அரசி சொன்ன வார்த்தை, சரவணன் எடுத்த முடிவால் தங்கமயில் நிலை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 4/6/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கோமதி, அரசி செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே புலம்பி கொண்டு இருந்தார். பாண்டியனால் வீட்டில் யாரிடம் பேச முடியவில்லை. பின் அவர் கடைக்கு கிளம்பும்போது வீட்டில் உள்ள எல்லோருமே வேண்டாம் என்று தடுத்தார்கள். ஆனால், பாண்டியன் யார் பேச்சையும் கேட்கவில்லை, கடைக்கு கிளம்பி விட்டார். பாண்டியன் வீடு இழவு வீடாகவே இருக்கிறது. ஒவ்வொருவருமே எதையோ பறிகொடுத்தது போல தவித்துக் கொண்டிருந்தார்கள். பழனியை அழைத்து மீனா பேசினார். அப்போது மீனா, எனக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். அரசியை எப்படியாவது மாரியம்மன் கோவிலுக்கு கூட்டிட்டு வாருங்கள்.

அவளிடம் உண்மையை கேட்க வேண்டும் என்று சொன்னார். பழனி, அதெல்லாம் எதற்கு மீனா. அவள் துரோகி என்றெல்லாம் அரசியை திட்டி இருந்தார். மீனா, நீங்கள் கண்டிப்பாக அரசியை அழைத்து வாருங்கள் என்று சொன்னார். பழனியும் ஒத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் குமார் அரசி, தன்னை மிரட்டியதை நினைத்து பார்த்து கொண்டிருந்தார். பின் அரசி வைத்திருந்த கத்தியை கையில் குமார் வைத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து அரசி வெளியே வந்தார். குமார் அந்த கத்தியை காண்பித்து அரசியிடம் பேசி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் குமார், என்னெல்லாம் சொல்லி என்னை மிரட்டினாய். நீ எப்படி அனுபவிக்கப் போகிறாய் பார்? என்று சொல்லி மீண்டும் அரசியை மிரட்டி அடிக்க போனார். அந்த இடத்தில் இருந்து அரசி விலகி விட்டதால் சுவர்மிது பட்டு குமார் கையில் அடிபட்டது. உடனே வலி தாங்க முடியாமல் குமார் கத்தினார். அப்பத்தாவும், குமாரின் அம்மாவும் அங்கே வந்து விட்டார்கள். பின் அவர்கள், என்ன ஆனது? என்று கேட்க அரசி ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். அதற்கு பின் வந்த பழனி, அரசியை சந்தித்து கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவிலில் மீனா-ராஜி இருவருமே காத்துக்கொண்டிருந்தார்கள். அங்கு வந்த அரசி, கண்கலங்கி அழுதார்.

நேற்று எபிசோட்:

அப்போது மீனா, என்ன நடந்தது? எதற்காக நீ திருமணம் செய்து கொண்டாய் என்று கேட்டார். வழக்கம்போல அரசி பொய் சொன்னார். உடனே ராஜி, நீ சொல்வதெல்லாம் பொய் என்று எங்களுக்கு தெரியும். அவன் உன்னை மிரட்டினானா? என்று கேட்டார்கள். அரசி, குமார் என்னை மோசமான போட்டோவை காண்பித்து மிரட்டியது உண்மை தான். அவனிடம் மன்னிப்பு கேட்க தான் போனேன். ஆனால், அவன் என்னை வைத்து கடத்தி வைத்து என்னையும் குடும்பத்தையும் அசிங்கப்படுத்துவேன் என்று சொன்னேன். அதனால் தான் நானே தாலி கட்டிக் கொண்டேன். இதற்கெல்லாம் காரணம், சுகன்யா அத்தை தான். அவர் சொல்லி தான் நான் குமரை பார்க்க போனேன் என்று சொன்னவுடன் மீனா- ராஜி இருவருமே ஷாக் ஆனார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி-மீனா இருவருமே உண்மையை சொல்வதற்காக கிளம்புகிறார்கள். உடனே அரசி வேண்டாம் என்று தடுத்து, இந்த பிரச்சினையை நான் பார்த்துக்கொள்கிறேன். என்னையும் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தியதற்கு அவன் அனுபவிப்பான் என்று அவர்களிடம் சத்தியம் வாங்கி கொள்கிறார். இன்னொரு பக்கம் சரவணன், தங்கமயிலை துணி பேக் செய்ய சொல்கிறார். அவரும் சந்தோசமாக செய்கிறார். பின் தன் அம்மாவிடம் சரவணன் பேசப் போகிறார். ஆனால், அவர் அரசியைப் பற்றி கவலைப்படுவதால் சரவணன் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து தங்கமயிலை அழைத்துக் கொண்டு செல்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் தங்கமயில் அம்மா வீட்டிற்கு சரவணன் வருகிறான். தங்கமயில், இங்கு ஏன் வந்தோம்? எதற்கு? என்று கேள்வி கேட்கிறார். உடனே சரவணன், இனி நீ இங்கு தான் இருக்க வேண்டும். உண்மையை சொல்லி இருந்தால் பிரச்சனை இல்லை. பொய் மேல் பொய் சொல்லி என்னையும் என்னுடைய குடும்பத்தையும் ஏமாற்றுகிறாய். உன்னை மன்னிக்க மாட்டேன் என்று கோபமாக பேசுகிறார். தங்கமயில் அப்பா- அம்மா இருவரும் எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே சரவணன் கேட்கவில்லை. தங்கமயில் கதறி அழுகிறார். இருந்தாலும் சரவணன் மனம் இறங்காமல் அவரை அங்கேயே விட்டுவிட்டு செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full