குமாருடன் ஊர் சுற்றும் அரசி, பழனியிடம் ருத்ர தாண்டவம் ஆடும் சுகன்யா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 6/3/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' பயிற்சி எடுக்க நேரமாகிவிட்டது என்று கதிர், ராஜியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வர, அதை பற்றி கவலை கொள்ளாமல் ராஜியை கதிர் அழைத்துக் கொண்டு போனார். இதையெல்லாம் பார்த்து பாண்டியனுக்கு கோபம் வந்து கோமதி இடம் திட்டி இருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயில், வேலைக்கு போனார். வேலைக்கான உடை அணிந்து கொண்டு வேலை செய்யுமா என்று ஓனர் திட்டி இருந்தார். பின் சாப்பிட்ட இடத்தை கிளீன் செய்ய சொல்ல, தங்கமயில் ரொம்ப வேதனை அடைந்தார்.

பாண்டியனை சந்தித்து தங்கமயில் வேலை பற்றி அவர் அம்மா பேசினார். உடனே பாண்டியன், பெண்கள் வேலைக்கு போவது நல்லது தானே. சொந்தக்காலில் நிற்பது தான் அவர்களுக்கு மரியாதை என்று சொல்ல, அவர்களால் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். இன்னொரு பக்கம் மீனாவின் அப்பா, உங்களால் இனிமேல் படித்து வேலைக்கு போவது என்பது கஷ்டமான விஷயம். நீங்கள் பணம் கொடுத்து வேலைக்கு சென்று விடுங்கள். 10 லட்சம் கொடுத்தால் கவர்மெண்ட் வேலை ரெடியாக இருக்கிறது என்று சொன்னவுடன் மீனா ஷாக் ஆனார். செந்தில் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் செந்தில்- மீனா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, எப்படி பணத்தை ரெடி பண்ண முடியும். நீங்கள் எதற்கு ஒத்துக் கொண்டீர்கள். இரண்டு மூன்று முறை தேர்வு எழுதினால் கண்டிப்பாக பாஸாகி விடலாம் என்று சொன்னார். அதற்கு செந்தில், ஒவ்வொரு நாளும் அப்பாவிடம் பணத்திற்காக கைகட்டி நிற்க முடியாது. எனக்கு என்று தனி சம்பளம் வேண்டும் என்று சொன்னார். இன்னொரு பக்கம் தங்கமயிலின் நிலைமையை நினைத்து அவருடைய அம்மா- அப்பா இருவரும் ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் தங்கமயில், ஹோட்டலில் வேலை தெரியாமல் செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து அந்த ஓனர் திட்டி இருந்தார். உடனே தங்கமயில் பயத்தில் பரபரப்பாக வேலை செய்தார். இன்னொரு பக்கம் படம் பார்ப்பதற்கு சுகன்யா ரெடியாகி பழனிக்கு போன் பண்ணி அழைத்தார். அதற்கு பின் பழனி, பாண்டியன் இடம் அனுமதி வாங்கி போனார். ஆனால், பாண்டியன் டிக்கெட்டுக்கு மட்டும் காசு கொடுத்து அனுப்பி இருந்தார். இதையெல்லாம் பார்த்து செந்திலுக்கு கோபம் வந்தது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசி- குமார் இருவரும் பேசி கொண்டு இருக்கிறார்கள். யாராவது பார்த்து விடுவார்களோ என்று அரசி பயப்படுகிறார். ஆனால், குமார் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் அரசியை அழைத்து கொண்டு பைக்கில் ஊர் சுற்றுகிறார். அந்த வழியாக பைக்கில் பழனி-சுகன்யா வருகிறார்கள். உடனே அரசி ஒழிந்து கொள்கிறார். ஆனால், சுகன்யா பார்த்து விடுகிறார். பின் பயத்தில் அரிசி வீட்டிற்கு வந்து விடுகிறார். அப்போது கோமதி, ஏன் இவ்வளவு? என்று கேட்க, ஏதேதோ சொல்லி அரசி சமாளிக்கிறார். இருந்தாலுமே கோமதிக்கு அரசி மீது சந்தேகம் வருகிறது.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் பழனி, சுகன்யாவை தியேட்டருக்கு அழைத்து செல்கிறார். அது சின்ன தியேட்டர் என்பதால் சுகன்யா அங்கேயே சண்டை போடுகிறார். பழனி எடுத்து சொல்லியும் சுகன்யா கேட்கவே இல்லை. அதோடு பழனியிடம் 500 ரூபாய் தான் இருக்கிறது என்று சொன்னவுடன் பொது இடத்திலேயே ருத்ர தாண்டவம் ஆடி, சினிமாவே வேண்டாம் என்கிறார். பின் பழனி அண்ணன்கள் வீட்டிற்கு சென்ற சுகன்யா, தியேட்டருக்கு சென்ற கதையை சொல்கிறார். உடனே அவர்கள் பாண்டியன் குடும்பத்தை மோசமாக பேசுகிறார்கள். பழனிக்கு பயங்கரமாக கோபம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full