தங்கமயிலுக்கு சரவணன் வைத்த ஆப்பு, ராஜிக்கு வந்த புது சோதனை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சரவணன், வேற ஏதாவது என்னிடம் மறைக்கிறாயா? அந்த வேலை செய்யும் இடத்தில் ப்ரூப் ஏதாவது கொடுத்திருக்கிறாயா? என்று கேட்டு இருந்தார். தங்கமயில் எதுவுமில்லை என்று சொன்னார். அதற்கு சரவணன், நான் டூப்ளிகேட் சர்டிபிகேட்டை தயார் செய்கிறேன். வேறு வேலையை பார்க்கலாம், அங்கிருந்து கிளம்பு என்று சொன்னார். தங்கமயிலும் கோமதியிடம் ஏதேதோ காரணங்களை சொல்லி அங்கு கிளம்பி விட்டார். அதற்குப்பின் ராஜி, எப்படியாவது நடன போட்டியில் கலந்து கொண்டு ஜெயிக்க வேண்டும் என்று பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து மீனா, என்ன நடக்கிறது என்று கேட்டார்.
அதற்கு ராஜி, எப்படியாவது அனுமதி வாங்கி தாருங்கள் என்று கெஞ்சி இருந்தார். மீனா, நடனப் போட்டியை பற்றி பேச, கோமதி கோபப்பட்டார். உடனே மீனா, நாம் கோயிலுக்கு வரவேண்டும், ராஜி நடனம் ஆட வேண்டும் என்பது சாமி போட்ட முடிச்சு. இல்லை என்றால் சாமி கண்ணை குத்தி விடும் என்று ஏதேதோ சொல்லி கோமதியின் மனதை மாற்றி விட்டார். ஒரு வழியாக கோமதியும் நடனத்திற்கு சம்மதித்து விட்டார்.
இன்னொரு பக்கம் பாண்டியன், கார் வாங்குவதற்காக செந்திலை பேங்கிற்கு சென்று பணத்தை எடுத்து வர சொன்னார். அப்போது போன் செய்த மீனாவின் அப்பா, வேலையைப் பற்றி பேச செந்திலை அழைத்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் மீனாவின் அப்பா, அரசாங்க வேலையை பற்றியும், செந்தில் செய்யும் மளிகை வேலையை பற்றியும் வித்தியாசப்படுத்தி பேசி இருந்தார். எதுவும் சொல்ல முடியாமல் செந்தில் அமைதியாக இருந்தார். அந்த சமயம் பார்த்து போன் செய்த பாண்டியன், பணத்தை எடுத்து வர சொல்லி கத்தினார். அதனால் செந்தில் கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் அரசியை பார்ப்பதற்காக மாப்பிள்ளை அந்த இடத்திற்கு வந்து விட்டார். பின் அரசி- மாப்பிள்ளை இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
அப்போது அரசி, குமாரை காதலித்த விஷயத்தை சொன்னவுடன் அவரால் எதுவும் பேச முடியவில்லை. அங்கு இருந்து கிளம்பி விட்டார். பின் மீனா, என்ன நடந்தது? என்று கேட்க, குமார் விஷயத்தை அரசி சொன்னார். இதனால் அதிர்ச்சியில் மீனா அமைதியாகி விட்டார். இன்னொரு பக்கம் பேங்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வந்த செந்தில் தன்னுடைய மாமனாரை சந்தித்தார். பின் அரசாங்க வேலைக்கு ஆள் ஏற்பாடு செய்யும் ஒரு நபரை அறிமுகம் செய்து வைத்தார். செந்தில் தங்கைக்காக எடுத்து வந்த பணத்தை மீனா அப்பாவிடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில், பாண்டியன் சொன்னதை நினைத்து பார்த்து பணத்தை மீனா அப்பாவிடம் கொடுக்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். பாண்டியன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது சரவணன், தங்கமயில் ஊருக்கு கிளம்பி வரும் விஷயத்தை சொல்கிறார். உடனே பாண்டியன், எதற்கு ஏன்? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து தங்கமயில் வந்து விடுகிறார். அப்போது அவர், வேலையில் லீவு கிடைக்கவில்லை. அதனால் வந்து விட்டேன் என்று சொன்னார். உடனே பாண்டியன், அந்த வேலையே வேண்டாம். லீவு எதுவுமே கிடைக்கவில்லை. ரொம்ப லேட்டாக வருகிறாய் என்று சொல்லிவிடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பின் சரவணன், நீ படித்த கல்லூரி, ஸ்கூல் என எல்லா டீடைலும் எனக்கு கொடு. நான் உனக்கு சர்டிபிகேட் ரெடி பண்ணி தருகிறேன் என்று சொன்னவுடன் தங்கமயில் ரொம்பவே பதறுகிறார். இன்னொரு பக்கம் நடன போட்டியில் கலந்து கொள்ள ராஜி பெயர் கொடுக்கிறார். பின் போட்டியில் ஒவ்வொருவருமே சிறப்பாக நடனமாடுகிறார்கள். அப்போது ராஜி மேடைக்கு வந்த உடனே அவரைப் பற்றி விசாரிக்கிறார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் வெளியூர் ஆட்களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்றெல்லாம் கத்துகிறார்கள். ராஜிக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் அமைதியாக நிற்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.