பாண்டியன் பேச்சை மறுத்த மீனா- ராஜி, மீண்டும் வீட்டில் வெடிக்கும் ப்ரச்சனை? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 31/7/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியல் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலில் பாண்டியன் தன் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். ஆனால், பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு எதிர்பாராத விதமாக காதல் திருமணம் நடந்து விடுகிறது. இதனால் பாண்டியன் ரொம்பவே மனம் உடைந்து விடுகிறார். பின் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார்.

தங்கமயில் வீட்டுக்கு வந்ததிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார். இதனால் பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. ஆனால், தங்கமயில் செய்யும் வேலைகள் மற்ற மருமகளுக்கும், மாமியாருக்குமே பிடிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் இவர் மாமனாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வீட்டில் உள்ள மற்றவர்களை போட்டுக் கொடுத்துக் கொண்டு தேவையில்லாத வேலைகளை செய்கிறார். இன்னொரு பக்கம், செந்தில் தன்னுடைய மனைவிக்காக மாமனார் நினைத்த கனவை நிறைவேற்ற போராடுகிறார். அதே போல் கதிர் எப்படியாவது வீட்டில் சொன்ன பணத்தை கொடுக்க வேண்டும் என்று இரவும் பகலும் பார்க்காமல் விடுமுறை நாட்களில் கூட கார் ஓட்ட செல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதை அறிந்த ராஜு ரொம்பவே வருத்தப்படுகிறார். மேலும், கடந்த வாரம், ஹனிமூன் போக தங்கமயில் போட்ட திட்டத்தால் ஹனிமூன் போக பாண்டியன் ஒத்து கொள்கிறார். பின் கோமதி, ஹனிமூனுக்கு மூன்று ஜோடியையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்ல பாண்டியன் மறுக்கிறார். இதனால் கோமதி கோபமாக பேசி விடுகிறார். மேலும், கதிர் தூங்காமல் இரவில் கண் விழித்து கார் ஓட்டுவதை நினைத்து கோமதி ரொம்பவே வருத்தப்பட்டு பாண்டியன் இடம் சொல்ல வீட்டில் கலவரம் வெடித்தது. வழக்கம்போல் பாண்டியன், கதிரை தீட்டி இருந்தார்.

சீரியல் கதை:

கடைசியில் பாண்டியன், என்னோட கடைக்கு வந்து கதிரை வேலை செய்ய சொல்லு, அதற்கான சம்பளத்தை தருகிறேன் என்று சொன்னார். ஆனால், கதிர் வர முடியாது என்று சொல்லிவிடுகிறார். இதை எல்லாம் எதிர் வீட்டில் இருக்கும் கோமதியின் அம்மா கேட்டு அழுதார். நான் சாவதற்குள் என் மகளிடம் பேச வேண்டும். அதற்கு முடியாதா? என்று புலம்பி அழுதார். அந்த சமயத்தில் வந்த அவருடைய மற்ற இரண்டு மகன்கள், திட்டி அவரை இழுத்து வெளியே தள்ளி விடுகிறார்கள். இதையெல்லாம் பாண்டியன், கோமதி பார்த்து கவலைப்படுகிறார்கள். பின் பஞ்சாயத்து முடிந்து அவருடைய அம்மாவை அவர்களுடைய மகன்கள் கூட்டிக் கொண்டு போனார்கள்.

நேற்று எபிசோட்:

உண்மையை அறிந்த கோமதி தன்னுடைய அம்மாவை நினைத்து அழுகிறார். எல்லோரும் அவருக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன், கோமதியை அவர் அம்மாவிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். நேற்று எபிசோட்டில், ராஜி டியூஷன் எடுப்பதற்கு வீட்டில் பொய் சொல்லி போனார். பின் பாண்டியன், நீங்கள் மூணு பேருமே லீவு கேட்க முடியுமா? சரவணனுடன் ஹனிமூனுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னவுடன் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், தங்கமயில் மட்டும் அதிர்ச்சியாகி கோவப்பட்டு நிற்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், சரவணன் ரொம்ப சந்தோஷப்படுகிறார். தங்கமயில், நாங்கள் சென்னை போகிறோம் என்று சொல்லிவிடுகிறார்.

இன்றைய எபிசோட்:

அதற்குப் பின் ரூமில் ஒவ்வொரு ஜோடியும் ஹனிமூன் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சரவணன் ரொம்ப சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து தங்கமயில், நாம் தனியாக போகலாமா? என்று கேட்டதற்கு வேணாம், எல்லாரும் ஒன்றாக போகலாம் என்று சொல்லிவிடுகிறார். தங்கமயில் எதுவும் பேசாமல் அமைதியாகி விடுகிறார். மற்ற இரண்டு ஜோடிகளும் ஹனிமூன் போக வேண்டாம் என்று முடிவு செய்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில், ஹனிமூனுக்கு மூன்று ஜோடிகளும் போவார்களா? வீட்டில் கலவரம் வெடிக்குமா? பாண்டியன் என்ன செய்யப்போகிறார்? போன்ற விறுவிறுப்பான கட்டத்தில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full