கல்லூரி ரகசியத்தை அறிந்து அதிர்ச்சியான சரவணன், தங்கமயில் நிலைமை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 13/5/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சத்திவேல், தன் மகனை திட்டி இருந்தார். மீனா செய்த வேலைக்காக பாண்டியன் கேக் வாங்கிட்டு வந்து இருந்தார் . அப்போது வீட்டில் உள்ளவர்கள் ராஜியும் நடன போட்டியில் வெற்றி பெற்றதை சொன்னார்கள். உடனே பாண்டியன் இரண்டு கேக் வாங்க சென்றார். ஆனால், மீனா- ராஜி இருவருமே வேண்டாம் என்று சொல்லி அந்த கேக்கை வெட்டி வீட்டில் உள்ள எல்லோருக்குமே கொடுத்து சந்தோஷப்பட்டார்கள். இதையெல்லாம் பார்த்து சரவணன் வருத்தப்பட்டார். பின் சரவணன் சர்டிபிகேட் எங்கே என்று கேட்டார்.

தங்கமயில், என் அப்பா தொலைத்துவிட்டார் என்று சொன்னவுடன் இன்னும் பயங்கரமாக கோபப்பட்டு சரவணன் திட்டி இருந்தார். உன்னுடைய கல்லூரியின் பெயரை சொல்லு, நானே சர்டிபிகேட் ரெடி பண்ணுகிறேன். என்னுடைய அப்பா, மீனா -ராஜியை பெருமையாக பேசும்போது உன்னை பெருமையாக பேசணும் என்று நினைக்கிறேன். அதற்கான வாய்ப்பை நீ தர மாட்டுகிறாய் என்று கோபப்பட்டு அங்கிருந்து சென்று விட்டார். மறுநாள் காலையில் ராஜி- கதிர் இருவருமே ப்ராக்டிஸ்காக கிரவுண்டுக்கு சென்று இருந்தார்கள். அங்கு அவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து குமார் கோபப்பட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் ராஜி, பரிசு வாங்கிய பைக் வீட்டிற்கு வருவதால் ரொம்ப சந்தோஷத்தில் இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே ராஜியின் பைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பைக் கொண்டு வந்து வீட்டில் கொடுத்தார்கள். பைக்கை பார்த்து எல்லோரும் சந்தோசப்பட்டார்கள். பின் கதிர், பைக்கை எடுத்து எல்லோரையும் ரவுண்ட் கூட்டிட்டு போனார். ஆனால், ராஜியை மட்டும் ஏற்றவில்லை. இதனால் ராஜி ரொம்பவே வருத்தப்பட்டார். பின் செந்தில் இடம் பைக்கை பற்றி பெருமையாக கதிர் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் அரசி கல்யாண பத்திரிகையை பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வீட்டுக்கு வந்த சரவணன், நான் வேலை செய்யும் இடத்தில் பத்திரிக்கை வைக்க வேண்டும். தங்கமயில் கிளம்பு என்றார். தங்க மயிலும் ரொம்ப சந்தோசமாக தயாராகி வந்தார். அப்போது சரவணன், நான் பத்திரிக்கை வைக்க போகவில்லை. உன்னுடைய கல்லூரிக்கு போகிறோம் என்று சொன்னவுடன் தங்கமயில் ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன், தங்கமயில் சொன்ன கல்லூரிக்கு வருகிறார். அப்போது உள்ளே வராமல் தங்கமயில் தயங்குகிறார். இருந்தும் விடாமல் சரவணன், தங்கமயிலை அழைத்து போகிறார். ஒரு கட்டத்தில் பயத்தில் தங்கமயில் வெளியே வருகிறார். அப்போது சரவணன், என்ன ஆனது? ஏன் வர மறுக்கிறாய்? வேற கல்லூரியா? என்று கேட்கிறார். வேறு வழி இல்லாமல் தங்கமயில் நடந்த உண்மை எல்லாத்தையும் சொல்லி விடுகிறார். நான் காலேஜ் போகவில்லை. நான் 12ஆம் தான் படித்திருக்கிறேன். வீட்டில் பொய் சொல்லி தான் என்னை திருமணம் செய்து வைத்தார்கள். என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதைக் கேட்டவுடன் சரவணனுக்கு இடிமேல் இடி விழுகிறது. தங்கமயில் மன்னிப்பு கேட்டு கதறி அழுகிறார். ஆனால், சரவணன் அதை கேட்காமல் கோபத்தில், இதோடு உன் மேல் இருந்த நம்பிக்கை போனது. இனி நம் உறவு முடிந்து விட்டது என்று அங்கிருந்து சென்று விடுகிறார். தங்க மயில், என்ன செய்வது என்று புரியாமல் தலையில் அடித்துக் கொண்டாடு அழுகிறார். இன்னொரு பக்கம் சுகன்யா, அரசியின் மனதை மாற்ற முயற்சி செய்கிறார். அப்போது போன் செய்த மாப்பிள்ளை சதீஷ், அரசிடம் பேசுகிறார். அரசியும் சதீஷிடம் நன்றாக பேசினார். இதை கேட்டு சுகன்யா ஷாக் ஆனார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full