உண்மை அறிந்து பாண்டியன் எடுத்த அதிரடி முடிவு, அரசி நிலைமை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 16/7/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கதிர் வீட்டிற்கு வந்த குமாரிடம் சண்டை வாங்கினார். குமார் தெனாவட்டாக பதில் சொன்னார். இதனால் குமார், கதிரிடையே சண்டை அதிகமானது. இதனால் இரு வீட்டில் உள்ள இரு வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விட்டார்கள். அப்போது குமார், நான் யார் கூட வேண்டுமானாலும் சுத்துவேன். அதைக் கேட்க நீங்கள் யார்? என்று சொன்னார். இதனால் கோபப்பட்டு கதிர் மீண்டும் குமாரை அடிக்க, தன் மகன் செய்தது தவறு என்று கூட பார்க்காமல் சக்திவேல் பாண்டியனையும் பாண்டியன் குடும்பத்தையும் தான் தவறாக பேசி இருந்தார். பின் கதிர் கல் எடுத்து குமாரும் மீது போடப் போனார்.

உடனே அரசி தடுத்து நிறுத்தி அவனுக்காக நீங்கள் ஏன் ஜெயிலுக்கு போகணும். அவன் யாரோ என்று சொன்னார். இதைக் கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆனது. அதற்கு பின் அரசி, எனக்கும் அவனுக்கும் கல்யாணமே ஆகவில்லை. தன்னுடைய குடும்பத்தை அசிங்கப்படுத்த இவன் கல்யாணத்துக்கு முன்னால் எனக்கு கடத்தி சென்று விட்டான். இவனால் என்னுடைய குடும்பம் அசிங்கப்படக்கூடாது என்று தான் நான் என்னுடைய கழுத்தில் தாலி கட்டிக் கொண்டேன். மற்றபடி எனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆகவில்லை என்று சொல்வதைக் கேட்டு ரெண்டு குடும்பமே ஷாக் ஆகி நிற்கிறது. உடனே அப்பத்தா, அரசியை வீட்டிற்குள் அழைத்து சென்று விட்டார். என்ன சொல்வதென்று புரியாமல் பாண்டியன் குடும்பம் அப்படியே வெளியில் நின்றார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் அப்பத்தா, உண்மையாலுமே உங்கள் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லையா? என்று கேட்டார். அதற்கு அரசி, நான் சொன்னது தான் உண்மை. என் குடும்பத்தை அசிங்கப்படுத்த நினைத்து தான் என்னை கல்யாணத்திற்கு முன் கடத்தி சென்று அடுத்த நாள் கொண்டு வந்து விட்டார். எனக்கு திருமணம் நடக்கவில்லை என்றாலும் கவலை இல்லை. ஆனால், என்னுடைய அப்பா- அம்மா அசிங்கப்படக்கூடாது என்று தான் நானும் என் வாழ்க்கையும் அழித்துக் கொண்டு இவனும் நிம்மதி இல்லாமல் இருக்கத்தான் எனக்கு நானே தாலி கட்டிக் கொண்டு வந்தேன் என்று சொன்னார். பின் குமார், அரசி சொல்வது உண்மை என்றார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே கோபப்பட்டார்.

நேற்று எபிசோட்:

இதனால் வீட்டில் உள்ள எல்லாருமே கோபப்பட்டார்கள். அதற்கு பின் அப்பத்தா இருவரையும் திருமணம் செய்து வைக்கலாம் என்று சொன்னார். இதை கேட்ட சுகன்யா, வீட்டில் வந்து எல்லோரிடமும் சொன்னார். கதிர், இனிமேல் என்னுடைய தங்கை அங்கு இருக்கக்கூடாது என்று ஆவேசப்பட்டு கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வீட்டிற்கு வந்தார். அப்போது அரசி செய்த வேலையைப் பற்றி கோமதி சொன்னார். உடனே மீனா, அதெல்லாம் அரசி சொன்னது தான் உண்மை. இந்த விஷயம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும். அரசியிடம் நாங்கள் கேட்டு தெரிந்து கொண்டோம் என்று உடன் மொத்த பேருமே சாக் ஆனார்கள். உடனே கோமதி, குமார் ஏற்கனவே பிரச்சினை செய்யும் போதே நான் சுதாரித்து இருக்கணும் என்று சொன்னார். பின் கதிர்- செந்தில் இருவருமே குமார், அரசியை கடத்தி செல்ல வந்த விஷயத்தை சொன்னார். இதை எல்லாம் கேட்டு பாண்டியனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியானது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அப்பத்தா, இருவருக்குமே திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று சொல்கிறார். ஆனால், குமாரின் அப்பா அதெல்லாம் முடியாது. அவளை பாண்டியன் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் என்று சொல்கிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வெளியே இருந்து கத்துகிறார். உடனே அரசி வெளியே வருகிறார். அப்போது பாண்டியன், எனக்காகவும் குடும்பத்திற்காகவும் தான் நீ இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறாயா? எதற்காக இப்படி செய்தாய் என்று கேட்கிறார். அரசி, நடந்த எல்லாவற்றையும் சொல்லி தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறார். உடனே குமாரும், குமாரின் அப்பாவும் பாண்டியனையும் அரசி பற்றி ரொம்ப மோசமாக பேசுகிறார்கள். இதனால் கோபப்பட்ட கதிர், குமாரை வெளுத்து வாங்குகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் அப்பத்தா, இவர்கள் இருவருக்குமே திருமணம் நடந்து விட்டது என்று ஊர் நம்பிக்கொண்டிருக்கிறது. தயவு செய்து திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று சொல்கிறார். பாண்டியன், ஊர் உலகத்திற்காக என் மகளின் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை. ஊர் என்ன சொன்னாலும் பரவாயில்லை. திருமணமாகாமல் கடைசிவரை என் மகளாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த அயோக்கியனுக்கு என் மகளை கட்டி வைக்க மாட்டேன். அப்பா உடனே வந்துவிடு அரசி என்று சொல்கிறார். இதனால் அரசியுமே தன்னுடைய அப்பாவுடன் செல்ல முடிவெடுக்கிறார். அதற்குப்பின் அரசி தாலியை கழட்டி குமாரின் முகத்தில் வீசி எறிந்து விட்டு அங்கிருந்து செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full