அப்பத்தா சொன்ன வார்த்தையால் பாண்டியன் எடுத்த முடிவு, அதிர்ச்சியில் பழனி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 10/1/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன் குடும்பமே பழனி நிச்சயதார்த்தத்திற்காக கோவிலுக்கு போய் இருந்தார்கள். அப்போது பழனியின் அம்மா, அண்ணிகள் எல்லாம் கோயிலுக்கு வந்தார்கள். அதை பார்த்தவுடன் பழனிக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால், பெண் வீட்டில் இருந்து யாருமே வரவில்லை. அப்போது பெண்ணினுடைய உறவினர் ஒருவர், இந்த நிச்சயதார்த்தம் நடக்காது. அவர்கள் வேணாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றவுடன் பாண்டியன் குடும்பமே அதிர்ச்சியானார்கள். பழனியால் எதுவுமே பேச முடியாமல் உறைந்து விட்டார். பின் செந்தில், சரவணன், தங்கமயில், மீனா ஆகிய நான்கு பேருமே பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்தார்கள்.

அப்போது அவர்கள், பழனி மளிகை கடையில் எடுபுடி வேலை செய்தார். உங்கள் குடும்பத்தில் நிறைய பிரச்சனை இருக்கு. எங்களுக்கு இந்த சம்பந்தம் தேவை இல்லை என்று பல காரணங்களை சொன்னார்கள்.
அவர்கள் எடுத்து சொல்லி புரிய வைத்துமே பெண் வீட்டார் ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு கோமதியின் அண்ணன்கள் சொல்லி தான் பெண் வீட்டார் நிச்சயதார்த்தத்திற்கு வரவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இதை அறிந்த பாண்டியன் குடும்பம் ரொம்ப வருத்தப்பட்டர்கள். பின் அப்பத்தா, வேதனையில் தன் மகன்களிடம் சண்டை போட்டார். ஆனால், அதைப் பற்றி எல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், பழனியையும் பார்த்து ஏளனமாக ராஜியின் அப்பா, சித்தப்பா இருவருமே பேசி இருந்தார்கள். அப்போது பாண்டியன், இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வதா? அவன் என்ன செய்தான்? என்று எல்லாம் ரொம்ப ஆவேசமாக கத்தி இருந்தார். கோமதியும் ஆத்திரம் பொறுக்காமல் தன்னுடைய அண்ணன்கள் இடம் சண்டைக்கு போனார். நேற்று எபிசோட்டில் ராஜியின் அப்பா, நீ பாண்டியன் குடும்பத்தில் இருக்கும் வரை உனக்கு கல்யாணம் நடக்காது. இங்கே வந்துவிடு என்று சொல்ல, எனக்கு கல்யாணம் நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நாங்கள் அவமானப்பட்டு வந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுங்கள் என்று சொல்லி பழனி கிளம்பி இருந்தார்.

நேற்று எபிசோட்:

கோமதியும் மனம் தாங்காமல் தன்னுடைய அண்ணன்களுக்கு சாபம் விட்டு போனார். பின் வீட்டில் எல்லோருமே நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே பழனி, கடைக்கு நேரமாகிறது கிளம்புங்கள் என்று சொல்லி சென்று விட்டார். கடையில் எதைப் பற்றியும் யோசிக்காமல் பழனி மும்முரமாக வியாபாரம் பார்த்தார். ஆனால், பாண்டியன்-செந்தில் இருவருமே பழனியின் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டார்கள். அப்போது கடைக்கு வருபவர்களுமே பழனியின் நிச்சயதார்த்தம் நின்று போனதை பற்றி தான் பேசி இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

அந்த சமயம் வந்த கதிர், பழனியை வெளியே அழைத்து கிளம்பி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் பழனி சோகத்தில் இருப்பதால் செந்தில், சரவணன், கதிர் மூவருமே அவருக்கு பியர் வாங்கிக் கொடுத்து கவலையை மறக்கடிக்க செய்கிறார்கள். இன்னொரு பக்கம் அப்பத்தா சோகத்தில் இருக்கிறார். உடனே அவருடைய இரண்டு மகன்களும், அவன் அங்கிருக்கும் வரை திருமணம் நடக்காது. இங்கே வர சொல்லு. நாங்கள் பார்த்துகிறோம். சொத்தை மூன்றாக பிரித்து வைக்கிறோம் என்றெல்லாம் அப்பத்தாவின் மனதை மாற்றுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இதனால் பாண்டியனை தனியாக சந்தித்த அப்பத்தா, தயவு செய்து என் மகனை வீட்டிற்கு அனுப்பி விடுங்கள். அவன் அங்கிருந்தால் திருமணம் நடக்காது என்று ரொம்ப எமோஷனலாக அழுது பேசுகிறார். அதைக் கேட்டு பாண்டியனும் மனமுடைகிறார். பின் வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பழனியும் எல்லாத்தையும் மறந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாண்டியன், நீ உன்னுடைய வீட்டிற்கு போய் விடு பழனி. இங்கிருந்தால் திருமணம் நடக்காது என்று சொன்னவுடன் எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full