சுகன்யாவின் முகத்திரையை கிழித்த மீனா-ராஜி, அதிர்ச்சியில் பாண்டியன் குடும்பம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 18/7/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் குமாரின் அப்பா, அவளை பாண்டியன் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வெளியே இருந்து கத்தினார். உடனே அரசி வெளியே வந்தார். அப்போது பாண்டியன், எனக்காகவும் குடும்பத்திற்காகவும் தான் நீ இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறாயா? எதற்காக இப்படி செய்தாய் என்று கேட்டார். அரசி, நடந்த எல்லாவற்றையும் சொல்லி தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார். உடனே குமாரும், குமாரின் அப்பாவும் பாண்டியனையும் அரசி பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார்கள். இதனால் கோபப்பட்ட கதிர், குமாரை வெளுத்து வாங்கி இருந்தார்.

அதற்குப்பின் அப்பத்தா, இவர்கள் இருவருக்குமே திருமணம் நடந்து விட்டது என்று ஊர் நம்பிக்கொண்டிருக்கிறது. தயவு செய்து திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று சொன்னார். பாண்டியன், ஊர் உலகத்திற்காக என் மகளின் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை. திருமணமாகாமல் கடைசிவரை என் மகளாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த அயோக்கியனுக்கு என் மகளை கட்டி வைக்க மாட்டேன். அப்பா உடனே வந்துவிடு அரசி என்று சொன்னார். இதனால் அரசியுமே தன்னுடைய அப்பாவுடன் செல்ல முடிவெடுத்தார். அதற்குப்பின் அரசி தாலியை கழட்டி குமாரின் முகத்தில் வீசி எறிந்து விட்டு அங்கிருந்து சென்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் அரசியை பாண்டியன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே அரசியை இப்படி செய்ததைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியில் பாண்டியன், இந்த விஷயத்தை இதோடு விடுங்கள். இனிமேல் அரசி திருமணத்தைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று சொன்னார். அரசியும் தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு, உங்கள் மீது இருந்த பயத்தால் தான் உண்மையை சொல்ல முடியவில்லை என்றார். இன்னொரு பக்கம் முத்துவேல், குமார் செய்த வேலைக்கு அடித்தார். இதனால் கோபப்பட்ட சக்திவேல், என் மகனை எதற்காக அடிக்கிறீர்கள்? அவன் செய்தது தான் சரி.

நேற்று எபிசோட்:

உங்கள் மகள் ஓடிப்போய் மானத்தை வாங்கி விட்டாள் என்று மீண்டும் தரகுறைவாக ராஜியை பற்றி பேசி இருந்தார். இதனால் கொந்தளித்த முத்துவேல், மூணு பேரை உன் மகன் கடத்திருக்கிறான். அவன் செய்வதற்கெல்லாம் நீ சப்போர்ட் செய்கிறார் என்று சொல்வதால் அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. உடனே அப்பத்தா, அவர்களை தடுத்து நிறுத்தி விட்டார். கடைசியில் மீனா, ராஜி, அரசி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அரசி, நான் குமாரை பழி வாங்கவும், நம்ம வீட்டின் மீது இருந்த பயத்தால் தான் அங்கு போனேன். நான் தான் அவனை டார்ச்சர் செய்து கொண்டிருந்தேன். இப்போது அவன் ரொம்ப நிம்மதியாக இருப்பான் என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சந்தோஷத்தில் பாண்டியன் எல்லோருக்குமே பரோட்டா, சிக்கன் வாங்கி வந்திருக்கிறார். பின் எல்லோரையும் உட்கார வைத்து ஒவ்வொருவருக்குமே கையில் சாப்பாடு கொடுக்கிறார் பாண்டியன். அதற்கு பின் பாண்டியன், நீ எப்படி குமார் இடத்திற்கு போனாய்? என்று கேட்கிறார். அரசியால் எதுவுமே பேச முடியவில்லை. அப்போது மீனா, ராஜி இருவருமே இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் சுகன்யா தான் என்று சொல்லிவிடுகிறார்கள். சுகன்யா ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை அரசி வாழ்க்கையில் செய்ததை ஒன்று விடாத சொல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

சுகன்யாவும் இல்லை என்று சமாளிக்கிறார். இருந்தாலுமே சுகன்யா சொல்வதில் உண்மை இல்லை என்பது பாண்டியன் குடும்பத்திற்கு தெரிகிறது. அப்போது மீனா, குமார் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை காட்டி மிரட்டியதனால் தான் சுகன்யா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் அரசியை கொண்டு போய்விட்டார். அதற்கு பின் குமாரை கல்யாணம் செய்து கொள் என்று கட்டாயப்படுத்தியதும் சுகன்யா தான் என்று அடுக்கடுக்காக சுகன்யா மீதான குற்றசாட்டுகளை சொல்கிறார்கள். இதனால் பாண்டியன் குடும்பமே ஷாக் ஆகிறது. கோபத்தில் பழனி, சுகன்யாவை திட்டுகிறார். அதற்குப்பின் கோமதி, சுகன்யாவிடம் பேச வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full