மீண்டும் அரசியை பெண் கேட்டு வரும் சதிஷ் அம்மா, பாண்டியன் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் அரசி, நான் அந்த வீட்டில் இருக்கும் வரை என்னை அப்பத்தா, அத்தைகள் எல்லோருமே நன்றாகத்தான் பார்த்துக் கொண்டார்கள். இன்னும் ரெண்டு குடும்பத்தின் பகை அதிகமாக தான் ஆகும். அதனால் நான் கேசை வாபஸ் வாங்குகிறேன் என்றார். அதனால் பாண்டியனுமே சரி என்றார். பின் கோர்ட்டில் அரசி, இந்த விஷயத்தால் ரெண்டு குடும்பத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். செய்த தவறை உணர வேண்டும் என்று நினைத்தேன். மற்றபடி அவருக்கு தண்டனை வாங்கி தருவதில் எனக்கு விருப்பமில்லை என்றார்.
நேற்று எபிசோட்டில் கோர்ட்டில் குமார், அரசியின் காலை பிடித்து மன்னிப்பு கேட்டார். அதை பார்த்து பாண்டியன் குடும்பத்தில் எல்லோருமே ஷாக் ஆனார்கள். அப்போது குமார், நான் உனக்கு செய்தது பெரிய துரோகம். நீ கேசை வாபஸ் வாங்குவாய் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. என்னை மன்னித்துவிடு என்று அழுது கெஞ்சினார். இதையெல்லாம் பார்த்த சக்திவேல் கோபப்பட்டு குமாரை திட்டினார். ஆனால், குமார் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் அரசி இடம் எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு குமாரை அழைத்து வந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோர்ட்டில் அரசி கேஸ் வாபஸ் வாங்கின விஷயத்தை பெருமையாக பேசினார்கள். இதனால் கோபப்பட்ட சக்திவேல், அரசி குடும்பத்தை பற்றி மோசமாக திட்டிக் கொண்டிருந்தார். மாரி- வடிவு எல்லோருமே பாண்டியன் குடும்பத்தை பற்றி பெருமையாக பேசி இருந்தார்கள். குமாரும் தான் செய்த தவறை உணர்ந்து பேசினார். இன்னொரு பக்கம் அரசி, கேஸ் வாபஸ் வாங்கியதைப் பற்றி பாண்டியன் வீட்டில் எல்லோருமே மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து வந்த அப்பத்தா, அரசி-பாண்டியன் இடம் நன்றி சொல்லி எமோஷனலாக பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசி மீது எந்த தவறும் இல்லை என்று கோர்ட்டில் சொன்னதால் சதிஷ் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். அதோடு மீண்டும் அரசியை திருமணம் செய்து கொள்வதைப் பற்றி தன்னுடைய அம்மாவிடம் சொல்கிறார். அவருமே எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் அப்பத்தா, குமார் இருவருமே நடந்ததை நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அப்பத்தா, எனக்காகவும் உன்னுடைய அம்மாவிற்காகவும் தான் அரசி கேசை வாபஸ் வாங்கினால் என்ற உண்மையை சொல்லி விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் பாண்டியன் வீட்டில் சொத்தை விற்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோமதி, குமார் கோர்ட்டில் அரசி காலில் விழுந்ததை பற்றி எமோஷனலாக பேசுகிறார் . பின் பாண்டியன் வீட்டிற்கு சதீஷும் அவருடைய அம்மாவும் வந்திருக்கிறார்கள். அப்போது சதிஷ் அம்மா, நடந்த அனைத்தையும் டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட விஷயத்தை சொல்கிறார். கோமதியும் நடந்த விஷயத்தை பற்றி சொல்கிறார். அப்போது சதீஷின் அம்மா, மீண்டும் சதீஸ்-அரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று கேட்கிறார். பாண்டியன் ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.