சரவணன் சொன்ன வார்த்தையால் கொந்தளித்த தங்கமயில், சுகன்யாவின் புது ஆட்டம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 29/9/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர், குமாரை அடிக்கப் போனார். உடனே அரசி தடுத்து குமாரை அங்கிருந்து அனுப்பி வைத்தார். அதற்குப்பின் மளிகை கடைக்கு தங்க மயிலின் அப்பா வந்தார். அவர் கடையில் எந்த வேலையும் செய்யாமல் கஸ்டமர்களிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து சரவணனுக்கு கோபம் அதிகமானது. பின் யாரும் இல்லாத நேரம் பார்த்து கல்லாவிலிருந்து தங்கமயில் அப்பா பணத்தை எடுத்து வைத்துக் கொண்டார்.

வாங்குவதற்கு காசு இல்லை என்று கோமதி இடம் புலம்பி கொண்டிருந்தார். உடனே மீனா, நீங்கள் கொடுத்த 10 லட்சம் இருக்கிறது. அது தரட்டுமா மாமா? என்றார். அதற்கு பாண்டியன், அதை நீங்கள் சீக்கிரம் பேங்கில் கட்டி கடனை முடியுங்கள் என்றார். அதற்குப்பின் செந்தில், எதற்காக அப்பாவிடம் பணத்தை திருப்பி தர பார்க்கிறாய். அதை வைத்து நான் நிறைய பிளான் வைத்திருக்கிறேன். பர்னிச்சர் எல்லாம் வாங்க வேண்டும் என்றார். அதற்கு மீனா, புது வீட்டிற்கு நான் வரவில்லை. நான் இங்கே சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். வேண்டுமென்றால் நீங்கள் போங்க என்று திட்டி விட்டு சென்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் தங்கமயில் அப்பா மாணிக்கம் கடையில் எந்த வேலையுமே செய்யாமல் இருந்தார். பின் வீட்டிற்கு கிளம்பும்போது தேவையான மளிகை பொருள்களை சரவணன் எடுத்து வைத்தார். உடனே மாணிக்கமும் தன்னுடைய வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை எடுத்து வைத்து விட்டு எதையுமே சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினார். இதையெல்லாம் பார்த்து சரவணன் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் கதிர், நீ படிக்கும் விஷயம் மட்டும் பாரு. நீ டிராவல்ஸ்க்கு வர வேண்டாம் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர், ராஜி, மீனா, செந்தில் நாலு பேருமே குவாட்டர்ஸ் விஷயமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜி, மீனா வீட்டை விட்டு போவதை நினைத்து ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார். உடனே மீனா, நான் எங்கும் போகவில்லை என்கிறார். கதிர், செந்திலுக்கு சப்போர்ட் செய்து தான் பேசுகிறார். உடனே மீனா, வேண்டும் என்றால் உங்கள் அண்ணனுடன் சேர்ந்து நீங்கள் அந்த வீட்டுக்கு போய் விடுங்கள் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் கடையில் மாணிக்கம் செய்த வேலையால் கொந்தளித்த சரவணன், தங்கமயில் இடம் சண்டை போடுகிறார். தங்க மயிலின் குடும்பத்தை பற்றியும் அவருடைய அப்பா செய்த வேலையையும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதனால் தங்கமயில், எங்க அப்பா ஒன்னும் பணம் திருட மாட்டார். நாங்கள் கடை வைத்திருந்தோம் என்றால் மாதம் மாதம் நாங்களே மளிகை சாமான் பொருளை கொடுத்திருப்போம் என்றெல்லாம் பேசுகிறார். சரவணன், இனி உன் அப்பா கடை பக்கமே வரக்கூடாது என்று திட்டுகிறார். அதற்குப்பின் பழனி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்ப வந்த பாண்டியன், மளிகை சரக்கெல்லாம் வந்து இருக்கிறது. அதை தூக்கிப் போடணும் என்று சொன்னவுடன் பழனி வேகமாக கிளம்புகிறார். இதை பார்த்து கோபப்பட்ட சுகன்யா, சக்திவேலிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். பழனிக்கு சொந்தமாக பிசினஸ் ஏற்பாடு செய்து தரச் சொல்லிக் கேட்கிறார். சக்திவேல், பழனியை அழைத்துக்கொண்டு இங்கே வந்துவிடு எல்லாமே செய்து தருகிறேன் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full