ராஜியின் திருமண ரகசியத்தை அறியும் இரு குடும்பத்தார், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன், உன்னுடைய மீனா- ராஜி மாதிரி பேரும் புகழும் வாங்கணும் என்று புகழ்ந்து பேசி இருந்தார். இதை எல்லாம் கேட்டு தங்க மயிலுக்கு பயங்கரமாக கடுப்பாக இருந்தது. பின் ரூமுக்கு வந்த தங்கமயில், எப்ப பாத்தாலும் மீனா- ராஜியை தான் புகழ்ந்து பேசுகிறார்கள் என்று கோபப்பட்டு புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து சரவணன் வந்தார். சரவணனை எப்படியாவது தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்று தங்கமயில் கால் வலிப்பது போல் நடித்து டிராமா செய்தார்.
ராஜி, என்னுடைய நகைகளை விற்று கதிரின் தொழிலுக்குகொடுக்கலாம் என்று இருக்கிறேன் என்றார். அதற்கு மீனாவுமே சரி என்றார். பின் மீனாவுக்கு வேலை வந்ததால் கிளம்பிவிட்டார். பின் ராஜி பேங்கில் நகையை கொடுத்துவிட்டு வைப்பதற்கான வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு வந்த சக்திவேல் ராஜியை பார்த்து விட்டார். பேங்கில் இருபவர்களிடம் எதற்காக ராஜி வந்தார் என்ற விஷயத்தை விசாரித்து சக்திவேல் தெரிந்து கொண்டார். உடனே சக்திவேல் அங்கு வேலை செய்பவர்களிடம், பணத்தை பிறகு தருகிறேன் என்று சொல்லி அனுப்புங்கள் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதையும் நம்பி ராஜி சென்று விட்டார். பின் கோபத்தில் அந்த நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த சக்திவேல் நடந்த எல்லாத்தையும் தன்னுடைய அண்ணன் இடம் சொன்னார். பின் ராஜி நகையை விற்க வந்த விஷயத்தை வீட்டிற்கு வெளியே வந்து சக்திவேல் பாண்டியனையும் அவர் குடும்பத்தையும் வெளியே வர சொல்லி கத்திக் கொண்டிருந்தார். அப்போது கதிர்-ராஜி இருவரும் வெளி வருகிறார்கள். சக்திவேல் நகை விஷயத்தை தான் பேச வந்திருக்கிறார் என்று ராஜி தெரிந்து கொண்டார். இதனால் இவர் மீனாவிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். பாண்டியன் வருவதற்காக சக்திவேல் காத்துக் கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோடில் பாண்டியன் வீட்டில் எல்லோருமே வந்துவிடுகிறார்கள். இருந்தாலும் பாண்டியன் வரவில்லை என்று சக்திவேல் அமைதியாக இருக்கிறார். பாண்டியன் மகன்கள் எல்லோருமே என்ன பிரச்சனை? எதற்காக இப்படி தகராறு செய்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வந்துவிடுகிறார். அப்போது சக்திவேல், நகை திருட்டுப் போய்விட்டது. நகை கிடைத்த உடனே திரும்பி கொடுப்பதாக சொன்னீர்கள். எங்கள் வீட்டு பொண்ணை ஏமாற்றி அவளை அனுப்பி நகையை வைத்திருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். இதைக் கேட்டு பாண்டியனுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே ராஜி, இதற்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் தான் கதிர் பிசினஸ்க்காக நகையை வைக்கப் போனேன்.
சீரியல் ட்ராக்:
நகை கிடைத்த விஷயம் கூட வீட்டில் யாருக்கும் தெரியாது என்று சொல்கிறார். இருந்தாலுமே சக்திவேல் குடும்பத்தில் யாருமே நம்பவில்லை. பின் சக்திவேல், கதிரை ரொம்ப மோசமாக பேசுகிறார். இதனால் கோபப்பட்ட ராஜி, என்னுடைய திருமணத்தால் ஒரு விஷயத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக பொய் மேல் பொய் சொல்லியும் இருக்கிறேன். என்னுடைய திருமணத்தில் நடந்த விஷயத்தை தெரிந்தால் இப்படி எல்லாம் நீங்கள் பேச மாட்டீர்கள். உங்கள் மானம் கௌரவத்தை கதிர் தான் காத்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்கிறார். இதை எல்லாம் கேட்டு முத்துவேலுக்கு புரியவில்லை. ராஜி உண்மையை சொல்லி விடுவாளோ என்று கோமதி, மீனா இருவருமே பதறுகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=v-oTAwA-9cg
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் நகை விஷயமாக முத்துவேல், சக்திவேல் இருவருமே பாண்டியன் வீட்டில் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜி, நான் காதலித்தது கதிரே கிடையாது. வேறு ஒருவரை நான் காதலித்தேன். அவனை நம்பி தான் நான் வீட்டை விட்டுப் போனேன். ஆனால், அவன் என்னை ஏமாற்றிவிட்டு என்னுடைய நகையை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று போனேன். அந்த சமயத்தில்தான் கதிரை திருச்சியில் பார்த்தேன். அப்போது நான் கதிரிடம் என்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என்று கேட்டேன் என்கிறார். இதை கேட்டு எல்லோரும் ஷாக் ஆகிறார்கள்.