பயத்தில் புலம்பி தள்ளும் மீனா, உண்மை அறிந்து கதிர்-செந்தில் என்ன செய்யப் போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கோயில் திருவிழாவில் ராஜி நடனம் ஆடியதற்கு எல்லோருமே அவரிடம் செல்ஃபி இருந்தார்கள். ஆனால், அங்கிருந்த சில இளைஞர்கள் ராஜியை கிண்டல் அடிக்கும் வகையில் பேசி இருந்தார்கள். இதனால் கொந்தளித்த மீனா அவர்களிடம் சண்டைக்கு போனார். ஓரு வழியாக கோமதி அவர்களை சமாதானம் செய்து அழைத்து வந்து விட்டார். பின் ராஜி, கதிருக்கு போன் செய்து நடன போட்டியில் கலந்து இருப்பதை சொன்னவுடன் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை சதீஷ், அரசிக்கு போன் செய்தார். அரசியும் சதீஷ் இடம் பேச உள்ளே போனார். அரசி ரூமில் யாருக்கும் தெரியாமல் குமார் ஒளிந்து கொண்டிருந்தார்.
குமாரை பார்த்தவுடன் அரசி ஷாக் ஆனார். பின் குமார், நீ எப்படி இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்வாய். நான் விடமாட்டேன். நீ என்னை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று அரசியை கட்டாயப்படுத்தி இருந்தார். பின் அரசி, ரூமுக்குள் கோமதி வந்தார். அப்போது அரசியை குமார் வாயை பொத்தி மிரட்டி இருப்பது தெரிந்தது. உடனே மீனா, ராஜி இருவருமே வந்து விட்டார்கள். இருந்தாலுமே அரசியை குமாரிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. கடைசியில் கோபம் தாங்க முடியாமல் மீனா ஒரு இரும்பு பாத்திரத்தால் குமாரின் தலையில் அடிக்க, அவர் கீழே விழுந்து விட்டார். குமார் பேச்சு, மூச்சு இல்லாமல் விழுந்து கிடந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் குமார் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து இறந்துவிட்டார் என்று மீனா, கோமதி, ராஜி, அரசி நினைத்துக் கொண்டார். பின் எவ்வளவோ குமாரை எழுப்ப முயற்சித்தார்கள். ஆனால், குமார் எழவே இல்லை. இதனால் குமாரின் நிலைமையை நினைத்து ஒவ்வொருவரும் கதறி அழுதார்கள். மீனா, தன்னால் தான் இந்த நிலைமை என்று குற்ற உணர்ச்சியில் பதறி இருந்தார். அதோடு போலீஸ் ஸ்டேஷனில் உண்மையை சொல்கிறேன் என்று மீனா சொன்னார். ஆனால், கோமதி-ராஜி இருவருமே தடுத்து விட்டார்கள்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் ராஜி, கதிருக்கு போன் செய்து குமார் வந்த விஷயத்தையும் அவன் இறந்த விஷயத்தையும் சொன்னார். இதனால் கதிர் ஷாக் ஆகிவிட்டார். அதற்குப்பின் கதிர், இந்த உண்மையை போலீஸிடம் சொல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன், தைரியமாக இருங்கள் என்று ராஜிக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் மீனா, செந்திலுக்கு போன் செய்து குமாரை கொலை செய்த விஷயத்தை சொன்னார். அதை கேட்டவுடன் செந்தில் என்ன சொல்லுவது என்று தெரியாமல் ஷாக் ஆனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, நான்தான் கொலை செய்து விட்டேன். நான் தெரியாமல் செய்தேன். வேண்டுமென்று நான் அவனை அடிக்கவில்லை என்று சொன்னதையே சொல்லி புலம்பி அழுது கொண்டிருக்கிறார். ராஜி, கோமதி அரிசி மூவருமே மீனாவை சமாதியில் செய்தும் அவர் கேட்கவே இல்லை பக்கம் கதிர் செந்தில் இருவரும் மீனா குமாரை அடித்த விஷயத்தை பற்றி பேசி ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். பின் இருவருமே கிளம்பி காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது செந்தில், ஒரு வேலை குமார் இறந்தது உண்மை என்றால் நான் மீனாவை ஜெயிலுக்கு அனுப்ப விட மாட்டேன்.
சீரியல் ட்ராக்:
நானே பழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலுக்கு போய் விடுவேன் என்று சொல்லி ரொம்ப எமோஷனலாக சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். உடனே கதிர், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நாம் நல்லபடியாக எல்லோரும் வீட்டுக்கு வருவோம் என்று ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் கோமதி, நீங்கள் அமைதியாக இருங்கள். நான் ஜெயிலுக்கு போய்விட்டால் அரசி கல்யாணத்தை மட்டும் எப்படியாவது நடத்தி விடுங்கள் என்று எமோஷனலாக பேசுகிறார். அப்போது குமாரின் கையசைவதை ராஜி பார்த்து எல்லோரிடமும் சொல்கிறார். பின் குமாருக்கு பேச்சு மூச்சு இருப்பது தெரிகிறது. இதனால் மொத்த பேருமே ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். பின் ராஜி, இதை செந்தில் கதிரிடம் சொல்ல போன் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.