கதிருக்காக சண்டைக்குப் போன ராஜி, தங்கமயிலின் அம்மாவை அசிங்கப்படுத்திய குழலி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 10/12/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் போலீஸ் ஸ்டேஷனில் கதிரை பார்த்து பாண்டியன் ரொம்ப எமோஷனல் ஆகி இருந்தார். அப்போது வந்த ராஜியின் சித்தப்பா, பாண்டியன் குடும்பத்தை பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதற்கிடையில் கதிர், நீங்கள் அந்த பெண்ணை கண்டுபிடித்தால் தான் நான் வெளியே வருவேன் என்று செந்தில் இடம் ஐடியா கொடுத்தார். அதற்கு பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன ராஜி, கதிருக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். பின் செந்தில்- சரவணன் இருவருமே கதிர் கடத்தியதாக சொன்ன பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

அந்த பெண், தன்னுடன் படிப்பவர்கள் தான் கடத்தி வைத்ததாக சொன்னவுடன் போலீஸ் கதிரை விட்டது. பாண்டியன் கோபத்தில் போலீசை திட்டி இருந்தார். மேலும், பாண்டியன் தன்னுடைய மகனை, ராஜியின் அப்பா வீட்டிற்கு அழைத்து சென்று தான் விட்ட சவாலில் வெற்றி பெற்றதை சொல்லி பெருமையாக பேசி இருந்தார். இதனால் ராஜி அப்பா, சித்தப்பாவால் எதுவுமே பேச முடியாமல் அமைதியாக இருந்தார்கள். அதற்கு பின் தன்னுடைய மகனை பாண்டியன் வீட்டிற்கு அழைத்துப் போனார். அங்கே எல்லோருமே கதிரை விசாரித்து அக்கரையாக பேசி இருந்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் பாண்டியன் எல்லோரும் கடைக்கு போகணும் என்று சொன்னவுடன் மீனா, எல்லோரும் லீவு போட்டுவிடலாம் என்றார். இதனால் பாண்டியன் கோபமாக பார்த்தார். நேற்று எபிசோட்டில் பாண்டியன், எல்லா வேலையும் அப்படியே நிற்கிறது. லீவு போட்டால் எப்படி நடக்கும்? எல்லோரும் அவரவர்கள் வேலையை பாருங்கள் என்று திட்டி அனுப்பி விட்டார். எல்லோரும் மனசே இல்லாமல் வேலைக்கு கிளம்பி இருந்தார்கள். பின் பாண்டியன், கோமதியிடம் அவனுக்கு பழங்கள், கறியெல்லாம் சமைத்துக் கொடு என்று அறிவுரை சொல்லி இருந்தார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் கதிருக்கு உடம்பு முழுவதும் அடிபட்டு இருப்பதை பார்த்த ராஜு ரொம்ப வருத்தப்பட்டார்.
அந்த சமயம் வந்த கோமதியும், கதிர் நிலை பார்த்து கதறி அழுதார். பின் தன்னுடைய மகனுக்கு ஆறுதல் சொல்லி ஒத்தடம் போட்டார். மறுநாள் சோசியல் மீடியா, டிவி என அனைத்திலும் கதிர் செய்த சாகசம் குறித்த தகவல் தான் வைரலாகி வருகிறது. இதை பார்த்து மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் கதிர் செய்த சாதனையை பெருமையாக நினைத்து ராஜி, தன்னுடைய அப்பாத்தாவிடம் சொல்ல அவர் வீட்டில் வெளியே கத்திக் கொண்டிருக்கிறார். இதனால் எல்லோருமே அங்கு வந்து விட்டார்கள். அந்த சமயம் பார்த்து ராஜி சித்தப்பா, எதற்கு கத்துகிறார் என்று கேட்டதற்கு, கதிர் எந்த தவறும் செய்யவில்லை. வீடியோவை பாருங்கள் என்று சொல்ல, அவரால் எதுவும் பேச முடியவில்லை. அதன் பின் அப்பத்தா, கதிர் செய்த சாகச வீடியோவை டிவியில் போட்டு பார்க்கிறார். பின் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது பாண்டியன், கதிரை பார்த்து ரொம்ப வருத்தப்பட்டு அழுகிறார்.

சீரியல் ட்ராக்:

அவர் சென்றவுடன் கதிர் தன்னுடைய அப்பா வருத்தப்பட்டதை நினைத்து பீல் பண்ணுகிறார். பின் குழலி, கதிரை பார்க்க வீட்டிற்கு வந்து பயங்கர எமோஷனலாக பேசுகிறார். அந்த சமயம் பார்த்து தங்கமயிலின் அப்பா அம்மாவும் வருகிறார்கள். அவர்களை வேண்டும் என்று குழலி வம்பு இழுக்கிறார். பின் அவர் தன் தம்பிக்காக மட்டன் குழம்பு, இட்லியை பரிமாறுகிறார். உடனே தங்கமயில் அம்மா, நாட்டுக்கோழி குழம்பை தம்பிக்கு வை என்று சொன்னவுடன், கோழி எல்லாம் யாராவது தின்னுவாங்களா? ஓரமா போங்க என்று நக்கலாக குழலி பேசுகிறார். இதனால் அவர்களுடைய முகமே மாறுகிறது. இத்துடன் சீரியல் முடிவடைகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full