திருமணம் பற்றி பேசிய பாண்டியன், அரசி எடுக்க போகும் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 14/9/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் குமாரின் கேஸ் வருவதால் அவருடைய அம்மா, பெரியம்மா, பாட்டி எல்லோருமே வேதனையில் இருந்தார்கள். இதனால் வடிவு, ராஜியை சந்தித்து கேஸை வாபஸ் வாங்க சொன்னார். பின் இதை பற்றி ராஜி, மீனாவிடம் சொல்லி வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் அப்பத்தா, கோமதியை சந்தித்து குமார் கேஸை வாபஸ் வாங்க சொல்லி ரொம்ப எமோஷனலாக கதறி அழுதார். பின் ராஜி- மீனா இருவருமே சேர்ந்து பாண்டியனிடம் கேஸ் வாபஸ் வாங்குவதை பற்றி பேசப்போனார்கள்.

அப்போது கோமதி, குமார் மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க சொல்லி தைரியமாக பாண்டியனிடம் பேசினார். இதனால் கோபப்பட்ட பாண்டியன் முடியாது என்று கோமதியை திட்டினார். இதனால் கோமதி, தன் அண்ணன் குடும்பத்தை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு பேசி இருந்தார். ஆனால், பாண்டியன் மனம் மாறவே இல்லை. மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு குமார் கிளம்பினார். அப்போது குமார் வீட்டில் உள்ள எல்லோருமே குமாரை நினைத்து கதறி அழுதார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் கோர்ட்டில் குமார்- அரசி கேஸ் நடந்தது. அப்போது குமார், தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு , தண்டனையும் கேட்டார். இதையெல்லாம் பார்த்து அரசிக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குப்பின் அரசி, இந்த கேஸை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றார். அதைக் கேட்டவுடன் சக்திவேல், குமார், பாண்டியன் குடும்பத்தில் எல்லோரும் ஷாக் ஆனார்கள். அதற்கு பின் பாண்டியன்- அரசி இருவரும் வீட்டில் பேசியதை காண்பித்தார்கள். அப்போது அரசி, இந்த கேசை வாபஸ் வாங்கி விட்டால் ரெண்டு குடும்பமும் சேர்ந்து விடும்.

சீரியல் ட்ராக்:

அம்மா, அப்பத்தா ரொம்பவே வருத்தப்பட்டார்கள். நான் அந்த வீட்டில் இருக்கும் வரை என்னை அப்பத்தா, அத்தைகள் எல்லோருமே நன்றாகத்தான் பார்த்துக் கொண்டார்கள். இன்னும் ரெண்டு குடும்பத்தின் பகை அதிகமாக தான் ஆகும். அதனால் நான் கேசை வாபஸ் வாங்குகிறேன் என்றார். அதனால் பாண்டியனுமே சரி என்றார். பின் கோர்ட்டில் அரசி, இந்த விஷயத்தால் ரெண்டு குடும்பத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். செய்த தவறை உணர வேண்டும் என்று நினைத்தேன். மற்றபடி அவருக்கு தண்டனை வாங்கி தருவதில் எனக்கு விருப்பமில்லை என்றார்.

https://www.youtube.com/watch?v=jvJK1q7L3ZA

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோர்ட்டில் அரசி காலில் விழுந்து குமார் மன்னிப்பு கேட்கிறார். இதை பார்த்த சக்திவேல் பயங்கரமாக கோபப்படுகிறார். அதற்குப்பின் பாண்டியன் வீட்டிற்கு வந்த சதீஷின் அம்மா, மீண்டும் அரசியை திருமணம் செய்து வைக்க கேட்கிறார். அதற்கு பாண்டியன், எந்த முடிவாக இருந்தாலும் அரசி தான் எடுக்கணும். நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்கிறார். பின் பாண்டியன், அரசி இடம் திருமணத்தைப் பற்றி பேசுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full