சுகன்யாவின் சுயரூபத்தை அறிந்த சரவணன், பழனியின் நிலைமை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 19/4/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சரவணன், கடையில் என்ன நடந்தது என்று சொல்லு என்றார். தங்க மயில், ரொம்ப பயப்பட்டார். உடனே சரவணன், தங்கமயில் லீவு கேட்டு விட்டார். அவளையும் கோயிலுக்கு அழைக்க செல்லுங்கள் என்று சொன்னார். பின் எல்லோருமே கோயிலுக்கு கிளம்புவதை பற்றி பேசி இருந்தார்கள். அதற்குப்பின் தங்கமயில் வெளியே என்ன நடக்குமோ? என்ற பயத்தில் இருந்தார். அப்போது வந்த மீனா, உங்களுக்கும் மாமாவிற்கும் பிரச்சனையா? ஏன் ரெண்டு பேருமே பதட்டமாக இருக்கிறீர்கள் என்று சொன்னவுடன் கேட்டார். ஆனால், தங்கமயில் ஏதேதோ சொல்லிவிட்டு சென்றார்.

ரூமிற்கு சென்ற தங்கமயில், என்னை மன்னித்து விடுங்கள் என்று பேசி இருந்தார். ஆனால், சரவணன் கோபத்தில் எதுவும் பேசாமல் தூங்கி விட்டார். அதற்குப்பின் மறுநாள் காலையில் எல்லோருமே கோயிலுக்கு தயாராகி கிளம்பி இருந்தார்கள். வீட்டில் சுகன்யா மட்டும்தான் தனியாக இருந்தார். பழனிக்கு ஃபோன் செய்த சுகன்யா, இந்த பேய் பங்களாவில் என்னால் எப்படி தனியாக இருக்க முடியும். என்னை ஏன் இப்படி கொடுமை படுத்துகிறீர்கள் என்று வழக்கம் போல் பழனியை திட்டிக் கொண்டிருந்தார். அவர் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். அதற்குப் பின் கடைக்கு வந்த சரவணன், தன்னுடைய தந்தையிடம் தங்க மயிலை பற்றி உண்மையை சொல்லிவிடலாம் என்று நினைத்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் பாண்டியன் கடையில் வியாபாரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த மாப்பிள்ளை, அம்மா தேவையில்லாமல் உங்களிடம் நிறைய கேட்டுவிட்டார். எனக்கு அதில் எந்த உடன்பாடும் இல்லை. எனக்கு நான் நல்லா படித்திருக்கிறேன். நன்றாக சம்பாதிக்கிறேன். எதுவாக இருந்தாலும் என் மனைவிக்கு செய்கிறேன். கார் நானே வாங்கி தருகிறேன். அதை நீங்கள் கொடுத்து விடுங்கள் என்று ரொம்ப பெருந்தன்மையாக பேசி இருந்தார். இதைக் கேட்டு பாண்டியனும் அவருடைய அண்ணன்களும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். உடனே பாண்டியன், எங்கள் மகளுக்கு நாங்கள் செய்கிறோம்.

நேற்று எபிசோட்:

நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொன்னார். இன்னொரு பக்கம் கோமதி, அவருடைய மூன்று மருமகள்கள், மகள் உடன் கோவிலுக்கு செல்லும் ஊரிற்கு சென்று விட்டார்கள். பாண்டியனுக்கு போன் செய்த கோமதி ஊருக்கு வந்த விஷயத்தை சொன்னார். அப்போது பாண்டியன், மாப்பிள்ளை சொன்னதை சொன்னவுடன் கோமதிக்கு ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் ரூமில் மூன்று மருமகள், அரசி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மாப்பிள்ளை அரசிக்கு போன் செய்து பேசி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வர சொல்லி சுகன்யா, பழனிக்கு போன் செய்து கண்டமேனிக்கு கத்தி இருந்தார். பழனியும் என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுகன்யா, பழனிக்கு போன் மேல் போன் செய்து கொண்டிருக்கிறார். டார்ச்சல் தாங்க முடியாமல் பழனி வீட்டுக்கு வந்து விடுகிறார். அப்போது சுகன்யா, உங்கள் வீட்டிற்கு நான் வடித்துக் கொட்டணுமா? என்னால் வீட்டு வேலை செய்ய முடியாது என்று ரொம்ப மோசமாக பழனியை திட்டுகிறார். பின் பழனியிடம் தண்ணிர் எடுக்க சொல்லி குடத்தை கொடுக்கிறார். பின் காய்கறிகளை காய்கறிகளை கட் பண்ணுவது என்று வீட்டு வேலை எல்லாம் செய்ய சொல்கிறார். பழனி அழுது கொண்டு எதுவும் பேசாமல் செய்கிறார். இதையெல்லாம் வீட்டிற்கு வந்த சரவணன் பார்த்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு சுகன்யா மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். சுகன்யாவின் நடவடிக்கையை பார்த்து சரவணனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அப்போது வெளிவந்த சுகன்யா, சரவணனை பார்த்து விடுகிறார். ஒன்னும் தெரியாது போல சுகன்யா நாடகமாடுகிறார். பின் மாடியில் பழனி-சரவணன் இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பழனி, கல்யாண நாளில் இருந்து இப்படித்தான் நடந்து கொள்கிறார். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை என்று தனக்கு நடந்த சோகமான விஷயத்தை சரவணன் இடம் சொல்லி வேதனைப்படுகிறார். இன்னொரு பக்கம் மீனா-ராஜி- தங்கமயில் மூவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒவ்வொரு கணவர்மார்களும் எப்படி எல்லாம் தங்களை மிஸ் செய்கிறார்கள் என்று போன் செய்து பேசுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full