புது வீட்டில் பால் காய்ச்சும் செந்தில்-மீனா, பாண்டியன் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 5/10/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், முகத்தில் அடித்தது போல் தன்னுடைய அம்மாவை பேசி விட்டார். உடனே கோபப்பட்ட பாண்டியன், யாருக்கு என்ன தோணுதோ செய்யட்டும். நீ எதையும் பேசாதே கோமதி என்று அங்கிருந்து சென்று விட்டார். பின் கோமதி ரொம்பவே அழுது புலம்பி கொண்டிருந்தார். அப்போது மீனா, எனக்கு இந்த விஷயத்தில் உடன்பாடு இல்லை. உங்கள் மகன்தான் செய்கிறார். எனக்கு குவாட்டரஸ் போக விருப்பமில்லை என்று சொல்லி புரிய வைத்தார்.

வேதனையில் கோமதி தூங்காமல் அழுது கொண்டு இருக்க, பாண்டியன் ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் மீனா, உங்களுடன் நான் வருகிறேன். ஆனால், எனக்கு சுத்தமாக அதில் விருப்பமும் இல்லை. வீட்டில் யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்றார். மறுநாள் காலையில் செந்தில், பால் காய்ச்ச போகிறோம். நீங்கள் எல்லோரும் வந்துவிடனும் என்றார். பின் மீனா, எனக்கும் இந்த விஷயத்திற்கும் சம்பந்தமில்லை. இது எல்லாமே செந்தில் எடுத்த முடிவு தான் என்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

கோமதி, எவ்வளவோ எடுத்துச்சொல்லி புரிய வைக்கப் போனார். ஆனால், செந்தில் கேட்கவில்லை. கோபத்தில் பாண்டியன், அவன் அரசாங்கத்து சம்பளம் வாங்குகிறான். அதனால் அப்படி தான் பேசுவான். நீ வாயை மூடிக்கொண்டு அமைதியாக இரு என்று கோமதியை திட்டினார். உடனே செந்தில், மோசமாக பாண்டியனையும், வீட்டையும் பேசி விட்டார். இதனால் பாண்டியன் ரொம்பவே உடைந்து போய் விட்டார். அதற்குப்பின் மீனா, பாண்டியனை தனியாக சந்தித்து பேசினார்.

சீரியல் ட்ராக்:

அப்போது மீனா, வீட்டை விட்டு வெளியே போக எடுத்த முடிவு செந்தில் தான். அவர் வெளியே போய் கஷ்டப்பட்டால் தான் உங்களுடைய அருமை புரியும் என்றார். அதற்கு பாண்டியன், எப்போதும் உனக்காக நாங்கள் சப்போர்ட் செய்வோம் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் செந்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கோமதியை பார்த்து ட்ராமா செய்கிறாய் என்று செந்தில் சொல்வதால் அவர் ரொம்பவே உடைந்து போய் செந்திலை திட்டி விட்டார்.

https://youtu.be/T0VKsBW-aL0?si=LmZr_S30aS0NOyLI

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் செந்தில்- மீனா இருவருமே தங்களுடைய குவாட்ரசில் கொடுத்திருக்கும் புது வீட்டிற்கு பால் காய்ச்சுகிறார்கள். பாண்டியன் குடும்பத்திலிருந்து எல்லோருமே வந்துவிடுகிறார்கள். ஆனால், பாண்டியன் மட்டும் வரவில்லை. பால் காய்ச்சும் நேரம் பார்த்து பாண்டியன் வருவதால் கோமதி ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் நல்லபடியாக புது வீட்டில் பால் காய்ச்சும் விடுகிறார்கள். அப்போது மீனா-செந்தில் இருவரும் பாண்டியன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்.

behindtalkies AMP · Quick view
View full