முதல் நாள் வேலைக்கு செல்லும் செந்தில், கோபத்தின் உச்சத்தில் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 8/7/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மீனாவின் அம்மா சொன்ன விஷயத்தை கேட்டு பாண்டியனுக்கு ஷாக் ஆனது. பின் மீனாவின் அப்பா சென்ற பிறகு பாண்டியன், பணம் கொடுத்து தான் இந்த வேலையை வாங்கினாயா? யாரிடம் பணம் வாங்கினாய்? என்று கேட்டார். செந்திலால் எதுவுமே பேச முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோபப்பட்ட பாண்டியன், செந்திலை அடிக்க போனார். உடனே மீனா, நான்தான் லோன் போட்டு பணம் வாங்கித் தந்தேன் என்று சொன்னார். பாண்டியன், அந்த அளவிற்கு நீங்கள் பெரிய மனுஷர்களாகி விட்டீர்களா? என்றார். அதற்கு மீனா, அரசி பிரச்சனையால் தான் சொல்ல முடியவில்லை என்றார். பாண்டியன் அவர்கள் சொல்லும் காரணத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருவரையும் திட்டி விட்டு சென்றார்.

அப்பத்தா, அரசிக்காக நகைகளை கொடுக்கிறார். அதற்கு அரசி, எனக்கு நகையே பிடிக்காது. நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் என்று அப்பத்தாவுக்கு போட்டு விட்டார். அந்த சமயம் பார்த்து பழனி வீட்டிற்கு வந்தார். அரசி, பழனியிடம் தன் குடும்பத்தை பற்றி விசாரித்தார். ஆனால், பழனி அரிசியின் மீது இருந்த கோபத்தில் ஒழுங்காக பேசவே இல்லை. அப்பத்தாவிடம் மட்டும் செந்திலுக்கு கவர்மெண்ட் வேலை கிடைத்திருக்கிற விஷயத்தை சொல்லி சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் தன்னுடைய அண்ணன்கள் வந்தவுடன் பழனி அங்கிருந்து சென்று விட்டார். அப்போது முத்துவேல், குமாருக்காக பார்த்த பெண் வீட்டார் போன் செய்வதால் குமார் திருமணம் ஆன விஷயத்தை சொல்லி விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதை அறிந்த சக்திவேல், பணக்கார வீடு போய்விட்டதே என்று குமாரை புலம்பி திட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த செந்தில்- மீனா இருவருமே நார்மலாக எல்லோரிடம் பேசி இருந்தார்கள். ஆனால், யாருமே சரியாக பேசவில்லை. மீனா, பாண்டியனிடம் பேசி இருந்தார். ஆனால், பாண்டியன் எதுவுமே கண்டுக்கொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் கதிர் ஜாலியாக பேச, அதற்கு செந்திலுமே பதில் கொடுத்தார். இவர்கள் எல்லோரும் பேசுவதை பார்த்து பாண்டியன் கடுப்பாகி சாப்பிடுவதை விட்டு சென்று விட்டார். இதனால் கோமதி கோபப்பட்டு திட்டினார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோடில் மீனா, எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். எல்லாம் மாறும் என்று செந்தில் வேலைக்கு செல்வதற்கு புது துணி எல்லாம் வாங்கி கொடுத்து இரண்டு பேருமே சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் ராஜி, மீனா அக்காவிடம் ஏன் பேச மாட்டேங்கிறீர்கள்? நீங்களும் மாமாவிடம் எங்கள் திருமணத்தையும் மறைத்து தானே வைத்தீர்கள் என்றெல்லாம் கேட்பதால் கோமதியால் எதுவுமே பேச முடியவில்லை. கதிருமே ராஜி பேசியது சரி என்பது போலவே பேசுகிறார். தனக்கு கதிர் சப்போர்ட் செய்து பேசியதால் ராஜி ரொம்பவே சந்தோஷப்பட்டார். மறுநாள் காலையில் கோமதி, செந்தில் வேலைக்கு போகிறான். வீட்டில் இருங்கள் என்று கேட்டார். ஆனால், பாண்டியன் கோபப்பட்டு திட்டி விட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி, நீங்கள் அக்காவிடம் பேசவில்லை என்றால் நீங்கள் செய்த விஷயத்தை வெளியே சொல்லி விடுவேன் என்று பிளாக்மெயில் செய்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் கோமதி, மீனாவிடம் பேசுகிறார். இதனால் மீனா ரொம்ப எமோஷனலாக அழுகிறார். அதற்கு கோமதி, நான் மாமா இருக்கும்போது பேசமாட்டேன். அவர் இல்லாத போது தான் பேசுவேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் செந்தில் வேலைக்கு கிளம்புவதால் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். எல்லோருமே செந்திலை .வழியனுப்பி வைக்கிறார்கள் ஆனால், பாண்டியன் மட்டும் வரவே இல்லை.

சீரியல் ட்ராக்:

இதனால் செந்தில் வருத்தப்படுகிறார். அப்போது வந்த மீனாவின் அப்பா, செந்திலை வழி அனுப்பி வைக்கிறார். இதை எல்லாம் பார்த்து செந்திலும் மீனாவும் சந்தோஷப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன், சரவணன்-பழனி இருவரையுமே திட்டிக் கொண்டிருக்கிறார். கடை வேலையை யார் பார்ப்பது. அவன் என்ன ஒன்னும் தெரியாதவனா? என்றெல்லாம் செந்திலை வெளுத்து வாங்குகிறார். அதற்குப்பின் செந்தில் அப்பாவை பார்க்க வேண்டும் கடைக்கு வண்டியை விடு என்று கதிரிடம் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full