டாக்டர் சொன்ன வார்த்தையால் கொந்தளித்த சரவணன், இனி தங்கமயில் நிலை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 17/8/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கோமதி, யாராவது என்ன சொல்வார்களோ? என்ற பயத்தில் புலம்பிக்கொண்டே இருந்தார். பின் கோர்ட்டில் குமாரை விசாரித்தார்கள். அதற்குப்பின் அரசியையும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டு விசாரித்தார்கள். இதை எல்லாம் பார்த்து கோமதி ரொம்ப பதறினார். அதற்குப்பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வேறொரு தேதிக்கு ஒத்தி வைத்தார். பின் வீட்டில் கோர்ட்டில் நடந்ததை பற்றியெல்லாம் விசாரித்தார்கள். கோமதி, பாண்டியன் சொன்னார்கள். அதற்குப்பின் கதிரிடம் பாண்டியன், பேங்கிற்கு போய் கையெழுத்து போடுகிறேன். லோன் எடுத்துக் கொள் என்று சொன்னார்.

இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பின் பாண்டியன், நான் லோன் வாங்கி தருவேன். உன்னுடைய விருப்பத்திற்கு எல்லாம் ஆட முடியாது என்று கண்டிஷன் போட்டார். இதைக் கேட்டு கோபப்பட்ட கதிர் தன்னுடைய அம்மாவிடம் சொன்னார். கோமதிக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் கதிர், அப்பா எனக்கு எந்த உதவியும் செய்ய தேவையில்லை. நீங்களே சொல்லிடுங்க என்றார். உடனே கோமதி, நீங்கள் எந்த கையெழுத்தும் போட்டு தர தேவையில்லை. அவனே பார்த்துக்கொள்ளட்டும் என்று சொன்னார். பாண்டியனும் கோபத்தில் திட்டி விட்டு சென்று விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

கதிர், சரவணன், செந்தில் மூவருமே கடையில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பாண்டியன், என்ன விஷயம் என்று கேட்டார். அதற்கு சரவணன், சும்மா என்று சமாளித்து விட்டார். அதற்குப்பின் சரவணன், தங்கமயிலுக்கு கிப்ட் வாங்குவதற்காக பணம் கேட்டார். பாண்டியனுமே எதுவும் சொல்லாமல் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டார். உடனே சரவணன் அந்த பணத்தை வைத்து தங்கமயிலுக்காக ஒரு நல்ல புடவையை வாங்கிக் கொண்டார். இன்னொரு பக்கம் தங்களுடைய அன்னிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக செந்தில்,கதிர் இருவருமே கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்கள்.

சீரியல் ட்ராக்:

பின் தங்கமயிலுக்கு சப்ரைஸ் கொடுக்க வீட்டை அலங்காரம் செய்து வைத்தார்கள். அப்போது வீட்டிற்கு வந்த பாண்டியன், எதற்காக இந்த அலங்காரம்? என்று கேட்டார். தங்கமயில் கர்ப்பமாக இருப்பதால் இப்படி செய்கிறோம் என்று சொன்னார்கள். பின் கோயிலில் இருந்து கோமதி, தங்கமயில் இருவருமே வீட்டுக்கு வந்தார்கள். அப்போது மீனா, உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் சரவணன் மாமா இதை செய்தார் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் சந்தோஷத்தில் தங்கமயிலை பிடிக்க முடியவில்லை. அதற்குப்பின் சரவணன் தான் வாங்கிய கிப்ட்டை தங்கமயிலுக்கு கொடுத்தார். அந்த புடவையை பார்த்து தங்கமயில் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் தங்கமயில் கர்ப்பமாக இருப்பதால் கேக் வெட்டி குடும்பமே சந்தோஷமாக கொண்டாடினார்கள். அதற்கு பின் ரூமில் சரவணன், தங்க மயிலுக்கு மல்லி பூ வாங்கி தந்தார். பின் இருவருமே குழந்தையை பற்றி ரொம்ப எமோஷனலாக பேசினார்கள். மறுநாள் காலையில் தங்கமயிலின் செக்கப்பிற்காக சரவணன் குடும்பத்தில் கிளம்பினார்கள். குழந்தையை பார்க்கும் ஆர்வத்தில் சரவணன் ரொம்பவே எதிர்பார்த்து இருந்தார். ஹாஸ்பிடலுக்கு தங்கமயில் அம்மா, கோமதி, ராஜி, கதிர் எல்லோருமே சென்றிருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=URClv6HLhBg

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஹாஸ்பிடலில் தங்கமயிலை செக் செய்த டாக்டர், தங்கமயில் கர்ப்பமாகவே இல்லை. அந்த பிரக்னன்சி கிட்டில் காண்பித்தது ஃபால்ஸ் பிரக்னன்சி என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் சரவணன் ரொம்பவே மனமடைந்து விடுகிறார். பாண்டியன் வீட்டில் எல்லோருமே வருத்தப்படுகிறார்கள். பின் வீட்டில் சரவணன் தன்னுடைய குழந்தை இல்லை என்று தெரிந்தவுடன் ரொம்பவே வேதனையில் இருக்கிறார். தங்கமயில், எமோஷனலாக அழுகிறார். உடனே சரவணன், நீ பொய் சொல்வது புதுசா? குழந்தை விஷயத்தில் இப்படி ஏமாற்றுவாய் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை என்று சொல்கிறார். இதைக் கேட்டு தங்கமயில் ரொம்பவே உடைந்து விடுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full