ஆதார் கார்ட் ரகசியத்தை நினைத்து பயப்படும் தங்கமயில், உண்மையை அறிந்த சரவணன்-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 7/10/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் பாண்டியன் 50வது பிறந்தநாளை அவர் வீட்டில் உள்ளவர்கள் சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள். பின் பாண்டியன், சரவணன் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்ய ஆதார் கார்டை கொண்டு வர சொல்லி தங்கமயில் இடம் கேட்க, அவர் ரொம்ப பயந்தார். காரணம், அந்த ஆதார் கார்டை பார்த்தால் தன்னைவிட சரவணன் வயதில் சின்னவர் என்பர் தெரிந்து விடும் என்று புலம்பி இருந்தார். மீண்டும் ஆதார் கார்டை பற்றி தங்கமயிலிடம் பாண்டியன் கேட்க, அவர் பயத்தில் அமைதியாகவே இருந்தார்.

இதையெல்லாம் பார்த்த மீனாவுக்கு சந்தேகம் வந்தது. அதற்குப்பின் அம்மா வீட்டிற்கு போன தங்கமயில், நடந்ததை சொல்ல, அவர் ஏதாவது சொல்லி சமாளி என்று ஆறுதல் சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயிலின் அப்பாவை பார்த்து பாண்டியன் ஆதார் கார்டை வாங்கி விட்டார். இதை தங்கமயிலின் அப்பா வீட்டில் சொன்னவுடன் தங்கமயில் பதறினார். உடனே தங்கமயில், அம்மா, அம்மா பாண்டியன் வீட்டுக்கு கிளம்பி இருந்தார்கள். இன்னொரு பக்கம் ஆதார் கார்டை செந்தில் வீட்டில் கொடுக்க, எல்லோருமே மாறி மாறி தங்கமயிலின் போட்டோவை மட்டும் தான் பார்த்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் வீட்டிற்கு வந்த தங்கமயில் ஆதார் கார்டை பற்றி கேட்க, பத்திரமாக இருக்கிறது என்று கோமதி சொன்னார். யாருக்குமே எந்த விஷயமும் தெரியவில்லை என்று தங்கமயில் கொஞ்சம் நிம்மதி அடைந்தார். இருந்தாலும் ஆதார் கார்டு கையில் வரும் வரை பயமாக இருக்கிறது என்று தங்கமயில் புலம்ப, எதற்கும் கவலைப்படாதே அவர் அம்மா சமாதானம் செய்தார். மேலும், பாண்டியன் பழைய கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அக்கவுண்டில் 10000 இல்லை என்று சொல்ல செந்தில்,சித்தப்பு பயந்தார்கள். ஆனால், கதிர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததால் பாண்டியன், கதிர் மீது சந்தேகப்பட்டு திட்டினார்.

கடந்த வாரம் எபிசோட்:

உடனே ராஜி கோபப்பட்டு, கதிருக்காக சப்போர்ட் செய்தார். இதனால் பாண்டியன் எதுவும் பேசாமல் அங்கு இருந்து கிளம்பி விட்டார். பின் ரூமில் இதைப்பற்றி கதிர்-ராஜி இருவருக்கும் வாக்குவாதம் செய்தார்கள். அதற்குப்பின் தங்கமயில், செந்தில் இடம் இருக்கும் தன்னுடைய ஆதார் கார்டை வாங்க நினைத்தார். ஆனால், எடுக்க முடியவில்லை. இதையெல்லாம் பார்த்து மீனாவிற்கு தங்கமயில் மீது சந்தேகம் வந்தது. இந்நிலையில் இன்று எபிசோட்டில் மொட்டை மாடியில் கதிர், செந்தில், சித்தப்பா மூவருமே பாண்டியன் அக்கவுண்டில் எடுத்த பணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய எபிசோட்:

அந்த சமயம் வந்த சரவணன், என்ன பணம்? என்று கேட்க, சித்தப்பு உண்மையை சொல்லி விடுகிறார். உடனே சரவணன், வருத்தப்பட்டு அப்பாவிடம் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று சொல்ல, கேட்க கதிர் வேணாம் என்று தடுத்து விடுகிறார். பின் ரூமில் சரவணன் நடந்ததை நினைத்து கோபப்பட்டு கொண்டு இருக்க, தங்கமயில் ஆதார் கார்டை பற்றி தான் பேசுகிறார் என்று உண்மை தெரியாமல் பயத்தில் புலம்ப பார்க்கிறார். அப்போது செந்தில் தங்கமயிலின் ஆதார் கார்டை சரவணன் இடம் கொடுக்க, அதை தங்கமயில் பிடுங்கி வைத்துக் கொள்கிறார்.

சீரியல் ட்ராக்:

மறுநாள் ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு செல்ல சரவணன்- தங்கமயில் தயராக இருக்கிறார்கள். அப்போது பாண்டியன், மீனா- செந்தில் அவர்களுடன் போகட்டும் என்று சொன்னார். உடனே தங்கமயில், வேண்டாம். மீனா வேலைக்கு போகட்டும் என்று சொல்ல, மீனாவும், நான் வரவில்லை என்று சொல்லி விடுகிறார். அதற்கு பின் செந்தில்-சித்தப்பு இருவருமே கடையில் வேலை இருக்கு என்று சொல்ல, நாங்கள் இருவருமே பார்த்துக் கொள்கிறோம் என்று தங்கமயில் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full