பாண்டியன் சொன்ன வார்த்தையால் அப்பத்தா எடுத்த முடிவு, புலம்பும் கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மீனா வேலை செய்யும் இடத்திற்கு அவருடைய அம்மா வந்து இருந்தார். அப்போது வீட்டில் சமைத்த சாப்பாட்டை தன்னுடைய அம்மாவிற்கு மீனா கொடுத்தார். பின் இதை வீடியோ கால் மூலம் கோமதி இடமும் காண்பிக்க, அவர் ரொம்ப சந்தோசப்பட்டார். உடனே கோமதி, மீனாவின் அம்மாவை பார்க்க வந்து விட்டார். பின் இருவரும் மனது விட்டு பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போனார். அப்போது அவர், வேலைக்கு போகவில்லை என்று ஏதேதோ காரணங்களை சொல்ல, சரவணன் சம்மதித்தார்.
கதிரின் நிலைமையை நினைத்து அப்பத்தா ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அவர் வீட்டுக்கு வெளியில் வந்து நின்று பேச கோமதியை அழைத்தார். ஆனால், ஒருவழியாக அப்பத்தாவை வீட்டுக்குள் ராஜி-கோமதி அழைத்து சென்று இருந்தார்கள்.இதனால் மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருந்தது. கதிர் தன்னுடைய அப்பாவை பார்த்து பேசி இருந்தார். பின் இதை மீனா, செந்திலுக்கு போன் செய்து சொன்னார். இதனால் பாண்டியன், செந்தில் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அந்த சமயம் பார்த்து அப்பத்தா வெளியே வந்தார். அப்போது ராஜியின் அப்பா, சித்தப்பா எல்லோருமே வந்து விட்டார்கள். இதனால் கலவர பூமியாகி இருந்தது. ராஜியின் அப்பா, நீ உறவை ஒட்ட வைக்கிறாயா? இனிமேல் இந்த குடும்பத்திற்கு உனக்கும் எந்த சவகாசம் இல்லை என்று குலதெய்வ சாமி மீது சத்தியம் செய். ஒரு வேளை முடியாது என்றால் வீட்டை விட்டு வெளியே போ என்று மோசமாக தன்னுடைய தாய் என்று கூட பார்க்காமல் திட்டி இருந்தார்.
கடந்த வாரம் எபிசோட்:
இதனால் பாண்டியன், அவருடைய மகன்கள் எல்லோருமே அப்பத்தாவிற்கு சப்போர்ட் செய்தார்கள். ஆனால், ராஜியின் அப்பா, சித்தப்பா ஏற்றுக்கொள்ளவே இல்லை. ரொம்ப மோசமாக கோமதி, ராஜியை பேசி இருந்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில் ராஜிி அப்பா, சித்தப்பா இருவருமே மொத்தமாக எல்லோரையும் கேவலமாக பேச, தாங்க முடியாமல் பாண்டியன் கொந்தளித்து பேசுகிறார். அப்போது, எங்கள் வீட்டுக்கு வந்து விடுங்கள். நாங்கள் நன்றாக பார்த்துக் கொள்கிறோம் என்று அப்பத்தாவிடம் சொல்ல, எல்லோருமே அழைக்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
இதை எல்லாம் பார்த்து ராஜி அப்பா பயங்கரமாக கோபப்பட்டார். பின் இரு குடும்பத்தாரும் சண்டை போட்டு கொண்டார்கள். கடைசியில் அப்பத்தா, பாண்டியனிடம் கையெடுத்து கும்பிட்டு, என்னுடைய மகன்களுக்கு அந்த பாவத்தை நான் கொடுக்கவில்லை. நான் அவர்களுடன் போகிறேன் என்று வந்து விடுகிறார். இதனால் பாண்டியனும் அவருடைய குடும்பமும் ரொம்ப கவலைப்படுகிறது. கோமதி புலம்பி கொண்டு இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது பாண்டியன், கோமதிக்கு ஆறுதல் சொல்லி கிளம்புகிறார். இன்னொரு பக்கம் ராஜி அப்பா- சித்தப்பா இருவருமே வீட்டுக்குள் மீண்டும் தன்னுடைய அம்மா என்று கூட பார்க்காமல் திட்டி கொண்டு இருக்கிறார்கள். அப்போது அவர்கள், இதுதான் கடைசி, இனிமேல் நீ உறவை ஒட்ட வைக்கலாம் என்று பார்த்தால் எங்களை தலைமுழுகி விடு, இல்லை உன்னை தலைமுழுகி விடுவோம் என்று ரொம்ப மோசமாக பேசுகிறார்கள். இதனால் அப்பத்தா, என்ன சொல்வது என்றே புரியாமல் தவித்து நிற்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.