குமார் மீது புகார் கொடுத்த பாண்டியன், போலீஸ் எடுத்த அதிரடி ஆக்சன் - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் முத்துவேல், மூணு பேரை உன் மகன் கடத்திருக்கிறான். அவன் செய்வதற்கெல்லாம் நீ சப்போர்ட் செய்கிறார் என்று சொல்வதால் அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. உடனே அப்பத்தா, அவர்களை தடுத்து நிறுத்தி விட்டார். கடைசியில் மீனா, ராஜி, அரசி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அரசி, நான் குமாரை பழி வாங்கவும், நம்ம வீட்டின் மீது இருந்த பயத்தால் தான் அங்கு போனேன். நான் தான் அவனை டார்ச்சர் செய்து கொண்டிருந்தேன். இப்போது அவன் ரொம்ப நிம்மதியாக இருப்பான் என்று சொன்னார்.
சந்தோஷத்தில் பாண்டியன் எல்லோருக்குமே பரோட்டா, சிக்கன் வாங்கி வந்திருந்தார். பின் எல்லோரையும் உட்கார வைத்து ஒவ்வொருவருக்குமே கையில் சாப்பாடு கொடுத்தார் பாண்டியன். அதற்கு பின் பாண்டியன், நீ எப்படி குமார் இடத்திற்கு போனாய்? என்று கேட்டார். அரசியால் எதுவுமே பேச முடியவில்லை. அப்போது மீனா, ராஜி இருவருமே இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் சுகன்யா தான் என்று சொல்லிவிட்டார்கள். சுகன்யா ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை அரசி வாழ்க்கையில் செய்ததை ஒன்று விடாத சொன்னார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
சுகன்யாவும் இல்லை என்று சமாளித்தார். இருந்தாலுமே சுகன்யா சொல்வதில் உண்மை இல்லை என்பது பாண்டியன் குடும்பத்திற்கு தெரிந்தது. அப்போது மீனா, குமார் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை காட்டி மிரட்டியதனால் தான் சுகன்யா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் அரசியை கொண்டு போய்விட்டார். அதற்கு பின் குமாரை கல்யாணம் செய்து கொள் என்று கட்டாயப்படுத்தியதும் சுகன்யா தான் என்று அடுக்கடுக்காக சுகன்யா மீதான குற்றசாட்டுகளை சொன்னார்கள். இதனால் பாண்டியன் குடும்பமே ஷாக் ஆனது. கோபத்தில் பழனி, சுகன்யாவை திட்டி இருந்தார். அதற்குப்பின் கோமதி, சுகன்யாவிடம் பேச வந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் கோமதி, இவர்கள் சொல்வது உண்மையா அரசி? என்று கேட்டார். சுகன்யா, இவர்கள் என் மீது வீண்பழி போட்டார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சமாளித்தார். உடனே அரசி, அண்ணி சொன்னது தான் உண்மை. அத்தையால் தான் என்னுடைய வாழ்க்கை சீரழிந்தது என்று சொன்னார். கொந்தளித்த கோமதி, சுகன்யா கன்னத்தில் பளார் பளார் என்று அடித்தார். சுகன்யாவால் எதுவுமே பேச முடியவில்லை.
சீரியல் ட்ராக்:
கோமதி, என் குடும்பம் உனக்கு என்ன துரோகம் செய்தது. உனக்கு நாங்கள் நல்லது தானே நினைத்தோம் என்று மீண்டும் அடித்தார். அதற்குப்பின் பாண்டியன், பழனி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பழனி, அவளை கல்யாணம் செய்து கொண்டு வந்த நாளிலிருந்து இப்படித்தான் நடந்து கொண்டார். என்னிடம் எப்போதுமே சண்டை வாங்கிக் கொண்டுதான் இருந்தார். இரவு முழுவதும் என்னை தூங்க விடுவதில்லை. எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். என்னுடைய வாழ்க்கையே போய்விட்டது என்று புலம்பினார்.
https://www.youtube.com/watch?v=tbU4cYtoYCw
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமாவில் பாண்டியன், கோமதி, அரசி மூவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று குமார் மீது கடத்தல் புகார் கொடுத்து விடுகிறார்கள். அதற்குப்பின் முத்துவேல் வீட்டிற்கு வந்த போலீஸ் கடத்தல் வழக்கு தொடர்பாக குமாரை கைது செய்கிறோம் என்றவுடன் மொத்த குடும்பமே பதறினார்கள். உடனே குமார் தப்பித்து ஓடுகிறார். இருந்தாலும் போலீஸ் அவரை பிடித்து விடுகிறார்கள். இதையெல்லாம் பாண்டியன் குடும்பம் பார்க்கிறது. இனி அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.