நடன போட்டியில் ராஜி பைக்கை வென்றாரா? கண்கலங்கிய கதிர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 3/5/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கோமதி, நானே பழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலுக்கு போய் விடுவேன் என்று சொல்லி ரொம்ப எமோஷனலாக சொல்லி புலம்பி கொண்டிருந்தார். உடனே கதிர், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நாம் நல்லபடியாக எல்லோரும் வீட்டுக்கு வருவோம் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் கோமதி, நீங்கள் அமைதியாக இருங்கள். நான் ஜெயிலுக்கு போய்விட்டால் அரசி கல்யாணத்தை மட்டும் எப்படியாவது நடத்தி விடுங்கள் என்று எமோஷனலாக பேசி இருந்தார். அப்போது குமாரின் கையசைவதை ராஜி பார்த்து எல்லோரிடமும் சொன்னார். பின் குமாருக்கு பேச்சு மூச்சு இருப்பது தெரிந்தது.

இதனால் மொத்த பேருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். உண்மையை சொல்வதற்கு கதிருக்கு போன் செய்த ராஜி, குமார் உயிரோடுதான் இருந்தார். அவன் இறக்கவில்லை மூச்சு விடுகிறான் என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் கதிர், செந்திலுக்கு உயிர் வந்தது. உடனே கதிர், எல்லோரும் ரூமை விட்டு வெளியே வந்து விடுங்கள். நாங்கள் வந்து விடுகிறோம் என்று சொன்னார்கள். இதனால் எல்லோருமே குமார் ரூமை விட்டு வெளியே வந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். பின் நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது வந்த கதிர், செந்தில் இருவரும் எல்லோரையும் சமாதானம் செய்துவிட்டு குமார் ரூமிற்கு சென்று அவரை தண்ணீர் தெளித்து எழுப்பி இருந்தார்கள். மயக்கத்தில் இருந்த குமாரும் தண்ணீர் பட்டவுடன் எழுந்து விட்டார். பின் கதிர், செந்தில் இருவரும் குமாரை விசாரித்தார்கள். மாட்டிக் கொண்டால் என்ன பண்ணுவது என்று அவர்களை தள்ளிவிட்டு குமார் ஓடிவிட்டார். குமாரை துரத்திக் கொண்டு கதிர்-செந்தில் போனார்கள். இருந்தாலும் குமார் தப்பித்து விட்டார். பின் வீட்டில் எல்லோருமே நடந்ததை நினைத்து எமோஷனலாக பேச கதிர், செந்தில் இருவரும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்கள்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் ராஜி- கதிர் இருவருமே குமார் விஷயத்தைப் பற்றியும், நடன போட்டியை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் ராஜிக்காக துணி வாங்க கதிர் கடைக்கு சென்று இருந்தார் அதற்குப்பின் எல்லோருமே நடன போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று விட்டார்கள். அப்போது அங்கு இருந்த இளைஞர்கள் ராஜிவிடம் போன் நம்பரை கேட்டு வம்பு இழுத்தார்கள். உடனே கதிர்- செந்தில் இருவருமே அந்த இளைஞர்களை அடித்து துரத்தி விட்டார்கள். அதற்கு பின்பு நடனப் போட்டியில் ஒவ்வொருவருமே வித்தியாசமாக நடனம் ஆடி இருந்தார்கள். ராஜி என்ன செய்வார் என்று கதிர் யோசித்துக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி, அம்மன் பாட்டிற்கு நெருப்பு சட்டி எல்லாம் வைத்து பயங்கரமாக ஆடுகிறார். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நடனம் ஆடுவதால் வீட்டில் உள்ள எல்லோருமே பயப்படுகிறார்கள். பின் ஒரு வழியாக அந்த போட்டியில் ராஜி வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், செந்தில்- கதிர் இருவரும் சொல்லாமல் கோவிலுக்கு சென்றதை பற்றி வீட்டில் திட்டிக் கொண்டிருக்கிறார். பின் சரவணன், சர்டிபிகேட் எங்கே? கொண்டு வந்து கொடுத்தால் தானே வேலை விஷயமாக பேச முடியும் என்று கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:

தங்கமயிலால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். கடைசியில் இறுதி சுற்றில் ராஜி நன்றாக நடனமாடுகிறார். பின் இரண்டாம் பரிசு வேண்டும் என்பதால் கொஞ்சம் தடுமாறியது போல் நடித்து விடுகிறார் ராஜி. வீட்டில் உள்ள எல்லோருமே ஏன்? என்னாச்சு? என்று பதறுகிறார்கள். அதற்கு ராஜி, கொஞ்சம் ஸ்டெப்பை மறந்து விட்டேன் என்கிறார். கடைசியில் ராஜி ஆசைப்பட்டது போல் பைக் வென்று விடுகிறார். இதை பார்த்த கதிர், நமக்காக தான் இவள் இவ்வளவு கஷ்டப்பட்டாலே என்று நினைத்து கண்கலங்குகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full