தங்கமயிலுக்கு காத்திருந்த அதிர்ச்சி, அப்பத்தா கேட்ட கேள்வியால் ஆடி போன பாண்டியன்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 26/12/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில் அப்பா, சர்டிபிகேட்டை திருட பாண்டியன் வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது பழனி, திருடன் என்று கத்த, வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விட்டார்கள். பாண்டியன் மற்றும் அவருடைய மகன்கள் வீடு முழுவதுமே சுற்றி தேடி பார்த்தார்கள். ஆனால், யாருமே இல்லை. தங்கமயில் அப்பா, பயந்து கொண்டு ராஜியின் அப்பா வீட்டில் ஒளிந்து கொண்டார். பின் ராஜியின் அப்பா, சித்தப்பா வெளியில் இருந்த தங்கமயிலின் அப்பாவை பார்த்து மிரட்டி கேட்டார்கள்.

அதற்கு அவர், நான் வழி தவறி வந்தேன். மன்னித்து விடுங்கள் என்று அழுது புலம்பி இருந்தார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. தங்கமயில் தன்னுடைய அப்பாவிற்கு என்ன ஆனது? என்று புரியாமல் தவித்து கொண்டிருந்தார். தங்கமயிலின் அப்பாவை பார்த்த அப்பத்தா, அவரை விட்டு விடுங்கள் என்று சொல்லியும், அவர்கள் பாண்டியனை அசிங்கப்படுத்த திட்டம் போட்டார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில் அம்மா, தன்னுடைய கணவரை தேடி அலைந்தார். அங்கு வந்த கதிரிடம், தன்னுடைய கணவர் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் கதிர், நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கிளம்புங்கள் என்று அவரை வீட்டில் விட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்தார். அப்போது ராஜியின் அப்பா வீட்டில் தங்கமயில் அப்பாவை கட்டி போட்டு இருப்பதை கதிர் பார்த்து விட்டார். அவர் கயிற்றை கழட்டும் போது சக்தி ப்ரச்சனை செய்தார். இந்த விஷயம் அறிந்த பாண்டியன் குடும்பமே வெளியே வந்து சண்டை போட்டார்கள். அதற்கு ராஜியின் அப்பா, சித்தப்பா இருவருமே அவர் எதற்கு இங்கு வந்தார்? என்ற உண்மை தெரியும் வரை விடமாட்டோம் என்றார்கள். உடனே தங்கமயில், தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து அங்கு வரவைத்தார்.

நேற்று எபிசோட்:

அப்போது அவர், தங்கமயில் பிறந்தநாளுக்கு சர்ப்ரைசாக வாழ்த்து சொல்லத்தான் வந்தார் என்றார். ஆனால், ராஜியின் அப்பா- சித்தப்பா இருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியில் அந்த இடத்திற்கு போலீஸ் வந்து விசாரக்க, நடந்ததை சொன்னார்கள். அதற்கு போலீஸ், இது உங்கள் பிற குடும்ப பிரச்சனை. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொன்னார். நேற்று எபிசோட்டில் பாண்டியன், பிறந்தநாளுக்கு நேரடியாக வந்து வாழ்த்து சொல்லி இருக்கலாம். எதற்கு தேவையில்லாத இந்த வேலை என்று சொல்ல, தங்கமயில் அப்பா- அம்மா எதுவும் பேசாமல் முடியாமல் அமைதியாக இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

பின் கோமதியின் அண்ணன் செய்த வேலைக்கு பாண்டியன் மன்னிப்பு கேட்டார். அதற்குப்பின் பாண்டியன் வேலைக்கு வர சொல்லிவிட்டார்கள். சர்டிபிகேட் எங்கே? என்று கேட்க, தங்க மயிலால் எதுவும் பேச முடியவில்லை. உடனே அவருடைய அம்மா, சர்டிபிகேட் தொலைந்து விட்டது என்று புது கதை ஒன்று சொன்னார். இருந்தும் விடாமல் பாண்டியன், தங்கமயிலை வேலைக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி, கதிர் மீது அக்கறை படுகிறார். பின் இருவரும் கல்லூரிக்கு கிளம்புகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் மீனா, அத்தை இடம் என்ன சொன்னீர்கள்? என்று கேட்டதற்கு, எனக்கு கஷ்டமாக இருக்கிறது. கதிர் அந்த மாதிரி வேணாம் என்று தான் சொன்னேன். நானும் எனக்கான ஒரு வேலையை தேடுவேன் என்று செந்தில் சொல்கிறார். இன்னொரு பக்கம் சரவணன், தங்கமயிலை வேலைக்கு அழைத்து போனார். அங்கு சர்டிபிகேட் இல்லை என்றாலும் பிரச்சனை இல்லை. நீங்கள் வேலையை பாருங்கள் என்று சொல்ல, தங்கமயில் பயத்தில் என்ன செய்வதென்றே புரியாமல் இருக்கிறார். இன்னொரு பக்கம் அப்பத்தா, கோமதியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பழனிக்கு திருமணத்தை செய்து வைக்க வேண்டும் என்று புலம்ப, பாண்டியன் எதுவும் பேச முடியவில்லை. உடனே கோமதி, அதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full