சக்தியின் திட்டம் ஈடேறியதா? செந்தில் சொன்ன வார்த்தையால் மனமுடைந்த பாண்டியன்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கதிரை பார்க்க பாண்டியன் வீட்டுக்கு அப்பத்தா சென்று இருந்ததால் பயங்கர கலவரமே நடந்தது. ராஜியின் அப்பா, நீ உறவை ஒட்ட வைக்கிறாயா? இனிமேல் இந்த குடும்பத்திற்கும் உனக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்று குலதெய்வ சாமி மீது சத்தியம் செய். ஒரு வேளை முடியாது என்றால் வீட்டை விட்டு வெளியே போ என்று மோசமாக தன்னுடைய தாய் என்று கூட பார்க்காமல் திட்டி இருந்தார். இதனால் பாண்டியன், அவருடைய மகன்கள் எல்லோருமே அப்பத்தாவிற்கு சப்போர்ட் செய்தார்கள்.
அப்போது பாண்டியன், எங்கள் வீட்டுக்கு வந்து விடுங்கள். நாங்கள் நன்றாக பார்த்துக் கொள்கிறோம் என்று அப்பத்தாவிடம் சொல்ல, எல்லோருமே அப்பத்தாவை அழைத்தார்கள். கடைசியில் அப்பத்தா, பாண்டியனிடம் கையெடுத்து கும்பிட்டு, என்னுடைய மகன்களுக்கு பாவத்தை நான் கொடுக்கவில்லை. நான் அவர்களுடன் போகிறேன் என்று வந்து விட்டார். இதனால் பாண்டியனும் அவருடைய குடும்பமும் ரொம்ப கவலைப்பட்டார்கள். இன்னொரு பக்கம் ராஜி அப்பா- சித்தப்பா இருவருமே மீண்டும் தன்னுடைய அம்மாவிடம் சண்டை போட்டு இருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இதனால் அப்பத்தா, என்ன சொல்வது என்றே புரியாமல் தவித்து நின்றார். நேற்று எபிசோட்டில் ராஜி, கதிரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். ஆனால், கதிர் மீண்டும் வேலைக்கு போக நினைத்தார். பின் தங்கமயிலை அழைத்த பாண்டியன், உன்னை வேலைக்கு வர சொல்கிறார்கள். நீ ஏன் கிளம்பவில்லையா? என்று கேட்க, அவர் ரொம்பவே பதறி போனார். பின் இதைப் பற்றி சரவணன் இடம் தங்கமயில் பேச, அப்பா சொல்வது போல நடந்து கொள் என்று கிளம்பி விட்டார். இதையெல்லாம் கவனித்த மீனா, ராஜிக்கு சந்தேகம் வந்தது. பின் அவர்கள் இதை பற்றி தங்கமயிலிடம் விசாரித்தார்கள்.
நேற்று எபிசோட்:
அப்போது தங்கமயிலும் உண்மையை சொல்ல பார்த்தார். அந்த சமயம் பார்த்து கோமதி வந்தவுடன் அவர் அமைதியாகி விட்டார். இன்னொரு பக்கம் அரசி வருவதை பார்த்த சக்தி, அவரை கரெக்ட் பண்ண தன்னுடைய நண்பர்களை வைத்து திட்டம் போட்டார். அவர்களும் அரசி இடம் வம்பு இழுக்க, அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சக்தி வைத்த ஆட்கள் அரசி இடம் வம்பு இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு வந்த பழனி, செந்தில் இருவருமே அந்த நபர்களை அடித்து துரத்தி விட்டு அரிசியை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
இது செய்தது சக்தி தான் என்று பழனி புரிந்து கொள்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயில், பாண்டியன் வீட்டில் நடந்த விஷயத்தை தன்னுடைய அப்பா அம்மாவிடம் சொல்லி அழுது புலம்புகிறார். அவர்களும் சமாதானம் சொல்லியும் அவர் ஏற்கவில்லை. தங்கமயில், நான் உண்மையை சொல்லிவிடுகிறேன் என்று சொல்ல, ஏதாவது செய்கிறேன் என்று ஆறுதல் சொல்கிறார் தங்கமயில் அப்பா. இன்னொரு பக்கம் கதிர் சவாரி வந்திருக்கிறது என்று கிளம்புகிறார். பாண்டியன் சொல்லியுமே அவர் கேட்காமல் கிளம்பிவிட்டார்.
https://www.youtube.com/watch?v=ublpM1t13KQ
சீரியல் ட்ராக்:
உடனே கோமதி-ராஜி இருவருமே எவ்வளவு சொல்லியுமே கேட்காமல் கதிர் சென்று விடுகிறார். அதற்குப்பின் பாண்டியன் கோபப்பட்டு வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது செந்தில், நீங்கள் இப்போது பணம் கொடுப்பீர்கள். பிறகு ஏதாவது காரணம் சொல்வீர்கள் என்று சொன்னவுடன் பாண்டியன் ரொம்பவே வருத்தப்படுகிறார். அதோடு தன் மனதில் இருந்த சின்ன சின்ன ஆதங்கத்தையும் வெளிப்படையாக செந்தில் பேசிவிட்டார். இதனால் கோமதிக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.