அரசியின் காதல் பாண்டியனுக்கு தெரிய வருமா? சரவணன் இடமிருந்து தப்பித்த தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 22/2/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' ஹாஸ்பிடலில் மீனாவின் அப்பாவிற்கு சின்ன ஆபரேஷன் செய்தால் குணமாகிவிடும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்கள். இன்னொரு பக்கம் பாண்டியனுக்கு போன் செய்த செந்தில், மீனாவின் அப்பா நலமாக இருப்பதை சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்று தங்கமயில் வேலைக்கு போவதை முடக்கு போட்டார். உடனே பாண்டியன், நீ வேலைக்கு கிளம்பு. இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று சொன்னார். தங்கமயிலுக்கு என்ன சொல்வது செய்வதென்றே புரியவில்லை.

இன்னொரு பக்கம் அரசி, கல்லூரிக்கு போகும்போது யாருக்கும் தெரியாமல் சக்திக்கு பாய் சொல்லிவிட்டு சொன்னார். இதையெல்லாம் சுகன்யா பார்த்துவிட்டு சக்தியின் அப்பாவிடம் பேசி இருந்தார். அவர்கள் ஏதோ சொல்லி சமாளித்தார்கள். அப்போது சுகன்யா, பாண்டியனை பழிவாங்க நானும் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று சொன்னவுடன் அவர்கள் இருவருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் ஹாஸ்பிடலில் மீனாவின் அப்பா கண்விழித்து விட்டார். அப்போது செந்தில், மீனாவின் அப்பாவிடம் பேச, அவர் அமைதியாக இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் சரவணன், தங்கமயிலை வேலைக்கு அழைத்து சென்றார். என்ன செய்வது என்று புரியாமல் தங்கமயில் தவித்தார். பின் தங்கமயில், இது தான் வேலை செய்யும் இடம் என்று ஒரு பில்டிங்கை காண்பித்து தங்கமயில் இறங்கி கொண்டார். அங்கு இருக்கும் வாட்ச் மேனிடம் இந்த வேலை இருக்குமா? என்று தங்கமயில் கேட்க, உடனே அவர் அதெல்லாம் கிடையாது கிளம்பு என்று விரட்டி விட்டார். பின் எங்கு செல்வது என்று புரியாமல் ஏதோ ஒரு இடத்தில் உட்கார்ந்து தங்கமயில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:

அங்கு இருப்பவர்கள் தங்கமயிலை ஒரு மாதிரியாக பார்க்க, அவர் ரொம்ப பயந்தார். இன்னொரு பக்கம் அரசி, சக்தியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சக்தி, தன்னுடைய காதலைப் பற்றி கேட்க, அரசி ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் சக்தியின் காதலை ஏற்றுக்கொண்டு அரசி சிரித்து விட்டு சென்றார். அரசி தன் வலையில் விழுந்ததை நினைத்து சக்தி சந்தோஷப்பட்டார். கடைசியில் சரவணன், தங்கமயிலுக்கு போன் செய்து நான் வேலை செய்யும் இடத்திற்கு வருகிறேன் என்று சொன்னவுடன் தங்கமயில் ரொம்பவே பதறி போனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன் வருவதற்குள் தங்கமயில் தான் வேலை செய்வதாக சொல்லும் இடத்திற்கு வந்து விடுகிறார். ஒரு வழியாக சரவணன் இடம் இருந்து தங்கமயில் தப்பித்து விட்டார். இன்னொரு பக்கம் மளிகை கடையில் தூங்காததால் பழனி தூங்கி தூங்கி விழுகிறார். இதனால் பாண்டியன் அவரை திட்டி வீட்டுக்கு போக சொல்கிறார். அந்த சமயம் பார்த்து போன் செய்த சுகன்யா, என்னை ஏன் தனியாக விட்டுப் போனீர்கள். உங்களை திருமணம் செய்திருக்க கூடாது என்று வழக்கம் போல பழனியை திட்ட ஆரம்பித்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

பழனிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் மீனாவின் அப்பாவை பார்க்க பாண்டியன் வருகிறார். அப்போது அவர், செந்தில் பார்த்து கொள்ளட்டும். நீங்கள் இருவரும் சென்று ஓய்வெடுங்கள் என்று சொல்கிறார். பின் கதிர் அந்த ஹாஸ்பிடலுக்கு வந்ததால் மீனா, அவர் அம்மா இருவருமே வீட்டிற்கு சென்று விடுகிறார்கள். செந்திலும் தன் மாமனாரின் நிலை நினைத்து கதிரிடம் வருத்தப்பட்டு பேசுகிறார். அதற்குப்பின் வீட்டில் பாண்டியன், அரசி இடம் நீ கோயிலுக்கு போனியா? யாரிடம் பேசிக் கொண்டிருந்தாய்? என்று கேட்டதற்கு, அவர் ரொம்ப பயந்து விடுகிறார். பின் அரசி, ஏதோ சொல்லி சமாளிக்கிறார். கோமதி கோபப்பட்டு அரசியை திட்டுகிறார். ஆனால், கடைசிவரை அரசி உண்மையை சொல்லவே இல்லை. பாண்டியன், என் மகள் யாரிடமும் பேசிருக்க மாட்டாள் என்று நம்பிக்கையோடு சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full