சக்தி விரித்த வலையில் சிக்குவாரா அரசி? எதிர்ப்பாராத திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 19/1/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மனம் இல்லாமல் வேதனையில் பழனி தன் அண்ணன்கள் வீட்டிற்கு போனார். அப்போது மாரி, பாண்டியனிடம் அப்பத்தா சொன்ன விஷயத்தை சொன்னவுடன் பழனி ஷாக் ஆகி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இதனால் பழனி, தன்னுடைய அண்ணன்கள் வீட்டில் இருக்க முடியாமல் பாண்டியன் வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். பின் ப்ராக்டிஸ் செய்ய கதிர்- ராஜி இருவருமே கிரவுண்டுக்கு சென்று இருந்தார்கள். அங்கு பாண்டியன் கடை விஷயமாக ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர், உங்கள் மருமகள் போலீஸாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு தெரியாதா? என்று கேட்டவுடன் பாண்டியன் ஷாக் ஆனார். பின் இருவருமே கிரவுண்டில் பயிற்சி எடுத்திருப்பதை பார்த்து கோபப்பட்டு அங்கிருந்து பாண்டியன் கிளம்பி விட்டார். பின் அவர், வீட்டில் எல்லோரிடமும் நடந்ததை சொல்ல, என்ன செய்வது? என்று புரியாமல் எல்லோருமே அமைதியாக இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து கதிர்-ராஜி வீட்டிற்கு வந்தார்கள். அப்போது அவரிடம் நடந்ததை பாண்டியன் கேட்க, கதிர் உண்மை எல்லாம் சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

உடனே பாண்டியன், போலீஸ் வேலை தேவையில்லை. வேறு ஏதாவது வேலை செய் என்று சொன்னார். அதற்கு கதிர், முடியாது. அது ராஜியின் கனவு. நான் அவளுக்கு உறுதுணையாக நிற்பேன். யார் எது சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று தன்னுடைய தந்தையிடம் எதிர்த்து பேசி இருந்தார். பின் கதிர்- பாண்டியன் இருவருக்குமே வாக்குவாதம் முற்றியது. இதை எல்லாம் பார்த்த ராஜி, நான் போலீஸ் ஆகவில்லை என்று கதிரிடம் சொல்ல, அவர் கோபப்பட்டார்.

நேற்று எபிசோட்:

நேற்றைய எபிசோட்டில் கதிர், ராஜிக்கு எடுத்த சொல்லி புரிய வைத்தார். ராஜியும் தான் போலீசாகும் கனவில் உறுதியாக இருக்கிறார். அந்த சமயம் வந்த கோமதி, பாண்டியனுக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். உடனே கோபத்தில் கதிர், எனக்கு பிடிக்காத கல்யாணத்தை செய்து வைத்தாய். ராஜியின் கனவை அழிக்கப் பார்க்கிறாய். எங்களுடைய விருப்பத்தை யோசிக்க மாட்டீர்களா? என்று கேட்டவுடன் கோமதியால் எதுவுமே பேச முடியவில்லை. அங்கு இருந்து கிளம்பி விட்டார்.

சீரியல் ட்ராக்:

பின் ராஜி, கதிர் தனக்காக சப்போர்ட் செய்து பேசுவது எல்லாம் நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் பள்ளியில் தங்கமயில், பிள்ளைகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தலைமை ஆசிரியர், டூப்ளிகேட் சர்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் அவர் ரொம்பவே பயந்தார். பின் மீனா வேலை செய்யும் இடத்திற்கு அவருடைய அம்மா வந்திருந்தார். அவர் பொங்கல் சீராக பணத்தை கொடுத்து நகை வாங்க சொல்ல, மீனா வாங்கவே இல்லை. இதனால் மீனா அம்மா வருத்ததுடன் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

https://www.youtube.com/watch?v=2tAdMXAUWzM

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் அரசி கல்லூரிக்கு செல்ல, பஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த சக்தி, பஸ் பிரேக்கிங் டவுன் ஆகிவிட்டது. நான் காலேஜில் விடுகிறேன், வந்து வண்டியில் ஏறு என்று சொல்கிறார். அதற்கு அரசி, தயவு செய்து இங்கிருந்து கிளம்புங்கள். உங்கள் வீட்டிற்கும் எங்கள் வீட்டிற்கும் ஆகாது என்று சொல்கிறார். சக்தி, ராஜி கல்யாணம் செய்து கொண்டதால் தான் சண்டை போடுகிறார்கள். நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்று சொல்கிறார். உடனே அரசி, என்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்கிறேன். என்று சொன்னவுடன் அவர் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full