டான்ஸ் போட்டியால் பாண்டியன் வீட்டில் கலவரம், பிடிவாதம் பிடிக்கும் ராஜி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் குமாரை பார்ப்பதற்காக பெண் வீட்டில் வந்திருந்தார்கள். சக்திவேல் குமாரை பற்றி பெருமையாக பேசினார். குமார், எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. எனக்கு தெரியாமல் இவர்கள் அழைத்து விட்டார்கள். தயவு செய்து கிளம்புங்கள் என்று சொன்னார். இதைக்கேட்டு சக்திவேல், முத்துவேல் இருவருமே ஷாக் ஆனார்கள். இதையெல்லாம் பார்த்த சுகன்யா, அரசி இடம் தேவையில்லாத விஷயத்தை சொன்னார்.
அந்த சமயம் வந்த மீனா, ராஜி இருவருமே சுகன்யாவை திட்டிவிட்டு அங்கிருந்து அரசியை அழைத்து சென்று விட்டார்கள். அப்போது பழனி, சுகன்யாவை திட்டி வார்னிங் கொடுத்தார். அதற்குப்பின் ராஜி- மீனா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி, கதிர் டிராவல்ஸ் வைப்பதற்காக 10 லட்சம் ரூபாய் பணம் தேவை. சென்னையில் ஒரு நடன போட்டி நடக்கிறது. அதில் கலந்துகொண்டு கதிருக்கு அந்த பணத்தை வெற்றி பெற்று தர வேண்டும் என்று சொன்னார். உடனே மீனா, இதை வீட்டில் எப்படி சொல்லி பல அனுமதி வாங்குவாய் என்று கேட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் சரவணன் கோபமாக இருப்பதால் வெளியே தூங்க வந்தார். உடனே தங்கமயில், கலாட்டா செய்து சரவணனை உள்ளே தூங்க வைத்தார். மறுநாள் காலையில் தங்கமயில், சொத்து பங்கு பிரிப்பதை பற்றி கேட்டார். கோபத்தில் சரவணன்- கோமதி இருவருமே தங்கமயிலை திட்டினார்கள். அதற்கு பாண்டியன், எல்லா பிள்ளைகளும் எனக்கு சமம் தான். சொத்தை நான் இவர்களுக்கு மட்டும் கொடுத்து விடமாட்டேன் என்றார். பின் கோமதி, வீட்டிற்குள் தேவையில்லாமல் சொத்து விவகாரத்தை ஏற்படுத்தாதே, புரிந்து நடந்து கொள் என்று திட்டி அறிவுரை செய்தார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் ராஜி, கதிரிடம் டான்ஸ் காம்பிடிஷன் பற்றி பேசுகிறார். அதற்கு கதிர், அதெல்லாம் வேண்டாம். நீ உன்னுடைய போலீஸ் வேலையில் மட்டும் கவனம் செலுத்து என்று சொல்கிறார். அதற்கு பின் ராஜி, பாண்டியனிடம் நியூஸ் பேப்பரை கொடுத்து டான்ஸ் காம்பிடிஷன் பற்றி சொல்கிறார். இதைக் கேட்ட கோமதி கோபப்பட்டு ராஜியை திட்டுகிறார். பாண்டியன், இதெல்லாம் சரிப்பட்டு வராதுமா என்று சொல்கிறார். இருந்தாலுமே இதை ராஜி விடுவதாக இல்லை. அதற்குப்பின் பாண்டியனிடம் கோமதி, ராஜுவை டான்ஸ் காம்பிடிஷனுக்காக சென்னைக்கு அனுப்ப வேண்டாம். நீங்கள் ஏதாவது சொல்லி புரிய வையுங்கள் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமார், அரசியை சந்தித்து மன்னிப்பு கேட்கிறார். ஆனால், அரசி எதுவுமே பேசவில்லை. தான் செய்த தவறை உணர்ந்து குமார் பேசினார். இதையெல்லாம் பார்த்த சரவணன் கோபப்பட்டு குமாரை அடித்து விட்டு அரசியை அங்கு இருந்து அழைத்து வருகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் டான்ஸ் காம்பிடிஷனில் கலந்து கொள்வதைப் பற்றி ராஜி சொல்கிறார். ஆனால், வீட்டில் யாருமே ஒத்துக்கொள்ளவில்லை. டான்ஸ் காம்பிடிஷனுக்கு அனுப்பாவிட்டால் நான் சாப்பிட மாட்டேன் என்று உண்ணாவிரதம் இருக்கிறார் ராஜி. பாண்டியன் மற்றும் மொத்த வீடும் எடுத்துச் சொல்லியுமே ராஜி கேட்பதாக இல்லை.
சீரியல் ட்ராக்:
போட்டிக்கு போவதில் உறுதியாக இருக்கிறார் ராஜி. இதனால் பாண்டியன் கோபப்பட்டு ராஜியை திட்டி உன்னுடைய முடிவு. நீ என்ன வேணாலும் செய்து கொள் என்று சென்று விடுகிறார். அதற்குப் பின் கதிர், ராஜியை தனியாக அழைத்து சென்று சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், ராஜி ஏற்றுக் கொள்வதாகவே இல்லை. மறுநாள் காலையில் ராஜி தயாராகி வருகிறார். அதை பார்த்த பாண்டியன், டான்ஸ் போட்டி பற்றி பேசாதே என்கிறார். அதற்கு ராஜி, அதை பற்றி தான் பேச வந்தேன் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது