சக்திவேல் சதி வலையில் சிக்கிய மீனா, அதிர்ச்சியில் பாண்டியன் குடும்பம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 7/5/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயிலால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். கடைசியில் இறுதி சுற்றில் ராஜி நன்றாக நடனமாடி இருந்தார். பின் இரண்டாம் பரிசு வேண்டும் என்பதால் கொஞ்சம் தடுமாறியது போல் நடித்து இருந்தார் ராஜி. வீட்டில் உள்ள எல்லோருமே ஏன்? என்னாச்சு? என்று பதறி போனார்கள். அதற்கு ராஜி, கொஞ்சம் ஸ்டெப்பை மறந்து விட்டேன் என்றார். கடைசியில் ராஜி ஆசைப்பட்டது போல் பைக் வென்று விட்டார். இதை பார்த்த கதிர், நமக்காக தான் இவள் இவ்வளவு கஷ்டப்பட்டாலே என்று நினைத்து கண்கலங்கி இருந்தார்.

ராஜி, நீ எனக்காக தானே போட்டியில் கலந்து கொண்டாய் என்று கேட்டார். அதற்கு ராஜி அப்படியெல்லாம் இல்லை என்று இறுதி சமாளித்தார். ஆனால், கதிர் உண்மையை கண்டுபிடித்து ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் குமார், அரசி வீட்டில் நடந்ததை தன்னுடைய தந்தையிடம் சொல்லி புலம்பி இருந்தார். உடனே கோபப்பட்ட சக்திவேல், குமாரை பயங்கரமாக திட்டி இருந்தார். அந்த சமயம் பார்த்து வந்த மாரி, என்ன ஆனது என்று கேட்க, சக்திவேல் குமாருக்கு நடந்த விஷயத்தை சொன்னவுடன் அவர் பயங்கர ஷாக் ஆனார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் மாரி, அரசிக்கு திருமணமாகப் போகிறது. உன் வேலையை பார் என்று அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் எல்லோரும் வீட்டிற்கு கிளம்புவதற்காக ஃபேக் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது கோமதி தெரியாத தனமாக கதிர்- ராஜி திருமணத்தை பற்றி பேச வந்தார். உடனே மீனா, தடுத்து நிறுத்திவிட்டு ஏதேதோ சமாளித்தார். பின் மொத்த குடும்பமும் கிளம்பி விட்டார்கள். அப்போது வரும் வழியில் ராஜி, மாமாவிற்கு நடந்த உண்மையை சொல்லிவிடலாம் என்று கேட்டார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் சுகன்யா, ராஜி நடனமாடிய வீடியோவை வீட்டில் எல்லோருக்கும் காண்பித்தார். இதை பார்த்தவுடன் பாண்டியன் ஷாக் ஆனார். அப்போது கோயிலுக்கு போனவர்கள் எல்லோருமே வந்தார்கள். பின் நடனமாடியதை பற்றி பாண்டியன் கேட்டவுடன் ராஜியால் எதுவுமே பேச முடியவில்லை திணறி இருந்தார். பின் பாண்டியன், எதற்கு இந்த வேலை? என்று திட்டிக்கொண்டே இருந்தார். உடனே மீனா, நீங்கள்தான் திறமையை காண்பிக்க சொன்னீர்கள். அதனால் தான் ராஜி நடனமாடினார் என்று ஏதேதோ சொல்ல, எல்லோருமே ராஜிக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்கள். அதனால் பாண்டியன் அமைதியாகி விட்டார். அதற்குப்பின் ராஜி தனக்கு சப்போர்ட் செய்த மீனாவுக்கு நன்றி சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவை வேலை விட்டு தூக்க சக்திவேல் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் தன்னுடைய அம்மாவிற்கு போன் செய்ய தங்கமயில், ஒவ்வொரு நாளும் எனக்கு சித்திரவதையாக இருக்கிறது. சர்டிபிகேட் கேட்டு உங்கள் மாப்பிள்ளை தொந்தரவு செய்கிறார். நான் எதை கொடுப்பது, உண்மையை சொல்ல போகிறேன் என்று சொன்னவுடன் அவருடைய அம்மா தடுத்து விடுகிறார். இன்னொரு பக்கம் மீனா வேலை செய்து கொண்டிருக்கும் போது தண்ணீர் இணைப்பு வேண்டும் என்று சொல்லி நபர் ஒருவர் கடிதம் கொடுக்கிறார். ஆனால், அதில் பணம் இருக்கிறது.

சீரியல் ட்ராக்:

அப்போது வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக சொல்லி மீனா மீது குற்றச்சாட்டுகிறார்கள். மீனா எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. பின் அந்த அலுவலகத்தில் இருக்கும் சில அதிகாரிகள் மீனாவிற்கு எதிராக புகார் கொடுக்கிறார்கள். அப்போது வந்து சக்திவேல், குமார் இருவருமே எங்களிடம் கூட பணம் வாங்கி லஞ்சம் வாங்கி தான் வேலை செய்தார். இவர் ரொம்ப மோசமான அதிகாரி என்றெல்லாம் ஒன்னுக்கு ரெண்டாக சொல்கிறார்கள். இதை அப்படியே வருமானத்தை அதிகாரிகள் நம்பி விடுகிறார்கள். அதற்குப்பின் டிவியில் னாவின் விவகாரம் வைரலாகி வருகிறது. அதை பார்த்த தங்கமயில், கோமதி அதிர்ச்சியாகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full