மாமியாருடன் போட்ட சண்டையில் ராஜி எடுத்த முடிவு, பயத்தில் மொத்த குடும்பம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 25/9/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் கதிர் சவாரி போனதால் கோமதி-ராஜி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. மறுநாள் காலையில் கதிர் வந்தவுடன் கதிர் -ராஜி இருவருக்கும் மத்தியில் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாகி, நான் எல்லா உண்மையும் எங்கள் வீட்டில் சொல்லப்போகிறேன் என்று ராஜி தன்னுடைய அப்பாவை பார்க்க போனார். இதை மீனா, கோமதியிடம் சொல்ல, கோமதியும் என்ன நடக்குமோ? என்ற பயத்தில் இருந்தார். பின் கதிர், ராஜிவை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தார்.

அப்போது ராஜி, என்னுடைய படிப்பு செலவிற்கு நீ எந்த காசும் கொடுக்க கூடாது. நான் டியூஷன் எடுக்க போகிறேன். இதை நான் வீட்டிலும் சொல்லி விடுவேன் என்று கண்டிஷன் போட கதிரும் சம்மதித்தார். அதன் பின் வீட்டுக்கு வந்த ராஜி, டியூஷன் எடுக்கும் விஷயத்தை சொன்னவுடன் கோமதி அதிர்ச்சி ஆகி மறுத்தார். உடனே ராஜி மிரட்டலுக்கு வேறு வழியில்லாமல் கோமதி ஒத்து கொண்டார். அந்த சமயம் பார்த்து தங்கமயில் உள்ளே வந்த உடனே எல்லோரும் பேச்சை நிறுத்த, அவர் முகமே வாடியது. இதனால் வேதனைப்பட்ட தங்கமயில், சரவணன் இடம் சொல்லி புலம்ப, அவர் கண்டுகொள்ளாமல் வேலைக்கு சென்று விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இந்த வாரம் சரவணன் தன்னுடைய மொத்த சம்பளத்தையும் அப்பாவிடம் கொடுத்தார். உடனே அவர், உன் செலவுக்கு எடுத்துக்கொள் என்று சொன்னதற்கு, வேணாம் என்று சரவணன் சொல்லி விடுகிறார்.
இதையெல்லாம் பார்த்து தங்கமயில் புலம்பி இருந்தார். பின் தங்கமயில், மன வேதனையில் தன்னுடைய அம்மா வீட்டிற்கு போவதாக சொல்ல சரவணன் கூட்டிக்கொண்டு போய் விட்டார். அப்போது தங்கமயில், சரவணன் செய்ததையும், மீனா-ராஜி- கோமதி செய்வதையும் சொல்லி தன் அம்மாவிடம் புலம்பி அழுதார். நேற்று எபிசோட்டில், இதையெல்லாம் கேட்டு கோபப்பட்ட தங்கமயில் அம்மா, பாண்டியன் வீட்டிற்கு சண்டைக்கு போக பார்க்கிறார்.

நேற்று எபிசோட்:

அவருடைய கணவர் தடுத்து பொறுமையாக இரு, இந்த பிரச்சனையை தீர்க்கலாம் என்று சமாதானம் செய்தார். பின் தங்கமயில் அம்மா, நீ எப்படியாவது மாப்பிள்ளையை உன் வழிக்கு கொண்டு வர பாரு. அந்த வீட்டினுடைய மொத்த கண்ட்ரோலையும் உன் கையில் எடு என்று வழக்கம் போல தன்னுடைய மகளுக்கு தேவையில்லாத அறிவுரை எல்லாம் சொல்லி அனுப்பி இருந்தார். இன்னொரு பக்கம் தன்னுடைய மகனுக்கு பெண் வீட்டார் விசாரிக்க வருவதைப் பற்றி ராஜி சித்தப்பா சொல்லி புலம்பி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

கடைசியில் மீனா- ராஜி- தங்கமயில் மூவருமே தன்னுடைய மாமனாரின் பிறந்தநாளை பற்றி தங்களுடைய கணவன்மார்களிடமும் பேசி இருந்தார்கள். இந்நிலையில் இன்று எபிசோட்டில், ரூமில் சரவணன் பாட்டு பாடிக்கொண்டிருக்கிறார். அதை பார்த்த மயில் சந்தோஷப்பட்டு இது தான் சந்தர்ப்பம் என்று சம்பளப் பணத்தை கேட்கிறார். அப்போது தங்கமயில், எனக்கு கொஞ்சம் செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்க, நான் எப்படி கொடுக்க முடியும். நான் ஒரு ஐடியா சொல்கிறேன். நீ வேலைக்கு போ என்று சரவணன் சொல்ல, வருத்தப்பட்டு தங்கமயில் அமைதியாகி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

மறுநாள் ராஜி டியூஷன் எடுக்கும் விஷயத்தை தன் மாமனாரிடம் சொல்ல சொல்லி மாமியாரிடம் கேட்க, அவர் முடியாது என்று மறுத்தவுடன் கோபத்தில் தன்னுடைய அப்பாவிடம் எல்லா உண்மையும் சொல்ல ராஜி வெளியே போகிறார். இதனால் எல்லோருமே பயப்படுகிறார்கள். ஆனால், தங்கமயிலுக்கு ஒன்னும் புரியவில்லை. அந்த சமயம் பார்த்து வந்த கார் ராஜி மீது மோத, பாண்டியன் கத்துகிறார். ஆனால் காரில் இருந்து வந்தவர்கள் பாண்டியனுக்கு தெரிந்தவர்கள். அவர்கள் ராஜியின் அண்ணனை பெண் பார்க்கும் விஷயத்தை சொல்கிறார்கள். இதை பார்த்த ராஜியின் அம்மா, அப்பா, சித்தப்பா எல்லாமே வெளியில் வந்து பாண்டியனை வம்பிழுத்து பேச,அவர் ஆத்திரத்தில் மையாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full