சக்தி செய்த வேலையால் கொந்தளித்த ராஜி, பாண்டியனுக்கு தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் செந்தில் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது பாண்டியன் வந்தவுடன் செந்தில் ஆசீர்வாதம் வாங்கி இருந்தார். உடனே அவர், நக்கலாக மனது கஷ்டப்படும் அளவிற்கு செந்திலை பேசி இருந்தார். இதனால் செந்தில்-மீனா முகமே மாறிவிடுகிறது. கோமதி, கதிர் இருவருமே பாண்டியனை திட்டி இருந்தார்கள். அதற்குப்பின் கடைக்கு சென்று கொண்டு இருக்கும் போது பாண்டியன், செந்திலை புகழ்ந்து பேச, பழனிக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது அங்கு இருந்த மீனாவின் அப்பாவை பார்த்தவுடன் பாண்டியன், செந்தில் பற்றி பெருமையாக பேசி சவால் விட்டு இருந்தார்.
பின் ராஜி, கல்லூரிக்கு செல்லும் வழியில் அவரை காதலித்து ஏமாற்றிய கண்ணனை பார்த்து ஷாக்கானார்.
நேற்று எபிசோடில் கண்ணனை பார்த்தவுடன் கோபத்தில் ராஜி அவரை துரத்த, கண்ணன் தப்பித்து வேகமாக ஓடினார். அப்போது எதிர்பாராத விதமாக ராஜி கீழே விழுந்ததால் அவருக்கு அடிபட்டது. இதனால் கண்ணன் தப்பித்து விட்டார். அந்த சமயம் பார்த்து வந்த கதிர், ராஜிக்கு உதவி செய்ய, அவர் நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னார். பின் எப்படியாவது கண்ணனை கண்டு பிடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் இருவருமே காரில் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், கண்ணன் கிடைக்கவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் இருவரும் புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் போனார்கள். அங்கு நடந்த உண்மை எல்லாம் ராஜி சொல்ல வந்தார். ஆனால், கதிர் தடுத்து தான் ராஜியை காதலித்ததாகவும், தன்னுடைய பிரண்டு தான் ராஜி நகையை திருடி எடுத்துச் சென்றதாகவும் மாற்றி சொன்னார். பின் இந்த விஷயத்தை வீட்டிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றவுடன் ராஜிவும் சரி என்றார். இன்னொரு பக்கம் செந்தில் தேர்வு எழுதும்போது வெளியே இருக்கும் மீனாவையே பார்த்துக் கொண்டு வருத்தப்பட்டார்.
நேற்று எபிசோட்:
கடைசியில் கதிர், ராஜி இருவருமே வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது கண்ணனை மீண்டும் பார்த்ததாக வண்டி நிறுத்த சொன்னார் ராஜி. பின் இருவருமே கண்ணனை தேடி போனார்கள். ஆனால், அது கண்ணனே இல்லை. ராஜி ரொம்ப பதட்டத்தில் இருந்ததால் கதிர் அங்கிருந்து அழைத்து வந்து விடுகிறார். இந்த நிலையில் இன்று எபிசோடில் பாண்டியன் வீட்டிற்கு தங்கமயில் அப்பா- அம்மா வந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கம் மயிலுக்கு தாலி பிரித்து கோர்ப்பது பற்றி பேச கோமதி மற்ற இரண்டு மருமகளுக்குமே தாலி பிரித்து கோர்த்து விடலாம் என்று சொல்கிறார்.
இன்றைய எபிசோட்:
அதற்கு பாண்டியன், மூவருக்கும் ஒரே நாளில் வைக்கலாம் என்று சொல்கிறார். உடனே தங்கமயில் அம்மா, நாங்கள் என்னுடைய மகளுக்கு எல்லாம் செய்வோம். மற்றவர்களுக்கு யார் செய்வார்கள்? என்று சொன்னவுடன் பாண்டியன் கோபப்பட்டு மூன்று பேருமே என்னுடைய மகள்கள் தான். நானே செய்து கொள்கிறேன் என்று சொன்னவுடன் தங்கமயிலின் அப்பா அம்மா பெருமூச்சு வாங்கிறார்கள். நகையை பற்றி கேட்டதற்கும் எல்லா செலவுகளையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னவுடன் அவர்கள் அமைதியாகிவிடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பின் வீட்டிற்கு பாண்டியனின் மூத்த மகள் குழலி வருகிறார். இதனால் வீடு கலாட்டா கலவரமாக இருக்கிறது. அதன் பின் அரசி வீட்டிற்கு வெளியே போன் பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த சக்தி, அவரிடம் பேச முயற்சிக்கிறார். ஆனால், அரசி எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். இதை எல்லாம் கவனித்த ராஜி பயங்கரமாக கோபப்பட்டு தன்னுடைய அண்ணனிடம் சண்டைக்கு போனார். அவர், உனக்கு என்ன பிரச்சனை? நான் என்ன வேணாலும் செய்வேன் என்று கோபப்பட்டு பேச, இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகிறது. உடனே சக்தி கோபத்தில் ராஜியை அடிக்க பார்க்கிறார். ராஜி, தைரியம் இருந்தால் அடி என்று திமிராக நிற்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.