ராஜிக்காக கதிர் செய்த வேலை, கோபத்தில் கொந்தளித்த பாண்டியன் - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 23/6/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் குமாரிடம் அரசி, என்னிடம் போடுவதற்கு துணிகள் இல்லை. ஷாப்பிங் பண்ணனும் என்று சொன்னார். அதற்கு குமார் முடியாது என்று திட்டி விட்டு வந்தார். அதற்குப்பின் முத்துவேலிடம் அரசி, எனக்கு துணி எடுக்கணும். குமாரை அழைத்துப் போக சொல்லுங்கள் என்று சொன்னார். உடனே முத்துவேல், அந்தப் பொண்ணு கேட்பதையெல்லாம் வாங்கி கொடு என்று சொன்னார். இதை பார்த்த சக்திவேல் சந்தேகப்பட்டு குமாரிடம் விசாரித்தார். அப்போது குமார், ராஜி சொன்னதை சொன்னார். அதற்கு சக்திவேல், நீ என்ன வேணாலும் செய். எல்லார் கண்ணிலும் ரத்தம் தான் வரவேண்டும் என்று தன் மகனை ஏத்தி விட்டார்.

இன்னொரு பக்கம் முத்துவேல்- சக்திவேல் இருவருமே ரோட்டில் நடந்து கொண்டு நடந்து வந்தார்கள். அப்போது எதிரே வந்த பாண்டியனை பார்த்த முத்துவேல், உங்களுடைய மகளுக்கு எந்த பிரச்சனையும் எங்கள் வீட்டில் இல்லை. என்னுடைய மகளுக்கும் பிரச்சினை வராது என நினைக்கிறேன் என்று சூசகமாக பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு பாண்டியன் எதுவும் சொல்லாமல் அமைதியாக சென்று விட்டார். இதை பார்த்த சக்திவேலுக்கு பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனுக்கு பார்த்து பார்த்து சமைத்து பரிமாறி இருந்தார். இருந்தாலுமே சரவணன் அதை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. கடைசியில் குமார், திட்டிக்கொண்டே அரசியை அழைத்துக் கொண்டு துணி கடைக்கு போனார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அரசி, ஒவ்வொரு துணியாக வைத்து பார்த்து குமாரை வெறுப்பேத்திக் கொண்டிருந்தார். இதனால் குமார் கடுப்பாகி வீட்டிற்கு சென்று விட்டார். அரசி தனக்கு தேவையான ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். பின் வீட்டிற்கு வந்த குமார், தன்னுடைய அப்பாவிடம் தினம் தினம் அரசி செய்யும் சேட்டைகள் எல்லாம் சொல்லி கொண்டிருந்தார். இதனால் கோபப்பட்ட சக்திவேல், நீ அவளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அவள் வடிக்கிற ஒவ்வொரு கண்ணீருக்கும் பாண்டியனுக்கு ரத்தம் வரவேண்டும் என்றெல்லாம் தன் மகனை ஏற்றி விட்டார். பின் குமார், அரசியை துணி கடையில் விட்டு வந்த விஷயத்தை சொன்னவுடன் சக்திவேல் சந்தோஷப்பட்டார்.

கடந்த வாரம் எபிசோட்:

இன்னொரு பக்கம் அரசி துணியெல்லாம் எடுத்துவிட்டு குமார் கார்டை வைத்து மொத்த பணத்தையும் கொடுத்து விட்டார். பின் அக்கவுண்டில் இருந்து பணம் போன விஷயம் தெரிந்த உடன் குமார் பதறி அடித்துக் கொண்டு துணி கடைக்கு வந்தார். அப்போது அரசி, எவனாவது பின் நம்பரை போனில் சேவ் பண்ணி வைத்திருப்பானா? என்று சொன்னார். கோபத்தில் குமார், துணியைக் கொண்டு போய் கடையில் கொடு என்றார். ஆனால், அரசி முடியாது என்று சொன்னார். இன்னொரு பக்கம் தங்கமயிலை வீட்டில் உள்ள எல்லோருமே பார்த்து பார்த்து கவனித்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர், ராஜியை வெளியே அழைத்துச் செல்ல போகிறார். அப்போது கோமதி, எதற்கு? என்று கேட்கிறார். கதிர் ஏதேதோ காரணங்களை சொல்லி ராஜியை அழைத்துக் கொண்டு போகிறார். பின் ராஜியை அகாடமியில் சேர்த்து விடுகிறார் கதிர். அப்போது கதிர், எப்படியாவது ராஜி எஸ் ஐ ஆக வேண்டும். நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் என்று அங்கு சொல்கிறார். உடனே அகாடமி பொறுப்பாளர், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார். பின் ராஜி, பீஸ் எப்படி கட்டினாய்? என்று கேட்கிறார். கதிர், நான் பார்த்துக் கொள்கிறேன். நீ தைரியமாக படி என்கிறார். அதற்கு பின் பாண்டியன், நீ அரிசியை எதற்காக கொடுமைப்படுத்துகிறாய்? அவளை நல்லபடியாக நடத்து.

சீரியல் ட்ராக்:

இத்தனை வருடத்தில் முத்துவேல் என்னை பார்த்துக் கூட பேசியதில்லை. தன் மகளுக்காக மனம் உடைந்து பேசுகிறார் என்று சொல்கிறார். கதிர், நான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்லியுமே பாண்டியன் நம்பவில்லை கதிரை தான் திட்டுகிறார். பின் இதைப்பற்றி கதிர், ராஜிடம் பேசுகிறார். அப்போது ராஜி, நான் தான் குமாரை சந்தித்து பேசினேன். ஆனால், குமார் நான் சொல்வதை கேட்கவில்லை. அதற்கு பிறகு என்னுடைய அப்பாவை சந்தித்து நீங்கள் அரசியை ஒழுங்காக பார்த்துக் கொண்டால் என்னையும் அந்த வீட்டில் நன்றாக பார்த்துக் கொள்வார்கள். இல்லை என்றால் நான் கஷ்டப்பட வேண்டி இருக்கும் என்று சொன்னேன். அதனால்தான் அவர் அப்படி பேசி இருக்கிறார் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full