தன் தந்தையை நினைத்து வருத்தப்படும் செந்தில், பாண்டியன் செய்த வேலை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த செந்தில்- மீனா இருவருமே நார்மலாக எல்லோரிடம் பேசி இருந்தார்கள். ஆனால், யாருமே சரியாக பேசவில்லை. மீனா, பாண்டியனிடம் பேசி இருந்தார். ஆனால், பாண்டியன் எதுவுமே கண்டுக்கொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் கதிர் ஜாலியாக பேச, அதற்கு செந்திலுமே பதில் கொடுத்தார். இவர்கள் எல்லோரும் பேசுவதை பார்த்து பாண்டியன் கடுப்பாகி சாப்பிடுவதை விட்டு சென்று விட்டார். இதனால் கோமதி கோபப்பட்டு திட்டினார்.
மீனா, எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். எல்லாம் மாறும் என்று செந்தில் வேலைக்கு செல்வதற்கு புது துணி எல்லாம் வாங்கி கொடுத்து இரண்டு பேருமே சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் ராஜி, மீனா அக்காவிடம் ஏன் பேச மாட்டேங்கிறீர்கள்? நீங்களும் மாமாவிடம் எங்கள் திருமணத்தையும் மறைத்து தானே வைத்தீர்கள் என்றெல்லாம் கேட்பதால் கோமதியால் எதுவுமே பேச முடியவில்லை. கதிருமே ராஜி பேசியது சரி என்பது போலவே பேசுகிறார். தனக்கு கதிர் சப்போர்ட் செய்து பேசியதால் ராஜி ரொம்பவே சந்தோஷப்பட்டார். மறுநாள் காலையில் கோமதி, செந்தில் வேலைக்கு போகிறான். வீட்டில் இருங்கள் என்று கேட்டார். ஆனால், பாண்டியன் கோபப்பட்டு திட்டி விட்டு சென்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் ராஜி, நீங்கள் அக்காவிடம் பேசவில்லை என்றால் நீங்கள் செய்த விஷயத்தை வெளியே சொல்லி விடுவேன் என்று பிளாக்மெயில் செய்தார். இதனால் வேறு வழி இல்லாமல் கோமதி, மீனாவிடம் பேசி இருந்தார். இதனால் மீனா ரொம்ப எமோஷனலாக அழுதார். அதற்கு கோமதி, நான் மாமா இருக்கும்போது பேசமாட்டேன். அவர் இல்லாத போது தான் பேசுவேன் என்று சொன்னார். அதற்குப்பின் செந்தில் வேலைக்கு கிளம்புவதால் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷமாக இருந்தார்கள். எல்லோருமே செந்திலை வழியனுப்பி வைக்க, பாண்டியன் மட்டும் வரவே இல்லை.
நேற்று எபிசோட்:
இதனால் செந்தில் வருத்தப்பட்டார். அப்போது வந்த மீனாவின் அப்பா, செந்திலை வழி அனுப்பி வைத்தார். இதை எல்லாம் பார்த்து செந்திலும் மீனாவும் சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன், சரவணன்-பழனி இருவரையுமே திட்டிக் கொண்டிருந்தார். கடை வேலையை யார் பார்ப்பது. அவன் என்ன ஒன்னும் தெரியாதவனா? என்றெல்லாம் செந்திலை வெளுத்து வாங்கி இருந்தார். அதற்குப்பின் செந்தில் அப்பாவை பார்க்க வேண்டும் கடைக்கு வண்டியை விடு என்று கதிரிடம் சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் என்னுடைய எபிசோட்டில் செந்தில்-கதிர் இருவருமே பாண்டியனின் கடைக்கு வருகிறார்கள். ஆனால், பாண்டியன் அங்கு இல்லை. அப்போது சரவணன், அப்பா உன் வேலையைப் பற்றிதான் பெருமையாக பேசி இருந்தார். இப்போது தான் அவசர வேலையாக கிளம்பி இருக்கிறார் என்று சொல்லி சமாளிக்கிறார். அப்பாவை பார்ப்பதற்காக செந்திலும் அங்கே காத்துக் கொண்டிருக்கிறார். பாண்டியன் கோவிலில் செந்தில் பெயரில் அர்ச்சனை செய்கிறார். அந்த சமயம் வந்த கோமதி இதை பார்த்து விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
பாண்டியனால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின் பாண்டியன்- கோமதி இருவருமே செந்திலுக்காக அர்ச்சனை செய்து சாமி கும்பிடுகிறார்கள். அதற்கு பின் கோமதியை அழைத்துக்கொண்டு பாண்டியன் வருகிறார். இன்னொரு பக்கம் செந்தில் வேலைக்கு நேரமாகிறது என்று கிளம்புகிறார். வரும் வழியில் அரசியை பார்க்கிறார் செந்தில். அப்போது அரசி, செந்திலுக்கு வாழ்த்து சொல்லி அனுப்புகிறார். இன்னொரு பக்கம் ஆபீஸிக்கு சென்ற மீனா, மீனாவின் அப்பா இருவருமே செந்திலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். நேரம் ஆகிறது என்று மீனாவின் அப்பா சொல்கிறார். அப்போது செந்தில் வந்து விடுகிறார். பின் செந்தில் அப்பாவை பார்க்க போனேன் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது