டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ள போராடும் ராஜி, பாண்டியன் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 1/9/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், ஒவ்வொருவருக்கும் தான் வாங்கிய பொருளை எல்லாம் கொடுக்க, பாண்டியன் கோபப்படு முறைத்துக் கொண்டே இருந்தார். பின் செந்தில், பாண்டியனுக்கு வாட்ச் கொடுத்தார். பாண்டியன், இதெல்லாம் இப்போ தேவையா? பத்து லட்சம் லோன் வாங்கி வைத்துவிட்டு இந்த ஆடம்பர செலவு பண்ணனுமா? என்று திட்டிவிட்டு கிப்டையும் வாங்காமல் சென்றார். இதனால் செந்தில் பாண்டியன் மீது கோபப்பட்டார். பின் செந்தில், தன் மனைவியிடம் சொல்லி புலம்பி இருந்தார்.

தன்னுடைய சித்தி,குமாரை பற்றி சொன்னதை கதிரிடம் சொன்னார். அதோட ராஜி, குமாருக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட கதிர், ராஜியை திட்டினார். பின் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. உடனே ராஜி, கேசை வாபஸ் வாங்க சொல்லவில்லை என்றார். சக்திவேல் வீட்டில் குமாருக்கு பொண்ணு பார்த்த விஷயத்தை முத்துவேல் சொன்னார். அப்பத்தா, அரசி வாழ்க்கையும் வீணாகப் போய்விடும். அவர்கள் இருவரையும் திருமணம் செய்து வைக்கலாம் என்றார். ஆனால், முத்துவேல் கேட்கவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

மீனா, செந்தில் இருவருமே வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள்.அப்போது வீட்டில் பாண்டியன் நடந்து கொண்டதைப் பற்றி செந்தில் பேசி இருந்தார். இன்னொரு பக்கம் குமாரை பார்ப்பதற்காக பெண் வீட்டில் வந்திருந்தார்கள். சக்திவேல் குமாரை பற்றி பெருமையாக பேசினார். குமார், எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. எனக்கு தெரியாமல் இவர்கள் அழைத்து விட்டார்கள். தயவு செய்து கிளம்புங்கள் என்று சொன்னார். இதைக்கேட்டு சக்திவேல், முத்துவேல் இருவருமே ஷாக் ஆனார்கள். இதையெல்லாம் பார்த்த சுகன்யா, அரசி இடம் தேவையில்லாத விஷயத்தை சொன்னார்.

கடந்த வாரம் எபிசோட்:

அந்த சமயம் வந்த மீனா, ராஜி இருவருமே சுகன்யாவை திட்டிவிட்டு அங்கிருந்து அரசியை அழைத்து சென்று விட்டார்கள். அப்போது பழனி, சுகன்யாவை திட்டி வார்னிங் கொடுத்தார். அதற்குப்பின் ராஜி- மீனா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி, கதிர் டிராவல்ஸ் வைப்பதற்காக 10 லட்சம் ரூபாய் பணம் தேவை. சென்னையில் ஒரு நடன போட்டி நடக்கிறது. அதில் கலந்துகொண்டு கதிருக்கு அந்த பணத்தை வெற்றி பெற்று தர வேண்டும் என்று சொன்னார். உடனே மீனா, இதை வீட்டில் எப்படி சொல்லி பல அனுமதி வாங்குவாய் என்று கேட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன் கோபமாக இருப்பதால் வெளியே தூங்க வருகிறார். உடனே தங்கமயில், ஏதேதோ பேசி கலாட்டா செய்து சரவணனை உள்ளே தூங்க வைக்கிறார். மறுநாள் காலையில் வீட்டில் எல்லோருமே அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தங்கமயில், சொத்து பங்கு பிரிப்பதை பற்றி கேட்கிறார். உடனே கோபத்தில் சரவணன்- கோமதி இருவருமே தங்கமயிலை திட்டுகிறார்கள். அதற்கு பாண்டியன், எல்லா பிள்ளைகளும் எனக்கு சமம் தான். சொத்தை நான் இவர்களுக்கு மட்டும் கொடுத்து விடமாட்டேன் என்று சொல்கிறார். தங்கமயில் அமைதியாக இருக்கிறார். பின் கோமதி, வீட்டிற்குள் தேவையில்லாமல் சொத்து விவகாரத்தை ஏற்படுத்தாதே, புரிந்து நடந்து கொள் என்று திட்டி அறிவுரை செய்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் ராஜி, கதிரிடம் டான்ஸ் காம்பிடிஷன் பற்றி பேசுகிறார். அதற்கு கதிர், அதெல்லாம் வேண்டாம். நீ உன்னுடைய போலீஸ் வேலையில் மட்டும் கவனம் செலுத்து என்று சொல்கிறார். அதற்கு பின் ராஜி, பாண்டியனிடம் நியூஸ் பேப்பரை கொடுத்து டான்ஸ் காம்பிடிஷன் பற்றி சொல்கிறார். இதைக் கேட்ட கோமதி கோபப்பட்டு ராஜியை திட்டுகிறார். பாண்டியன், இதெல்லாம் சரிப்பட்டு வராதுமா என்று சொல்கிறார். இருந்தாலுமே இதை ராஜி விடுவதாக இல்லை. அதற்குப்பின் பாண்டியனிடம் கோமதி, ராஜுவை டான்ஸ் காம்பிடிஷனுக்காக சென்னைக்கு அனுப்ப வேண்டாம். நீங்கள் ஏதாவது சொல்லி புரிய வையுங்கள் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full