தன் வாயாலே ஆப்பு வைத்து கொண்ட தங்கமயில், சந்தேகப்படும் சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி, கோமதிக்கு தாய் வீட்டு சீரை கொடுத்தார். இதை பார்த்து கோமதி ரொம்பவே எமோஷனல் ஆனார். அப்போது பழனி, என்னால் நகை வாங்க முடியவில்லை என்றாலும் துணி தான் எடுக்க முடிந்தது என்றார். இதை கேட்டு கோமதி, இதுவே எனக்கு பெரிய விஷயம். எனக்கு பிடித்த கலரில் எடுத்துக் கொடுத்திருக்கிறாய் என்று ரொம்ப எமோஷனலாக தன்னுடைய தம்பி இடம் பேசிக் கொண்டிருந்தார். முத்துவேல் வீட்டில் தீபாவளி பண்டிகைக்காக பழனி- சுகன்யாவிற்கு துணி எல்லாம் எடுத்துக் கொடுத்திருந்தார்கள்.
அப்போது முத்துவேல், உனக்கு கடை மளிகை கடை பார்த்து விட்டோம். தீபாவளி பண்டிகை முடிந்த உடனே கதையை நீ கடையை தொடங்கலாம் என்று சொன்னார். ஆனால், பழனிக்கு விருப்பமில்லை. இருந்தாலுமே சுகன்யா - காந்திமதி எல்லோரும் சொல்வதால் பழனி அமைதியாக இருந்தார். பின் பாண்டியன், துணி எடுக்க உனக்கு எப்படி பணம் கிடைத்தது? என்று கேட்டார். அதற்கு பழனி, சுகன்யா வீட்டில் கொடுத்த பணத்தை வைத்து தான் எடுத்தேன் என்றார். பாண்டியன், என்னிடம் கேட்டால் நான் தரமாட்டேன் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்கு செந்தில் நக்கல் அடித்தார். அதற்குப் பின் பாண்டியன்- முத்துவேல் இரண்டு வீட்டிலுமே தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். அப்போது குமார், சரவணன் தன்னை அடித்ததால் அவர் மீது பட்டாசை போட்டார். இதனால் கோபப்பட்டு பாண்டியன் மகன்கள் குமாரிடம் சண்டைக்கு போனார்கள். பின் சக்திவேல்- முத்துவேல் இருவருமே சண்டைக்குப் போனார்கள். பின் இரு குடும்பத்திற்கும் இடையே கலவரம் வெடித்தது. ஒரு வழியாக காந்திமதி பஞ்சாயத்து பண்ணி அனுப்பி வைத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில், சரவணன், கதிர், பழனி நான்கு பேருமே தீபாவளி பண்டிகை பற்றி நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டு பெண்கள் எல்லோருமே தீபாவளி பண்டிகைக்கு பலகாரம் செய்து ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தங்கமயில், தன்னை அறியாமலேயே 2010ல் நான் பத்தாம் வகுப்பு படித்தேன் என்று உளறி விடுகிறார். இதை கேட்ட மீனா, அப்போது உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா? என்று சொல்கிறார். கோமதி, சரவணனை விட நீ பெரியவளா? என்று கேட்பதால் தங்கமயில் பதறிப் போய் சமாளிக்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் வீட்டில் உள்ள பெண்கள் எல்லோருமே மாற்றி மாற்றி கேள்வி கேட்க, ஏதேதோ பதில் சொல்லி சமாளிக்கிறார் தங்கமயில். இதையெல்லாம் கேட்ட சரவணனனுக்கு தங்கமயில் மீது சந்தேகம் வருகிறது. பின் சமாளித்துவிட்டு தங்கமயில் அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்குப்பின் காலையில் சீக்கிரமாகவே கோமதி, தீபாவளி பண்டிகை என்பதால் எல்லோரையும் எழுப்புகிறார். எல்லோருமே குளித்துவிட்டு தீபாவளி பண்டிகைக்கு புது ஆடை அணிந்து சந்தோசமாக தயாராகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.