பாண்டியன் சொன்ன வார்த்தையால் மனம் உடைந்த செந்தில், கோபத்தில் மீனா- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி, பாண்டியனிடம் டியூஷன் எடுக்கும் விஷயத்தைப் பற்றி சொல்ல, வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். ஆனால், பாண்டியன் எதுவுமே பேசவில்லை. இதனால் வீட்டில் எல்லோரும் பாண்டியன் என்ன முடிவு எடுப்பாரோ? என்ற பதட்டத்திலேயே இருந்தார்கள். அப்போது வந்த பாண்டியன், ராஜி டியூஷன் எடுப்பதற்கு சம்மதம் கொடுக்க, எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். பின் பாண்டியன் எடுத்த முடிவை நினைத்து செந்தில்- மீனா இருவருமே ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்னொரு பக்கம் தங்கமயில் தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து, பாண்டியன் தன்னையும் வேலைக்கு போக சொன்னதை சொல்ல, அவர் அதிர்ச்சியாகி ஏதோ சொல்லி சமாளி என்றார். அந்த சமயம் வந்த சரவணன், நீ வேலைக்கு போ என்று சொல்ல, தங்கமயில் முடியாது என்றார். மறுநாள் காலையில் கோமதி, மீனா மூலம் கோயில் பிரசாதத்தை கொண்டு போய் கொடுத்தார். இதை அறிந்த கோமதியின் அண்ணன், அவரின் அம்மாவை திட்டி விட்டு பாண்டியன் இடம் வம்பிழுத்து இருந்தார். அதற்கு பாண்டியனும் பதிலடி கொடுத்து இருந்தார். இதையெல்லாம் பார்த்து ராஜி, கோமதி இருவருமே சந்தோஷப்பட்டு இருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் ராஜி, டியூசன் கிளம்ப போகிறேன் என்று சொன்னவுடன் பாண்டியன், தனியாக வேண்டாம். கதிரை அழைத்துக் கொண்டு போக என்றார். அப்படியே மீனா, செந்தில் தேர்வு எழுதும் விஷயத்தை சொன்னவுடன் முதலில் பாண்டியன் ஷாக் ஆனார். பின் ஒழுங்காக எழுது என்று அறிவுரை சொல்லி அனுப்புகிறார். எல்லோரும் வேலைக்கு போவதை பற்றி வீட்டில் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும்போது தங்கமயிலையும் பாண்டியன் வேலைக்கு போக சொன்னார்.
நேற்று எபிசோட்:
உடனே அவர் ஏதேதோ சொல்லி சமாளித்து அமைதியாகி இருந்தார். பின் ராஜி-கதிர் இருவருமே சைக்கிளில் போகும்போது அவருடைய சித்தப்பா ரொம்ப கேவலமாக கதிரையும், அவருடைய குடும்பத்தையும் பேச, ராஜி கோபம் வந்து திட்டி இருந்தார். பின் உங்களைப்போல் வட்டிக்கு விட்டு யாரும் பிழைக்கவில்லை. சொந்தமாக சம்பாதித்து வாழ்கிறோம் என்று தன்னுடைய மாமனார் குடும்பத்தை பெருமையாக பேசி இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சித்தப்பா, அவருடைய அண்ணனிடம் பயங்கரமாக கோபப்பட்டு ராஜியை திட்டி பேச, அவர் தன் தம்பியை திட்டி விட்டு சென்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில்- மீனா இருவருமே அரசாங்க வேலை, தேர்வு பற்றி பேசிக்கொண்டு வருகிறார்கள். அப்போது தேர்வு எழுத புது சட்டை வாங்க வேண்டும் என்று மீனா சொல்ல, செந்தில் ஒத்துக் கொள்கிறார். பின் கடையில் தன்னுடைய அப்பாவிடம் புது சட்டை வாங்குவதற்கு செந்தில் பணம் கேட்டார். ஆனால், அவர் முடியாது. இருக்கும் சட்டையை எடுத்துப் போடு, காசை வீணடிக்காதே என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் செந்திலுக்கு பயங்கர கோபம் வந்து பழனியிடம் புலம்பி இருந்தார். பின் என்ன செய்வது? என்று புரியாமல் செந்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் மீனா தொடர்ந்து போன் செய்து கொண்டே இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் ராஜி டியூஷன் எடுக்கும் இடத்திற்கு கதிர் வந்து நிற்கிறார். இதை பார்த்த ராஜி, உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு அவருடன் வீட்டிற்கு வருகிறார். பின் மீனா, செந்திலுக்கு போன் செய்து சட்டை பற்றி கேட்க, பழனி எல்லாம் உண்மையுமே சொல்லிவிடுகிறார். இதனால் கோபப்பட்டு மீனா தனியாக புலம்பி வருகிறார். இதை பார்த்த கதிர், என்ன ஆனது? என்று கேட்டதற்கு, கடைக்கு போகணும் என்று அவரை துணி கடைக்கு அழைத்து வருகிறார் மீனா. பின் அங்கு செந்திலுக்காக எல்லா சட்டைகளையும் மீனா பார்க்கிறார். ஆனால், அவருக்கு பிடிக்கவே இல்லை. இதை பார்த்து கதிருக்கு தலை சுத்துகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.