பிரச்சனை. யாரிடமும் என் அப்பா கேட்க தேவையில்லை. இதெல்லாம் உன்னுடைய அம்மா கொடுத்த ஐடியாவா? என்றெல்லாம் திட்டினார். தங்கமயிலால் எதுவும் பேசமுடியவில்லை. தேவை இல்லாமல் வாய் கொடுத்து மாட்டிக்கொண்டார்.
மறுநாள் காலையில் செந்தில் வேலைக்கு கிளம்புவதற்காக அலப்பறை செய்து கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து பாண்டியனுக்கு கடுப்பானது. அதற்கு பின் கதிரை அழைத்த பாண்டியன், லோன் வாங்க பேங்க்கு போகலாம் என்றார். உடனே கதிர், அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்வதால் பாண்டியன் கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், நான் சொல்வதை மட்டும் செய். ஒழுங்கு மரியாதையாக பேங்குக்கு கிளம்பு என்று சொல்கிறார். இதனால் கதிர் எதுவும் பேசாமல் பேங்குக்கு கிளம்புகிறார். இன்னொரு பக்கம் ராஜி - மீனா இருவரும் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாகத்தான் குமாரின் அம்மா, உன்னால் தான் இந்த பிரச்சனை. காரணம், நீ கல்யாணத்திற்கு முந்தய நாள் ஓடிப்போனதால் தான் இவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருக்கின்றது என்று உண்மை புரியாமல் ராஜியை திட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் மீனாவிடம் ராஜி, நடந்த உண்மை எல்லாம் சொன்னால் இந்த பிரச்சனை முடிந்து விடுமா? என்றெல்லாம் புலம்புகிறார். அதற்கு மீனா வேண்டாம் என்று தடுக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் வரும் வழியில் பாண்டியனை பார்த்து சக்திவேல், என் மகனை ஜெயிலுக்கு அனுப்பி விட்டாய் என்று சந்தோசப்படாதே, உன்னையும் உன் குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன் என்றெல்லாம் சவால் விடுகிறார். இதை பார்த்த கதிர், சக்திவேலை அடிக்கப் போகிறார். பாண்டியன் தடுத்து நிறுத்தி, பிள்ளைகளை எப்படி வளர்க்கணும் என்று என்னை பார்த்து கற்றுக்கொள் என்று என்று திட்டிவிட்டு அங்கிருந்து செல்கிறார். அதற்குப்பின் பேங்கில் கதிருக்கு லோன் சம்பந்தமாக பாண்டியன் பேசுகிறார். அப்போது அவர்கள், என்னென்ன தேவை என்று எல்லா விஷயத்தையும் சொல்கிறார்கள். இதனால் பாண்டியன் சம்மதிக்கிறார். இதை எல்லாம் பார்த்து கதிர் உள்ளுக்குள் சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full