மறைத்து வைத்த ரகசியத்தை அறிந்த சரவணன், இனி தங்கமயிலின் நிலை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மீனா மீது தவறு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அதை பார்த்தவுடன் சக்திவேல்-குமார் இருவருமே ஷாக் ஆனார்கள். அதிகாரிகளுமே மீனா மீது பழி போட்ட நபரை திட்டி கைது செய்தார்கள். அதற்குப்பின் மீனா, சக்தி - குமாரை மிரட்டி வார்னிங் கொடுத்து அனுப்பி விட்டார். அதற்குப்பின் மீனா, குமார் என்னை காலையிலேயே மிரட்டி விட்டு சென்றார். அதோடு என்னுடைய அலுவலகத்திற்கு வெளியில் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதனால் தான் முன்னாடியே நான் மொபைலில் வீடியோ எடுத்தேன் என்று சொன்னவுடன் செந்தில்- பாண்டியன் இருவருமே மீனாவை பாராட்டி இருந்தார்கள்.
செந்தில்- கதிர் இருவருமே குமாரை பார்த்து அடி வெளுத்து வாங்கி இருந்தார்கள். குமாரும் தன்னால் முடிந்தவரை தடுத்தார். இருந்தாலும் விடாமல் அடித்தார்கள். பின் அங்கு உள்ளவர்கள் இருவரையும் தடுத்து விலக்கி விட்டார்கள். இன்னொரு பக்கம் டிவியில் மீனாவின் மீது எந்த தவறும் இல்லை என்று சொன்னதைக் கேட்டு பாண்டியன் குடும்பம் ரொம்ப சந்தோஷப்பட்டது. அதற்குப்பின் பாண்டியன், சக்திவேல்- முத்துவேலிடம் சண்டைக்கு போனார். அப்போது பாண்டியன், இது இவ்வளவு கேவலமான வேலை செய்விர்களா? உங்கள் வீட்டுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு நன்றாக தானே பார்த்துக் கொள்கிறோம் என்று ஆக்ரோஷமாக பேசி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இதனால் கோபப்பட்ட முத்துவேல், குமாரை வீட்டிற்கு வர வைத்தார். அப்போது முத்துவேல், குமாரை அடித்து எதற்காக இந்த வேலையெல்லாம் செய்தாய்? என்று கேட்டார். அதற்கு சக்திவேல், நீங்கள் தானே மீனாவை வேலை விட்டு அனுப்பனும் என்று சொன்னீர்கள். அதனால் தான் இப்படி செய்தோம் என்றார். அதற்கு முத்துவேல், இப்படி எல்லாம் செய்து கேவலமாக மாற்றிக்கொள்ள சொன்னேனா, எனக்கு எப்படி செய்யணும் என்று தெரியும் உங்கள் வேலையை பாருங்கள் என்று திட்டி அனுப்பி விட்டார். பின் சத்திவேல், தன் மகனை திட்டி இருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் மீனா செய்த வேலைக்காக பாண்டியன் கேக் வாங்கிட்டு வந்து இருந்தார் . அப்போது வீட்டில் உள்ளவர்கள் ராஜியும் நடன போட்டியில் வெற்றி பெற்றதை சொன்னார்கள். உடனே பாண்டியன் இரண்டு கேக் வாங்க சென்றார். ஆனால், மீனா- ராஜி இருவருமே வேண்டாம் என்று சொல்லி அந்த கேக்கை வெட்டி வீட்டில் உள்ள எல்லோருக்குமே கொடுத்து சந்தோஷப்பட்டார்கள். இதையெல்லாம் பார்த்து சரவணன் வருத்தப்பட்டார். பின் சரவணன் சர்டிபிகேட் எங்கே என்று கேட்டார்.
சீரியல் ட்ராக்:
தங்கமயில், என் அப்பா தொலைத்துவிட்டார் என்று சொன்னவுடன் இன்னும் பயங்கரமாக கோபப்பட்டு சரவணன் திட்டி இருந்தார். உன்னுடைய கல்லூரியின் பெயரை சொல்லு, நானே சர்டிபிகேட் ரெடி பண்ணுகிறேன். என்னுடைய அப்பா, மீனா -ராஜியை பெருமையாக பேசும்போது உன்னை பெருமையாக பேசணும் என்று நினைக்கிறேன். அதற்கான வாய்ப்பை நீ தர மாட்டுகிறாய் என்று கோபப்பட்டு அங்கிருந்து சென்று விட்டார். மறுநாள் காலையில் ராஜி- கதிர் இருவருமே ப்ராக்டிஸ்காக கிரவுண்டுக்கு சென்று இருந்தார்கள். அங்கு அவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து குமார் கோபப்பட்டார்.
https://www.youtube.com/watch?v=QCVcwyusFnA
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சரவணன், தங்கமயிலை அவர் சொன்ன கல்லூரிக்கு அழைத்து செல்கிறார். கல்லூரிக்குள் நுழையும் போது தங்கமயில் உள்ளே வரமாட்டேன் என்று மறுக்கிறார். அப்போது சரவணன் எவ்வளவு பேசியும் தங்கமயில் உள்ளே வரவில்லை. அப்போது தங்கமயில், நான் கல்லூரி எல்லாம் படிக்கவில்லை. நான் 12 ஆம் வகுப்பு தான் படித்தேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்ல, சரவணன் ரொம்ப ஷாக் ஆகிறார். பின் சரவணன், இதோடு நம்முடைய உறவு முடிந்து விட்டது என்று தன்மயிலை விட்டு செல்கிறார். தங்கமயில் என்ன செய்வதென்று புரியாமல் கதறுகிறார்.