மீனாவிடம் மன்னிப்பு கேட்ட செந்தில், கோபத்தில் கதிரை திட்டிய பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 27/6/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் செந்தில், அப்பா கொடுத்த பணத்தை கொண்டு போய் மீனா அப்பாவிடம் கவர்மெண்ட் வேலைக்காக கொடுத்து விட்டேன். பணம் பேங்கில் போடவில்லை என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் கதிர் ஷாக் ஆனார். செந்தில், என்ன செய்வது என்றே புரியவில்லை. அப்பாவிடம் நான் மாட்டிக் கொண்டேன் என்று ரொம்பவே பதறினார். உடனே கதிர், ஏதாவது செய்யலாம் தைரியமா இருங்கள். நாம் அத்தை இடம் பேசலாம் என்று இருவருமே மாப்பிள்ளையின் அம்மாவிடம் பேச போனார்கள். ஆனால், அவர்கள் வீட்டில் இல்லை. உடனே கதிர் போன் செய்து பேசி இருந்தார். ஆனால், அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கூட கேட்காமல் திட்டி போனை வைத்து விட்டார். இதனால் செந்திலுக்கு இன்னும் பயம் அதிகமானது.

அதற்குப்பின் போன் செந்திலுக்கு போன் செய்த மீனா, உங்கள் அத்தை ஒத்துக் கொள்வார் என்று எப்படி நினைத்தீர்கள். தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டிக் கொண்டீர்கள். தயவு செய்து ஏதாவது செய்யுங்கள் என்று சொன்னார். பின் பாண்டியனும் செந்திலுக்கு போன் செய்தார். அப்போது பாண்டியன், பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சீக்கிரம் வா என்று சொன்னார். உண்மையை சொல்ல முடியாமல் கதிர்- செந்தில் இருவருமே தவித்தார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனை பார்க்க அவர் வேலை செய்யும் இடத்திற்கு போனார். சரவணன், எதற்காக இங்கே வந்தாய்? வீட்டிற்கு கிளம்பு என்று சொன்னார். தங்கமயில், எனக்கு அல்வா சாப்பிட வேண்டும் என்று இருந்தது. எனக்கு நீங்களே வந்து வாங்கி கொடுங்கள் என்று சொன்னார். சரவணன் வேறு வழியில்லாமல் அமைதியாக கிளம்பி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் செந்தில், பணத்திற்கு என்ன செய்வதென்று புரியாமல் தனது தெரிந்தவர்கள் எல்லாரிடமும் பணம் கேட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கதிர், தன்னுடைய நண்பர்களிடம் பணம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், யாருமே இல்லை என்று சொன்னார்கள். இன்னொரு பக்கம் அரசி தன்னுடைய அம்மாவிடம் பேச வந்தார். அப்போது கோமதி கையில் இருந்த தண்ணீரை அரிசி முகத்தில் வீசி திட்டி விட்டு உள்ளே சென்றார். இதை பார்த்த அப்பத்தா, அரிசிக்கு ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், செந்திலுக்கு போன் செய்து வரவைத்தார்.

நேற்று எபிசோட்:

செந்தில்- கதிர் இருவருமே என்ன சொல்வது என்று புரியாமல் பயந்து கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். அந்த சமயம் பார்த்து பணத்தை வாங்குவதற்கு மாப்பிள்ளை அம்மா, அப்பா இருவருமே வந்தார்கள். அப்போது பாண்டியன், பணம் எங்கே? என்று கேட்டார். செந்தில்- கதிர் இருவருமே மாற்றி மாற்றி ஏதேதோ சொன்னார்கள். கோபத்தில் பாண்டியன், பணத்தை என்னதான் செய்தீர்கள்? என்று கேட்டார். உடனே மீனா, பணத்தை நான் தான் பேங்கில் இருந்து எடுத்து வந்தேன் என்று 10 லட்சம் ரூபாய் பணத்தை பாண்டியனிடம் கொடுத்தார். அந்த பணத்தை பாண்டியன் மாப்பிள்ளை வீட்டில் கொடுக்க, அவர்களுமே எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், கதிரை அலைத்து பேசுகிறார். அப்போது பாண்டியன், அரியரை எப்போது கிளியர் செய்ய போகிறார். இந்த கார் ஓட்டும் தொழிலை விட்டு ஒழுங்கு மரியாதையாக படி என்று திட்டுகிறார். அதற்கு கதிர், என் வேலையை எனக்கு பார்த்துக்க தெரியும். நான் பாஸ் செய்து விடுவேன் என்று சொல்கிறார். அதற்கு பாண்டியன், இந்த கார் வேலையை விட்டுட்டு ஒழுங்கு மரியாதையாக மளிகை கடைக்கு வா. நீ அங்கு வாங்கும் சம்பளத்தை விட 100 ரூபாய் அதிகமாக தருகிறேன் என்று சொல்கிறார். ஆனால், கதிர் முடியாது என்று மறுத்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் பாண்டியன், உன் அண்ணன் கடையில் நன்றாக இல்லையா? என்று கேட்கிறார். அதற்கு கதிர், அண்ணன் நன்றாக இருக்கிறாரா? என்று அவரைத்தான் கேட்கனும் என்று சொல்ல, செந்திலால் எதுவுமே பேச முடியாமல் திணறுகிறார். அதற்குப்பின் கோமதி, எதற்காக இப்படி அவரை கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று தன்னுடைய மகன்களை திட்டுகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த செந்தில், மீனாவிடம் மன்னிப்பு கேட்டு அழுகிறார். அப்போது மீனா, இந்த பிரச்சனை எல்லாம் வரும் என்று தெரிந்துதான் நான் லோனுக்கு அப்ளை பண்ணி இருந்தேன். லோன் கிடைக்க தாமதம் ஆகிவிட்டது. இல்லை என்றால் முன்னாடியே பணத்தை கொடுத்திருப்பேன் என்று இருவரும் ரொம்ப எமோஷனலாக பேசுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full