கதிரிடம் மாட்டிக்கொள்ளும் ராஜு ? ஹனிமூன் கொண்டாட்டத்தில் சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 13/8/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் பாண்டியன், தன் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார். தங்கமயில், வீட்டுக்கு வந்ததிலிருந்து பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. பாண்டியன், மூணு ஜோடியையும் ஹனிமூன் போக சொல்ல இருந்தார். ஆனால், மீனா- ராஜு இருவரும் போக மறுத்து விட்டார்கள். பின் ஹனிமூன் செல்வதற்கான ஏற்பாடுகளை பாண்டியன் செய்தார்.

அப்போது, ஆன்லைன் மூலம் புக்கிங் செய்வதை சரியாக கவனிக்காமல் தங்கமயில் ரூம் புக் செய்து இருந்தார். ஆனால், வீட்டில் எல்லோருக்கும் சந்தேகம் வந்தது. அந்த சமயம் பார்த்து, அட்வான்ஸ் தொகை தான் 5000, மீதி 21000 கட்ட வேண்டும் என்று மெசேஜ் வந்ததை பார்த்து அதிர்ச்சியான தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் சொன்னார். ஆனால், அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். கடந்த வாரம், செந்தில், மீனா அப்பா, அம்மாவை பார்த்து சண்டை போட, அதற்கு அவர்களும் கோபமாக பேசி இருந்தார்கள். இறுதியில் மீனா அப்பாவிடம் செந்தில் சவால் விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதை கதிர், போனில் ரெக்கார்டு செய்து மீனாவிடம் காண்பிக்க அதை பார்த்தவுடன் ஆனந்தத்தில் மீனா அழுதார். அடுத்த நாள் தங்கமயில்-சரவணன் ஹனிமூன் சென்று இருந்தார்கள். ஓட்டலுக்கு சென்ற பின் தான் சரவணனுக்கு, ரூம்மின் மொத்த செலவு 26000 என்று தெரிந்து அதிர்ச்சியான சரவணன், தங்கமயில் இடம் கேட்க அவர் வழக்கம்போல் அழ ஆரம்பித்து இருந்தார். மேலும், சரவணன், நடந்ததை கதிரிடம் சொல்ல, அவர் எப்படியாவது பணத்தை ரெடி பண்ண வேண்டும் என்று முயற்சி செய்து இருந்தார்.

சீரியல் கதை:

இந்த விஷயம் செந்திலுக்கு தெரிய வந்து மீனாவிடம் பணம் கேட்க, அவர் உண்மை தெரிந்து கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார். என்ன செய்வது என்று புரியாமல் கதிர்- சரவணன்- சித்தப்பு மூவருமே வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், பாண்டியனுக்கு தெரியாமல் அவர் மொபைல் போனில் இருந்து பணத்தை எடுத்து விட்டார். அதோடு கல்லாவில் இருந்தும் ₹1000 எடுத்து விட்டு, செந்தில் இடம் எப்படியாவது சமாளியுங்கள் என்று கதிர் சென்று விட்டார். நேற்று எபிசோட்டில், கதிர் எப்படியோ பணத்தை அனுப்பி விடுகிறார்.

நேற்று எபிசோட்:

இருந்தாலும், சரவணன் நடந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். மேலும், சரவணன் பணத்தை எப்படி ரெடி பண்ணீர்கள் என்று கதிர், செந்திலுக்கு போன் பண்ணி கேட்க, அவர்கள் இருவருமே அதை பற்றி எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோடில், கோமதியின் அம்மா வீட்டில் அவருடைய சின்ன அண்ணன் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. பின் பெரிய அண்ணன், சின்னத் தம்பியை அழைக்க சொல்லி சொல்கிறார். ஆனால், அவருடைய பெரிய தம்பி வேணாம் என்று மறுக்க, அவனும் நம் தம்பி என்று சொல்கிறார்.

இன்றைய எபிசோட்:

இதனால் அவருடைய பெரிய தம்பிக்கு கோபம் வந்து தன்னுடைய மகனிடம் அண்ணனைப் பற்றி தவறாக பேசுகிறார். இன்னொரு பக்கம் ராஜி டியூஷன் எடுக்கும் இடத்திற்கு கதிர் சாப்பாடு டெலிவரி செய்ய வருகிறார். இதை பார்த்து ராஜி ஒளிந்து கொள்கிறார். ஒருவழியாக ராஜு தப்பித்து விடுகிறார் . இன்னொரு பக்கம் கடையில் பாண்டியனிடம், என் அண்ணன் மகனுக்கு திருமணம், வீட்டில் வர சொல்லி இருக்கிறார்கள். நான் போகணும் என்று சித்தப்பு சொன்னதற்கு சரி என்று பாண்டியன் சொல்கிறார். இறுதியில் ஹனிமுன் கொண்டாட்டத்தில் சரவணன்- தங்கமயில் மாத்தி மாத்தி போட்டோ எடுத்து சந்தோசமாக இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full