பாண்டியன் செயலால் கோபப்படும் செந்தில், வேலை தெரியாமல் அவமானப்படும் தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' பழனி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது போன் செய்த சுகன்யா, சினிமாவுக்கு போகவில்லையா? என்று கேட்க, கடையில் வேலை இருக்கிறது என்று ஏதோ சொல்லி பழனி சமாளித்தார். ஆனால், சுகன்யா அவரை வறுத்து எடுத்தார். இது எல்லாம் பார்த்த செந்தில், தன்னுடைய அப்பாவிடம் பேசி எப்படியோ படம் பார்க்க அனுமதி வாங்கி தந்தார். அதற்குபின் வீட்டில் அரசி போனை தான் பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த பாண்டியன் கேள்வி கேட்க, அரசி ஏதேதோ சொல்லி சமாளித்தார்.
உடனே சுகன்யா, அரசிக்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார். அதற்குப்பின் அரசி ரூமுக்கு போன சுகன்யா, நீ குமாரை காதலிக்கும் விஷயம் எனக்கு தெரியும். அவன் ரொம்ப நல்லவன். உன்னை அவனுக்கு பிடிக்கும் என்று அரசி மனசை மாற்றும் வகையில் பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து மீனா வந்தவுடன் பேச்சை சுகன்யா மாத்தி விட்டார். நேற்று எபிசோட்டில் செந்தில்- மீனா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது செந்தில், என்னுடைய அப்பா செய்யும் சில விஷயங்கள் எனக்கு பிடிக்கவில்லை என்று பேசி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
உடனே மீனா, போக போக எல்லாம் மாறும், கவலைப்படாதே என்று அவருக்கு அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் பயிற்சி எடுக்க நேரமாகிவிட்டது என்று கதிர், ராஜியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வர, அதை பற்றி கவலை கொள்ளாமல் ராஜியை கதிர் அழைத்துக் கொண்டு போனார். இதையெல்லாம் பார்த்து பாண்டியனுக்கு கோபம் வந்து கோமதி இடம் திட்டி இருந்தார்
இன்னொரு பக்கம் தங்கமயில், வேலைக்கு போனார். வேலைக்கான உடை அணிந்து கொண்டு வேலை செய்யுமா என்று ஓனர் திட்டி இருந்தார். பின் சாப்பிட்ட இடத்தை கிளீன் செய்ய சொல்ல, தங்கமயில் ரொம்ப வேதனை அடைந்தார்.
நேற்று எபிசோட்:
பாண்டியனை சந்தித்து தங்கமயில் வேலை பற்றி அவர் அம்மா பேசினார். உடனே பாண்டியன், பெண்கள் வேலைக்கு போவது நல்லது தானே. சொந்தக்காலில் நிற்பது தான் அவர்களுக்கு மரியாதை என்று சொல்ல, அவர்களால் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். இன்னொரு பக்கம் மீனாவின் அப்பா, உங்களால் இனிமேல் படித்து வேலைக்கு போவது என்பது கஷ்டமான விஷயம். நீங்கள் பணம் கொடுத்து வேலைக்கு சென்று விடுங்கள். 10 லட்சம் கொடுத்தால் கவர்மெண்ட் வேலை ரெடியாக இருக்கிறது என்று சொன்னவுடன் மீனா ஷாக் ஆனார். செந்தில் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில்- மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா, எப்படி பணத்தை ரெடி பண்ண முடியும். நீங்கள் எதற்கு ஒத்துக் கொண்டீர்கள். இரண்டு மூன்று முறை தேர்வு எழுதினால் கண்டிப்பாக பாஸாகி விடலாம் என்று சொல்கிறார். அதற்கு செந்தில், ஒவ்வொரு நாளும் அப்பாவிடம் பணத்திற்காக கைகட்டி நிற்க முடியாது. எனக்கு என்று தனி சம்பளம் வேண்டும் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயிலின் நிலைமையை நினைத்து அவருடைய அம்மா- அப்பா இருவரும் ரொம்ப எமோஷனலாக பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் தங்கமயில், ஹோட்டலில் வேலை தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து அந்த ஓனர் திட்டுகிறார். உடனே தங்கமயில் பயத்தில் பரபரப்பாக வேலை செய்கிறார். இன்னொரு பக்கம் படம் பார்ப்பதற்கு சுகன்யா ரெடியாகி பழனிக்கு போன் பண்ணி அழைக்கிறார். அதற்கு பின் பழனி, பாண்டியன் இடம் அனுமதி வாங்கி போகிறார். ஆனால், பாண்டியன் டிக்கெட்டுக்கு மட்டும் காசு கொடுத்து அனுப்புகிறார். இதையெல்லாம் பார்த்து செந்திலுக்கு கோபம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.