அரசி-குமார் காதலிக்கும் விஷயம் தெரிந்து பொங்கி எழுந்த சரவணன்,அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 15/3/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில், தன்னுடைய ஓனரிடம் எப்படியோ கெஞ்சி கேட்டு கிளம்பி விட்டார். சரவணன் தங்கமயிலுக்காக அவருடைய ஆபீஸ்க்கு வெளியே காத்துக் கொண்டிருந்தார். தங்கமயில் எப்படியோ அந்த இடத்திற்கு வந்து விட்டார். பின் இருவருமே வீட்டிற்கு வந்தார்கள். அப்போது பாண்டியன்-கோமதி இருவரும் ஏன் லேட்? என்று கேட்க, ஏதோ காரணங்களை சொல்லி தங்கமயில் சமாளித்தார். அப்போது கோமதி, டீச்சர் வேலைக்கு போய் இருக்கலாம். இந்த வேலை வேண்டாம் என்று சொன்னார்.

தங்கமயிலின் விருப்பத்தை யாருமே கேட்கவில்லை. மீனா வாசலில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது ராஜி- கதிர் இருவரும் வந்தார்கள். ராஜி கல்யாணத்தில் நடந்த விஷயத்தை எல்லாம் மீனாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டார். அதற்கு பின் செந்தில் வீட்டிற்கு வந்தார். அப்போது மீனா, நான் எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்து உங்களுக்கு அந்த வேலை கிடைக்குமாறு ரெடி பண்ணுகிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் அரசிடம் சுகன்யா, நீ ரெடியாகு. குமாருடன் படம் பார்த்துட்டு சாப்பிட போலாம் என்று தேவையில்லாத யோசனை எல்லாம் கொடுத்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் அரசி, ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது என்று வீட்டில் சொல்லி வெளியே கிளம்ப பார்த்தார். உடனே கோமதி, உனக்கு எப்போதுமே சனிக்கிழமை காலேஜ் இருக்காதே, இப்ப எங்க போகிறாய்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். அப்போது பாண்டியன், நம்ம பொண்ணு பொய் சொல்ல போறாளா? என்று அரசிக்கு சப்போர்ட் செய்தார். அதற்குப்பின் அரசி கிளம்பிய உடன் சுகன்யாவும் வீட்டிற்கு செல்வதாக சொல்லி இருவருமே தியேட்டருக்கு சென்றார்கள். அங்கு குமாரை பார்த்தவுடன் அரசி பயமாக இருக்கிறது என்று புலம்பி இருந்தார்.

நேற்று எபிசோட்:

உடனே சுகன்யா, உங்கள் இருவருக்கும் மத்தியில் நான் எதற்கு என்று கிளம்பி விட்டார். குமார்-அரசி இருவரும் தியேட்டருக்குள் சென்றார்கள். பின் பழனியின் அண்ணன் வீட்டிற்கு சென்ற சுகன்யா, இவரை கல்யாணம் செய்து கொண்டு நான் ரொம்பவே கஷ்டப்படுகிறேன். கையில் காசு கூட இல்லை என்று ரொம்ப ஏளனமாக பழனியை பேசி இருந்தார். உடனே ராஜியின் அம்மா, சேர வேண்டிய நேரத்தில் எல்லோருக்கும் சொத்து பிரித்து கொடுப்பார்கள். நீ அதை பற்றி எல்லாம் யோசிக்காதே என்று கோவமாக பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கடைக்கு வந்த பாண்டியனின் அக்கா கணவர், என் மகனுக்கு அரசியை கல்யாணம் செய்து வைப்பது விஷயமாக பேச வந்திருக்கிறேன். உங்களுக்கு சம்மதமா? என்று கேட்கிறார். உடனே பாண்டியன், எனக்கு கல்யாணத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அரசி படிக்க ஆசைப்படுகிறாள். அவள் நிறைய படிக்கணும். அவள் படித்து பெரிய வேலைக்கு போகணும் என்பது தான் என்னோட கனவோடு பேசுகிறார். இன்னொரு பக்கம் அரசி, குமாருடன் படம் பார்த்துவிட்டு தியேட்டரில் வெளியே நின்று போட்டு எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த சரவணன், அரசி- குமார் சேர்ந்திருப்பதை பார்த்து கோபத்தில் பொங்கி எழுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் சரவணன், குமாரின் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். அரசி, என்ன சொல்வது என்று புரியாமல் கதறி அழுகிறார். குமார், நானும் அரசியும் காதலிக்கிறோம் என்றவுடன் கோபம் தாங்க முடியாமல் சரவணன் குமாரை அடிக்கிறார். தியேட்டர் முன்பு கலவரமே வெடிக்கிறது. அதற்கு பின் சரவணன், அரசியை அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். அப்போது வரும் வழியில் செந்திலுக்கு போன் செய்து அப்பாவை உடனடியாக வீட்டிற்கு அழைத்து வா என்று சரவணன் சொல்கிறார். பின் ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சரவணன், என்ன வேலை செய்திருக்கிறாய்? இதுதான் நீ படிக்க போகும் லட்சணமா? என்று ஆவேசப்பட்டு கத்துகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full