குடும்பத்தை மீறி நடன போட்டியில் கலந்து கொள்ளும் ராஜி, நிலைமையை அறிவாரா கதிர்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மாரி, கேஸை வாபஸ் வாங்க சொல்லு என்று ரொம்பவே கெஞ்சி கதறி அழுதார். அதற்கு ராஜி, நான் குமாரை மட்டும் யோசிக்க முடியாது. என் மாமனார், அரசி பற்றி எல்லாம் யோசிக்கணும். என்னால் எதுவும் பண்ண முடியாது என்று சொன்னார். இதனால் கோபப்பட்டு மாரி, ராஜியை திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே செந்தில் வரவில்லை என்று காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது செந்தில் வீட்டில் உள்ள எல்லோருக்குமே முதல் மாத சம்பளம் வந்ததால் கிப்ட் வாங்கிக்கொண்டு வந்தார்.
பின் ஒவ்வொருவருக்கும் தான் வாங்கிய பொருளை எல்லாம் கொடுக்க, பாண்டியன் கோபப்படு முறைத்துக் கொண்டே இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோசமாக செந்தில் வாங்கி கொடுத்த கிப்ட்டை ஏற்றுக்கொண்டார்கள். பாண்டியனுக்கு வாட்ச் கொடுத்தார். பாண்டியன், இதெல்லாம் இப்போ தேவையா? பத்து லட்சம் லோன் வாங்கி வைத்துவிட்டு இந்த ஆடம்பர செலவு பண்ணனுமா? என்று திட்டிவிட்டு கிப்டையும் வாங்காமல் சென்றார். இதனால் செந்தில் பாண்டியன் மீது கோபப்பட்டார். பின் செந்தில், தன் மனைவியிடம் சொல்லி புலம்பி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
தன்னுடைய சித்தி,குமாரை பற்றி சொன்னதை கதிரிடம் சொன்னார். அதோட ராஜி, குமாருக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட கதிர், ராஜியை திட்டினார். பின் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. உடனே ராஜி, கேசை வாபஸ் வாங்க சொல்லவில்லை என்றார். சக்திவேல் வீட்டில் குமாருக்கு பொண்ணு பார்த்த விஷயத்தை முத்துவேல் சொன்னார். அப்பத்தா, அரசி வாழ்க்கையும் வீணாகப் போய்விடும். அவர்கள் இருவரையும் திருமணம் செய்து வைக்கலாம் என்றார். ஆனால், முத்துவேல் கேட்கவில்லை.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் மீனா, செந்தில் இருவருமே வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள்.அப்போது வீட்டில் பாண்டியன் நடந்து கொண்டதைப் பற்றி செந்தில் பேசி இருந்தார். இன்னொரு பக்கம் குமாரை பார்ப்பதற்காக பெண் வீட்டில் வந்திருந்தார்கள். சக்திவேல் குமாரை பற்றி பெருமையாக பேசினார். குமார், எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. எனக்கு தெரியாமல் இவர்கள் அழைத்து விட்டார்கள். தயவு செய்து கிளம்புங்கள் என்று சொன்னார். இதைக்கேட்டு சக்திவேல், முத்துவேல் இருவருமே ஷாக் ஆனார்கள். இதையெல்லாம் பார்த்த சுகன்யா, அரசி இடம் தேவையில்லாத விஷயத்தை சொன்னார்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் வந்த மீனா, ராஜி இருவருமே சுகன்யாவை திட்டிவிட்டு அங்கிருந்து அரசியை அழைத்து சென்று விட்டார்கள். அப்போது பழனி, சுகன்யாவை திட்டி வார்னிங் கொடுத்தார். அதற்குப்பின் ராஜி- மீனா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி, கதிர் டிராவல்ஸ் வைப்பதற்காக 10 லட்சம் ரூபாய் பணம் தேவை. சென்னையில் ஒரு நடன போட்டி நடக்கிறது. அதில் கலந்துகொண்டு கதிருக்கு அந்த பணத்தை வெற்றி பெற்று தர வேண்டும் என்று சொன்னார். உடனே மீனா, இதை வீட்டில் எப்படி சொல்லி பல அனுமதி வாங்குவாய் என்று கேட்டார்.
https://www.youtube.com/watch?v=uKUYOhgtC6c
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் டான்ஸ் போட்டியை பற்றி ராஜி வீட்டில் சொல்கிறார். பாண்டியன் ஒத்துக் கொள்ளவில்லை. கோபப்பட்டு பாண்டியன், நீ என்ன முடிவு வேணாலும் எடுத்துக் கொள். என்னிடம் கேட்காதே என்று சொல்கிறார். உடனே ராஜி, நான் கண்டிப்பாக டான்ஸ் போட்டிக்கு போவேன் என்று எல்லாரையும் எதிர்த்து சென்னைக்கு செல்கிறார். அங்கு போட்டியில் ராஜியும் நடனமாடுகிறார். அங்கு டான்ஸ் ஆடுகிறேன் என்று தவறாக ராஜியிடம் நடக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து போன் செய்த கதிர், பிரச்சனை எதுவும் இல்லைதானே, நன்றாக இருக்கிறாயா? என்று கேட்கிறார். உண்மை சொல்ல முடியாமல் ராஜி தவிக்கிறார்.