பாண்டியன் பேச்சை மீறிய செந்தில், சரவணனை நினைத்து வேதனைப்படும் தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி, போலீஸ் வேலைக்கு படிப்பதற்கு பாண்டியன் எந்த ஒரு தடையுமே போடவில்லை அமைதியாகவே இருந்தார். இன்னொரு பக்கம் சக்திவேல் வீட்டில் கட்டு கட்டாக பணம் இருப்பதை பார்த்துவிட்டு வந்த சுகன்யா, பழனி இடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். இதையெல்லாம் கேட்ட மீனா, பழனிக்கு சப்போர்ட் செய்து பேசினார். இதனால் மீனாவை, சுகன்யா திட்டினார். அதற்குப்பின் மீனா, சுகன்யாவிடம் போட்டு வாங்கி சக்திவேல் வீட்டில் என்னென்ன இருக்கிறது என்று எல்லாமே தெரிந்து கொண்டார். இதனால் மீனா யாருக்கும் தெரியாமல் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போன் செய்து சொல்லி விட்டார்.
இன்னொரு பக்கம் மீனாவின் அப்பா, செந்திலை சந்தித்து அரசாங்க வேலைக்கு பணம் கட்டுவது தொடர்பாக விசாரித்தார். செந்திலும் ரெடி பண்ணுகிறேன் என்றார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனை நினைத்து ரொம்ப வேதனைப்பட்டு கொண்டிருந்தார். தங்கமயில், சரவணனுக்கு ஃபோன் செய்துமே அவர் எடுக்கவே இல்லை. அதற்குப்பின் மீனாவிடம் போன் செய்து தங்கமயில் பேசி இருந்தார். பின் மீனா, சரவணன் இடம் போன் கொடுத்து பேச சொன்னார். ஆனால், அவர் பேசாமல் என்னுடைய போனில் பேசுகிறேன் என்று கொடுத்து விட்டார். இதனால் மீனாவிற்கு சரவணன் மீது சந்தேகம் வந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசொட்டில் பாண்டியன், அரசியின் திருமணத்துக்காக கார் வாங்குவதற்காக பணத்தை ஏற்பாடு செய்து வைத்திருந்தார். அதை செந்தில் இடம் கொடுத்து பேங்கில் போட சொன்னார். செந்தில், அந்த பணத்தை வைத்து தன்னுடைய மாமனாரிடம் கொடுக்க நினைத்தார். பின் இதைப்பற்றி மீனாவிடம் செந்தில் சொன்னார். உடனே மீனா, வேண்டாம். பேங்கில் போடுங்கள். லஞ்சம் கொடுத்து வேலை வாங்க கூடாது என்று அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் வீட்டில் பணத்தை வைத்துக்கொண்டு குமார்-சக்திவேல் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சக்திவேல் வீட்டில் சோதனை செய்தார்கள்.
நேற்று எபிசோட்:
சக்திவேல் எடுத்து சொல்லியுமே அவர்கள் கேட்கவில்லை. வீட்டில் இருந்த எல்லா பணத்தையும் எடுத்துக் கொண்டு, நீங்கள் எதுவாக இருந்தாலும் ஆபீஸில் வந்து பேசுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள். அதற்குப்பின் இதை பற்றி முத்துவேலிடம் சக்திவேல் சொன்னார். பின் சக்திவேல், பாண்டியன் மகள் வந்த நேரம் தான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று அரசியை திட்டினார். அதற்குப்பின் முத்துவேலுக்கு சம்பந்தப்பட்ட எல்லா இடங்களின் மீது ரெயிடு நடத்துவதாக தகவல் கிடைக்கிறது. இதனால் பதறி எடுத்துக் கொண்டு சக்திவேல், குமார் போனார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, சக்திவேல் வீட்டில் ரெய்டு நடந்ததை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். இது பார்த்த கோமதி, என்ன ஆனது? என்று விசாரிக்கிறார். அப்போது வந்த சுகன்யா, உங்கள் அண்ணன் வீட்டில் அதிகாரிகள் பணத்தை எடுத்துக் கொண்டு போகிறார்கள். கடையில் எல்லாம் ரெய்டு நடத்துகிறார்கள் என்று சொல்கிறார். இதைக் கேட்டு கோமதி, ராஜி இருவரும் ஷாக்காகிறார்கள். ஆனால், அது மீனா செய்த வேலை தான் யாருக்கும் தெரியவில்லை. உள்ளுக்குள் மீனா சந்தோசப்படுகிறார். இன்னொரு பக்கம் செந்தில், தன் மாமனாரிடம் அரசாங்க வேலைக்காக பணத்தை கொடுத்து விடுகிறார். ஆனால், இந்த விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மறைக்கிறார்.
சீரியல் ட்ராக்:
பாண்டியன், பேங்கில் பணத்தை போட்டு விட்டாயே என்று கேட்டதற்கு, செந்தில் ஆமாம் என்கிறார்.
அதற்குப்பின் கடைக்கு வந்த சரவணன் இடம் பாண்டியன், தங்கமயில் எப்போது வீட்டிற்கு வருவார்? என்று கேட்க, ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார் சரவணன். இதனால் செந்திலுக்கு சரவணன் நடவடிக்கையில் சந்தேகமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் தங்கமயில் வேதனையில் இருக்கிறார். அப்போது அக்கம் பக்கத்தினர் தங்கமயில் வாழாவெட்டியாக வந்துவிட்டாள் என்று அவருடைய பெற்றோரிடம் விசாரிக்கிறார்கள். இதனால் கோபப்பட்ட தங்கமயில் அம்மா, அவர்களை திட்டிய அனுப்பி விடுகிறார். தங்கமயிலுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் அழுதுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.