கோபத்தில் சக்திவேல் விடும் சவால், பாண்டியன் என்ன செய்ய போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 23/7/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கதிர், செந்தில் இருவருமே குமார் மீது பயங்கரமாக கோவப்பட்டு பேசி இருந்தார்கள். அதற்கு பாண்டியன், நான் போலீசில் சொல்கிறேன். குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்வதால் கதிர் அமைதியாகி விட்டார். அதற்குப்பின் ரூமிற்கு சென்ற பழனி இடம் சுகன்யா வேண்டும் என்று வம்பு இழுத்தார். இதனால் கோபப்பட்ட பழனி, என்னை பற்றி தான் எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. இனிமேல் என்னை பயமுறுத்தும் வேலை வைத்துக் கொள்ளாதே. உன்னை திருமணம் செய்த நாளில் இருந்து இப்போது வரை நான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.

என்னை கஷ்டப்படுத்தினால் தாங்கி கொள்வேன். ஆனால், என் குடும்பத்திற்கு ஒன்று என்றால் தாங்கி கொள்ளமாட்டேன். உனக்கு இங்க பிடிக்கவில்லை என்றால் இந்த வீட்டை விட்டு கிளம்பு என்று சுகன்யாவை எதிர்த்து பேசி இருந்தார். அதற்குப்பின் பாண்டியன், சுகன்யாவை அழைத்து பேச, கோமதிக்கு இன்னும் கோவம் அதிகமானது. அப்போது பாண்டியன், இனிமேல் இந்த வீட்டில் நீ எந்த தவறும் செய்யக்கூடாது. இந்த வீட்டிற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். அதேபோல் கணவன் மனைவிக்குள் சண்டை வருவது சகஜம்தான். ஆனால், பழனிக்கு நீ கொடுக்க வேண்டிய மரியாதை கொடுத்தது தான் தீர வேண்டும் என்று சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் கதிர், செந்தில், மீனா, ராஜி நான்கு பேருமே குமார் செய்த வேலையை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் வந்த குமார் வேணும் என்று கதிர்,செந்திலை வம்பு இழுத்தார். இதனால் ஆத்திரம் தாங்காமல் கதிர்,செந்தில் இருவருமே கதிரை அடிக்கப் போனார்கள். உடனே மீனா, ராஜி அவர்களை தடுத்து நிறுத்தி விட்டார்கள். அதற்கு பின் பாண்டியன், குமார் செய்த வேலைக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். பெண் பிள்ளை பெற்றவர்கள் எல்லோருக்குமே இது பாடமாக இருக்கும் என்று சொல்லி அரசியை அழைத்து கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்.

நேற்று எபிசோட்:

போலீஸ் ஸ்டேஷனில் பாண்டியன், தன் மகளை கடத்தி வைத்து குமார் செய்த வேலையை பற்றி எல்லாம் சொன்னார். பின் அரசியுமே நடந்த உண்மை எல்லாம் சொன்னார். அதனால் போலீஸ், குமார் மீது கம்ப்ளைன்ட் எடுத்துக் கொண்டார்கள். பின் போலீஸ், குமாரின் வீட்டிற்கு சென்று பாண்டியன் குடும்பத்தார் கம்ப்ளைன்ட் கொடுத்த விஷயத்தை சொன்னார்கள். இதனால் குமாரின் அம்மா, அப்பா, பெரியப்பா எல்லாருமே தடுத்தார்கள். ஆனால், போலீஸ் கேட்கவே இல்லை. பின் குமார் தப்பித்து ஓடும்போது போலீஸ் பிடித்து விட்டது.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்று எபிசோட்டில் குமார் வீட்டில் எல்லோருமே எவ்வளவோ கெஞ்சி கதறுகிறார்கள். ஆனால், போலீஸ் கேட்கவே இல்லை. குமாரை வலுக்கட்டாயமாக இழுத்து வருகிறார்கள். இதை பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே வேடிக்கை பார்க்கிறார்கள். அப்போது குமாரின் அப்பா சக்திவேல், என் மகனை இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளியே எடுத்து விடுவேன். அதற்குப் பிறகு உங்களை எல்லாம் கவனித்து கொள்கிறேன் என்று மிரட்டி விட்டு செல்கிறார். அதற்குப்பின் ராஜி, குமார் கைதானதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அவருக்கு கதிர் ஆறுதல் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் கடையில் பாண்டியன், ரொம்ப அன்பாக சரவணன், பழனி இடம் பேசுகிறார். அதோடு அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதையும் கேட்டுக்கொள்கிறார். அப்போது சரவணன், கதிர் ட்ராவல்ஸ் தொடங்க லோன் வாங்கும் விஷயம் பற்றி சொல்கிறார். இன்னொரு பக்கம் குமாரை வெளியில் எடுக்க முடியவில்லை என்று முத்துவேல்- சக்திவேல் இருவருமே வீட்டில் சொல்கிறார்கள். இதனால் வீட்டில் உள்ள பெண்கள் ரொம்பவே கதறி அழுகிறார்கள். அப்போது சக்திவேல், எல்லாத்துக்கும் காரணம் அந்த பாண்டியன் குடும்பம் தான். அவர்களை பழிவாங்வேன். அவர்களை சும்மா விடமாட்டேன். அழித்தே தீருவேன் என்றெல்லாம் சவால் விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full