புது வீட்டிற்கு குடியேறிய செந்தில்-மீனா, பாண்டியன் வந்தாரா? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 10/10/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சுகன்யா, பழனி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சுகன்யா, நாமும் தனிகுடுத்தனும் போகலாம். உங்கள் அண்ணாவைத் தரும் கடையை பார்த்துக் கொள்ளுங்கள். இங்கு யாரும் உங்களை மதிக்கவில்லை. உங்களிடம் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை என்று எல்லாம் சொல்வதால் பழனி மனம் மாறுகிறது. பின் பழனி, கடையில் மாணிக்கம் சொன்னது எல்லாம் யோசித்துப் பார்த்தார். இன்னொரு பக்கம் பால் காய்ச்சும் போது வீட்டில் வருபவர்களுக்கு சாப்பாடு வாங்கி தருவதற்கு பணம் வேண்டும் என்று மீனாவிடம் சொன்னார். மீனா, எதுவாக இருந்தாலும் நீங்கள் தான் பார்த்துக் கொள்ளணும் என்றார்.

நேற்று எபிசோட்டில் அப்பத்தா, கோமதி குடும்பத்தையும் குமாரின் கல்யாணத்தையும் நினைத்து ரொம்ப எமோஷனலாக அழுது பேசிக் கொண்டிருந்தார். அதற்கு குமார், ஆறுதல் சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் புது வீட்டிற்கு பால் காய்ச்சுவதற்காக எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, பாண்டியனை புது வீட்டுக்கு கூப்பிட்டார்கள். அப்போது பாண்டியன், நான் வரவில்லை. நீங்களே போய் எல்லாம் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அதற்குப்பின் மீனா, தன்னுடைய மாமியாருக்கு தங்க வளையலை பரிசாக கொடுத்தார். அதை பார்த்து செந்திலுக்கு கடுப்பாகிறது. கோமதி ரொம்ப எமோஷனலாக அழுதார். மீனாவிற்கு வீட்டை விட்டு பிரிந்து செல்ல மனமே இல்லை. எல்லோரையும் நினைத்து கவலைப்பட்டார். அதற்குப்பின் புது வீட்டிற்கு எல்லோரும் சென்று விட்டார்கள். பால் காய்ச்சுவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருர்கள். பாண்டியன் மட்டும் வரவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில், இங்கிருந்து வேலைக்கு செல்வது பக்கம் தான். சீக்கிரத்திலேயே பைக் வாங்கி விடுவேன் என்றெல்லாம் பேசுகிறார். அதற்குப்பின் மீனாவின் அப்பா, அம்மா வந்து விடுகிறார்கள். பாண்டியனை தவிர மீதி எல்லோருமே புது வீட்டுக்கு வந்து விடுகிறார்கள். உடனே கோமதி, பால் காய்ச்சும் வேலையை பார்க்கலாம் என்கிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வருவதால் மீனா ரொம்ப சந்தோஷப்படுகிறார். நல்லபடியாக பால் காய்ச்சி விடுகிறார்கள். பின் மீனா, செந்தில் இருவருமே பாண்டியன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, பாண்டியனுமே பதிலுக்கு பணத்தை தருகிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே கிப்ட் தருகிறார்கள். ஆனால், சரவணன்- பழனி மட்டும் தரவில்லை.

சீரியல் ட்ராக்:

இதை பார்த்து தங்கமயில், சுகன்யாவுக்கு கஷ்டமாக இருக்கிறது. அப்போது சுகன்யா, ஒரு கிப்ட் வாங்க கிட்ட காசு இல்லையா? உங்க மச்சான் கிட்ட கேக்க வேண்டியது தானே என்று சொல்கிறார். அதற்கு பழனி, நான் கேட்டேன். அவர்தான் தேவை இல்லை என்று சொல்லிவிட்டார். இன்னொரு பக்கம் தங்கமயில், நாமும் இந்த மாதிரி புது வீட்டுக்கு குடுத்தனம் போகலாமா? என்று கேட்கிறார். அதற்கு சரவணன், நீ படித்து பட்டம் வாங்கி வேலைக்கு போன கதை எல்லாம் வீட்டில் சொல்லு அப்புறம் போகலாம் என்று திட்டி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full