வார்த்தைகளால் காயப்படுத்தும் சரவணன், வேதனையில் உடைந்து போன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 20/8/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன், எதற்காக இந்த அலங்காரம்? என்று கேட்டார். தங்கமயில் கர்ப்பமாக இருப்பதால் இப்படி செய்கிறோம் என்று சொன்னார்கள். பின் கோயிலில் இருந்து கோமதி, தங்கமயில் இருவருமே வீட்டுக்கு வந்தார்கள். அப்போது மீனா, உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் சரவணன் மாமா இதை செய்தார் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் சந்தோஷத்தில் தங்கமயிலை பிடிக்க முடியவில்லை. அதற்குப்பின் சரவணன் தான் வாங்கிய கிப்ட்டை தங்கமயிலுக்கு கொடுத்தார். அந்த புடவையை பார்த்து தங்கமயில் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

தங்கமயில் கர்ப்பமாக இருப்பதால் கேக் வெட்டி குடும்பமே சந்தோஷமாக கொண்டாடினார்கள். அதற்கு பின் ரூமில் சரவணன், தங்க மயிலுக்கு மல்லி பூ வாங்கி தந்தார். பின் இருவருமே குழந்தையை பற்றி ரொம்ப எமோஷனலாக பேசினார்கள். மறுநாள் காலையில் தங்கமயிலின் செக்கப்பிற்காக சரவணன் குடும்பத்தில் கிளம்பினார்கள். குழந்தையை பார்க்கும் ஆர்வத்தில் சரவணன் ரொம்பவே எதிர்பார்த்து இருந்தார். ஹாஸ்பிடலுக்கு தங்கமயில் அம்மா, கோமதி, ராஜி, கதிர் எல்லோருமே சென்றிருந்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

ஹாஸ்பிடலில் தங்க மயிலை செக் செய்த டாக்டர், தங்கமயில் கர்ப்பமாகவே இல்லை. அது சில கிட்டில் இப்படித்தான் தவறான ரிசல்ட் வரும் என்றார். இதை கேட்டவுடன் சரவணன் ஆடிப் போனார். கோமதி, தங்கமயில் அம்மா எல்லோருமே ரொம்பவே வருத்தப்பட்டார்கள். தங்கமயில் ஹாஸ்பிடல் என்று கூட பார்க்காமல் கதறி அழுதார். வேதனையில் சரவணன் அங்கு இருந்து கோபமாக சென்று விட்டார். உண்மை அறிந்து வீட்டில் உள்ள எல்லோரும் வருத்தப்பட்டார்கள். பின் வீட்டிற்கு வந்த தங்கமயில் அழுது கொண்டே இருந்தார். சரவணன், தங்கமயில் இடம் பேசாமல் வேலைக்கு கிளம்பி விட்டார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் சரவணன் தேம்பி தேம்பி அழுதார். பாண்டியன், ஹாஸ்பிடலில் என்ன சொன்னார்கள்? என்றார். உடனே கதிர் நடந்ததை எல்லாம் சொன்னார். பின் பாண்டியன், சரவணனுக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் விஷயம் தெரிந்து வீட்டிற்கு வந்த மீனா, தங்கமயிலுக்கு ஆறுதல் சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே குழந்தை நினைத்து ரொம்பவே எமோஷனலாக அழுது பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் பாண்டியன், தங்கமயிலுக்கு அறிவுரை சொன்னார். இருந்தாலுமே சரவணன்-தங்கமயில் மனமுடைந்து அழுது கொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் இந்த விஷயத்தை சுகன்யா, குமார் வீட்டில் சொன்னார். இதை கேட்டு சக்திவேல் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன் வீட்டிற்கு வரவில்லை என்று கோமதி கவலையில் இருக்கிறார். பின் வீட்டிற்கு வந்த சரவணன் இடம் செந்தில், கதிர் இருவரும் ஆறுதலாக பேசுகிறார்கள். பின் ரூமிற்கு சென்ற சரவணனிடம் தங்கமயில் ரொம்ப எமோஷனலாக அழுது பேசுகிறார். கோபத்தில் சரவணன், நீ பொய் பேசுவது என்ன புதுசா? குழந்தை விஷயத்தில் கூட என்னை பொய் சொல்லி ஏமாற்றி விட்டாயே. உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன். இனி நீ யாரோ நான் யாரோ என்று ரொம்ப மோசமாக திட்டுகிறார். இதையெல்லாம் கேட்டு உடைந்து போன தங்கமயில் எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், சரவணன் கேட்கவே இல்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full