ராஜியை அழைத்து செல்ல வந்த முத்துவேல், கதிரின் முடிவு என்ன? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன் செய்த செயலை நினைத்து அரசிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், கோமதி தான் டென்ஷன் ஆனார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், நான் தவறு செய்து விட்டேனா என்று கேட்டார். கோமதி, பாண்டியனை திட்டினார். உடனே அரசி, என் அப்பா எனக்காக தான் செய்தார். எனக்கு சந்தோசமாக இருக்கிறது என்றார். அதற்கு பின் வீட்டில் உள்ள எல்லோருமே பாண்டியன் செய்த செயலை பாராட்டி புகழ்ந்து பேசி இருந்தார்கள்.
பாண்டியன் வீட்டில் எல்லோருமே கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது செந்தில், நீ அப்பாவை புகழ்ந்து பேசுவதெல்லாம் ஓவர் என்று சொன்னார். அதற்கு அரசி, அப்பா செய்தது முழுக்க முழுக்க சரிதான் என்று ரொம்ப பெருமையாக தன்னுடைய தந்தையை பற்றி பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ரூமில் தங்கமயில், தன்னுடைய கணவர் ஏதாவது சர்ப்ரைஸ் செய்வார் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார். ரூமிற்கு வந்த சரவணன், ஏதோ ஒரு பொருளை தேடிக் கொண்டிருந்தார். ஆனால், தங்கமயில் தனக்கான பொருள் தான் தேடுகிறார் என்று தப்பாக புரிந்து கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் தங்கமயில், எனக்காக எதுவும் வாங்கி வரவில்லையா? சர்ப்ரைஸ் என்று சொன்னீர்கள் என்றார்.
அதற்கு சரவணன், அதை பெரிதாக பொருட்படுத்தவே இல்லை. எந்த கிப்டும் கொடுக்கவில்லை. இதனால் தங்கமயில் ரொம்பவே வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் ரூமில் கதிர், ராஜி இருவரும் ஜாலியாக குழந்தைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், எதார்த்தமாக உன்னுடைய குழந்தையை என்னை எப்படி கூப்பிடும்? என்று சொல்ல, உடனே ராஜி கோபப்பட்டு திட்டி விட்டு சென்றார். அதற்கு பின் தான் கேட்ட கேள்வி தப்பு என்று கதிருக்கு புரிந்தது.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் வடிவு, ராஜி-அரசி வாழ்க்கையில் நடந்தது எல்லாமே ஒன்று தான். அரசியே தாலி கட்டிக் கொண்டாள். ஆனால், ராஜிக்கு கதிர் தாலி கட்டினார். இருந்தாலும் விருப்பமில்லாமல் நடந்த கல்யாணம். ராஜியை நம்ம வீட்டிற்க்கே அழைத்து வந்துவிடலாம் என்று சொன்னார். இதைக்கேட்டு முத்துவேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். மறுநாள் காலையில் ராஜி, மீனா, தங்கமயில் மூவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தங்கமயில், அரசி வீட்டிற்கு வந்த மாதிரியே ராஜியும் அவள் அம்மா வீட்டிற்கு சென்று விடுவாளா? என்று கேட்டவுடன் ராஜி பயங்கரமாக கோபப்பட்டு உள்ளே சென்று விட்டார்.
சீரியல் டிராக்:
பின் கோமதி, ராஜி எதற்கு அம்மா வீட்டிற்கு போகவேண்டும் என்று தங்கமயிலை திட்டி விட்டார்.
அதற்குப்பின் ரூமில் ராஜி, வெளியில் நடந்ததை கதிரிடம் சொல்லி ஃபீல் பண்ணி பேசி இருந்தார். உடனே கதிர், உனக்கு உன் அம்மா வீட்டிற்கு போக வேண்டும் என்றால் சொல் நானே கொண்டு போய் விடுகிறேன் என்று சொன்னார். இதனால் ராஜிக்கு இன்னும் கோபம் அதிகமானது. அதற்குப்பின் ஜாமினில் வெளியே குமார் வந்ததை பார்த்த சரவணன், தன்னுடைய அப்பாவிடம் சொன்னார். பின் வடிவு, நாங்கள் ராஜியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர இருக்கிறோம் என்று சொன்னார். இதனால் குமார் ஷாக் ஆனார்.
https://www.youtube.com/watch?v=Jt8TC14Ix1Y
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பாண்டியன் வீட்டிற்கு வெளியே வடிவு, முத்துவேல் இருவருமே ராஜியின் பெயரை சொல்லி கூப்பிடுகிறார்கள். அப்போது வடிவு, இங்கு இருக்க வேண்டாம். நம்ம வீட்டுக்கு போகலாம் என்று ராஜியை கூப்பிடுகிறார்கள். உடனே ராஜி, கதிரிடம் சென்று கேட்கிறார். அதற்கு கதிர், உன்னுடைய விருப்பம் என்று சொல்கிறார். பின் வெளியே வந்த ராஜி, கதிர் என் கழுத்தில் தாலி கட்டிருக்கிறான். என்னால் இந்த வீட்டை விட்டு வர முடியாது. எங்களுடைய கல்யாணம் ரிஜிஸ்டர் செய்திருக்கிறது என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் கதிர் ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.